மிக அரிதான சம்பவம்! தமிழக அரசியலில் 25 வருடங்களுக்கு பின் நடந்த அதிசயம்! ஸ்டாலினின் அசத்தல் சாய்ஸ்
சென்னை: தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். என்.முருகானந்தம் தேர்வு என்பது சாதாரணமாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியை தலைமை செயலாளராக தேர்வு செய்வது போல கிடையாது.. அவரின் தேர்வு ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட் ஆகும்.
தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக ஐஏஎஸ் முருகானந்தம் நியமிக்கப்பட்டு உள்ளார். பழுத்த அனுபவம் கொண்ட இவர் பல துறைகளில் பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. என்னென்ன பொறுப்புகளை வகித்தார்: பழுத்த அனுபவம் கொண்ட இவர் பல துறைகளில் பணிகளை மேற்கொண்டு உள்ளார்.
ஐஏஎஸ் தேர்வில் நேரடியாக வெற்றி பெற்று பணிக்கு வந்தவர் . இவர் 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச். நேரடியாக தமிழக கேடர். விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராக கொரோனா காலத்தில் கூடுதல் பொறுப்பில் என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். அப்போது பணிகளை சிறப்பாக்ஸ் செய்தார்.
எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது நிதித்துறை செயலாளராக இருந்தார். இவர்தான் ஸ்டாலின் ஆட்சியின் முதல் பட்ஜெட்டை தயார் செய்தார்.
அசத்தல் தேர்வு: முன்னதால் 1999ல் ஏ.பி.முத்துசாமி ஐ.ஏ.எஸ்-க்குப் பிறகு, தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பதவியேற்ற இரண்டாவது தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்.முருகானந்தம் ஐ.ஏ.எஸ் ஆவர். கடந்த முறை முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலும், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் காலத்திலும் மட்டுமே இது நடந்து உள்ளது. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இந்த அரசியல் ஸ்டேட்மென்ட் தமிழ்நாட்டில் சாத்தியம் ஆகி உள்ளது.
பின்னணி: முருகானந்தம் சென்னைக்காரர்.. ஸ்டாலினின் குட் புக்கில் இருப்பவர். இவர் சிறப்பாக செயல்படுவதாக சமீபத்தில் அமைச்சர் பிடிஆர் கூட பாராட்டி இருந்தார். முன்பு முதல்வரின் தனி செயலாளர் பொறுப்பில் உதயசந்திரன் இருந்தார்.. உதயசந்திரன் அதன்பின் நிதித்துறை செயலாளர் பொறுப்பிற்கு மாற்றப்பட்டு அவரின் இடத்திற்கு முருகானந்தம் ஐஏஎஸ்ஸை கொண்டு வந்தனர்.
முருகானந்தம் ஐஏஎஸ் 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிஜி கணினி அறிவியல், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்புகளை இவர் படித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அதோடு பிடிஆர் நிதி அமைச்சராக இருந்த போது அவருக்கு கீழ் இவர் செயலாளராக இருந்தார். கிட்டத்தட்ட இவர்தான் பிடிஆரின் ரைட் ஹேண்ட். பட்ஜெட்டை உருவாக்கியதில் கடந்த 2 வருடங்களில் இவரின் பங்கு முக்கியமாக கருதப்பட்டது.
பிடிஆரே இவரை அழைத்து பாராட்டும் அளவிற்கு இவரின் பணி சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர் ஆக உள்ளார். விரைவில் தலைமை செயலாளர் ஆக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை மாற்றும், ஸ்டாலின் வெளிநாடு பயணம், உதயநிதி ப்ரோமோஷன் உள்ளிட்ட பல விஷயங்கள் கிசுகிசுக்கப்படுவதால்.. முருகானந்தன் சார்ஜ் எடுத்தது கவனம் பெற்றுள்ளது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications