பாதியில் கிளம்பி போன வீரர்! ப்ச் முன்னாடி பண்ணி இருக்கலாமே! கொதிக்கும் சிஎஸ்கே.. தோனி என்ன பண்ணுவாரு
சென்னை: சிஎஸ்கே அணியின் முக்கியமான ஒரு வீரர் சரியாக ப்ளே ஆப் சமயத்தில் அணியில் இருந்து வெளியேறுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிஎஸ்கே அணி ப்ளே ஆப் செல்ல போராடிக்கொண்டு இருக்கும் நிலையில்தான் அணியில் இருக்கும் முக்கியமான வீரரான பென் ஸ்டோக்ஸ் நாட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிராக நடக்கும் போட்டிக்கு பின்பாக அவர் நாட்டிற்கு திரும்பி செல்வார். சிஎஸ்கே அணி ப்ளே ஆப் ஆடினாலும் கூட இவர் சிஎஸ்கே அணியில் இடம்பெற மாட்டார்.
சிஎஸ்கே அணியில் கேப்டன் மெட்டீரியலாக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ். ஆனால் அவர் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. அவர் காயம் காரணமாக களமிறங்கவில்லை. வாய்ப்பு கிடைத்த போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை.
தொடக்கத்தில் சில போட்டிகளில் ஆடியவர் மோசமாக சொதப்பினார். இவருக்கு 16 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. தோனி - ஸ்டோக்ஸ் காம்போ பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக இவரால் ஆட முடியவில்லை. இதுவே சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பியது .
இங்கிலாந்து வீரர்களாக ஆர்ச்சர், பில்லிங்ஸ் போன்றவர்கள் இதேபோல் காயம் என்று கூறி பாதியில் வெளியேறும் சம்பவங்களும் கூட ஐபிஎல் தொடரில் அடிக்கடி நடக்கிறது. அதில் சிஎஸ்கே அணியில் தற்போது ஸ்டோக்ஸ் இணைந்துள்ளார். அடுத்த சீசன் இவர் இருப்பாரா என்பதே சந்தேகம். அதனால் சிஎஸ்கே அணிக்கு அவரை கேப்டனாக போடுவது பற்றி யோசிப்பதும் ரிஸ்க்.

ஊருக்கு செல்கிறார்: இந்த நிலையில்தான் சரியாக சிஎஸ்கே அணி ப்ளே ஆப் செல்ல போராடிக்கொண்டு இருக்கும் நிலையில்தான் அணியில் இருக்கும் முக்கியமான வீரரான பென் ஸ்டோக்ஸ் நாட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்துள்ளார்.
காயம் காரணமாக அவர் ஊருக்கு செல்கிறார். டெல்லி அணிக்கு எதிராக நடக்கும் போட்டிக்கு பின்பாக அவர் நாட்டிற்கு திரும்பி செல்வார். சிஎஸ்கே அணி ப்ளே ஆப் ஆடினாலும் கூட இவர் சிஎஸ்கே அணியில் இடம்பெற மாட்டார்.
இவரின் இந்த முடிவால் சிஎஸ்கே ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள். இவர் காயம் வந்த போதே வெளியேறி இருந்தால் அணி மாற்று வீரரை இந்த சீசனுக்கு எடுத்து இருக்கும். மாற்று வெளிநாட்டு வீரரை கொண்டு வந்து இருக்கலாம்.
அது அணிக்கு சாதகமாக மாறி இருக்கும். சிஎஸ்கேவில் மொயின் அலி நன்றாக ஆடாத நிலையில் பென் ஸ்டோக்ஸுக்கு ஒரு மாற்று வீரர் இருந்தால்.. மொயின் அலி இடத்தில் அவ்வப்போது இறக்கி இருக்கலாம். மொயின் அலி சென்னை போன்ற நல்ல ஸ்பின் பிட்சில் கூட அவரால் சரியாக ஆட முடியவில்லை. அவரின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே மோசமாக உள்ளது.
ஸ்டோக்ஸ் மட்டும் முன்பே போய் இருந்தால் வேறு ஒரு மாற்று வீரரை கொண்டு வந்திருக்க முடியும்.
ஆனால் ஸ்டோக்ஸ் இந்த லீக் முழுக்க இருந்துவிட்டு.. இப்போது முக்கிய நேரத்தில் கிளம்பி செல்கிறேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பு: இப்போது தோனி இவருக்கு மாற்று வீரரை தேட வேண்டும். ஆனால் சிஎஸ்கே வட்டாரத்தில் விசாரித்ததில் சிஎஸ்கே அணி மாற்று வீரரை தேட வாய்ப்பு இல்லை. இருக்கின்ற வீரர்களை வைத்தே தோனி விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications