ஸ்டாலின் ரொம்ப ஸ்பீடு.. அதிரடி டிரான்ஸ்பர்களுக்கு பின் இப்படி ஒரு காரணமா? அரண்டு போன அதிமுக, பாஜக
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், செயலாளர்கள் மாற்றம் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைகளுக்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆட்சியர்கள் கூட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருப்பூர் கலெக்டர் வினித், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த விவேகானந்தன், கைத்தறி ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் சுப்புலட்சுமி, வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குநர் வினய், தொழில் நுட்பகல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அர்ச்சனா பட்நாயக், ஆசிரியர் தேர்வாணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பத்திரப்பதிவுத்துறை ஐஜி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன், வேளாண்மை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, சர்வ சிக்ஷா அபியான் திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் கஜலட்சுமி, உள்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
எழுது பொருள் அச்சுத்துறை ஆணையராக இருந்த சுகந்தி, அருங்காட்சியக ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் பதவிவாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநர் கோவிந்தராவ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு மின்ஆளுமை நிறுவன இணை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஈரோடு கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, நிதித்துறை இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அமைச்சர்கள் மாற்றம்: சமீபத்தில்தான் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: அதன்பின் தனக்கு நெருக்கமான அதிகாரி உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோரை கூட ஸ்டாலின் மாற்றினார். அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதும் எதிர்பார்த்தது போலவே உயர் அதிகாரிகள் மாற்றமும் நடந்தது.
அதன்படி முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அடுத்து யார்?
இது போக தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் மாற்றப்பட உள்ளார். இவர் இந்த பொறுப்பிற்கு கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் முடிய உள்ளது. இந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. அந்த வகையில்தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது 5 பேர் கொண்ட லிஸ்டை எடுத்து இருக்கிறாராம்.
அதேபோல் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பதவிக்காலம் முடிய உள்ளது.. லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமி ஐபிஎஸ் பதவிக்காலம் முடிந்துவிட்டது.
இவர்களுக்கு மாற்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
ஏன் மாற்றம் : முதல்வர் ஸ்டாலினின் இந்த அதிரடிக்கு நடவடிக்கைகள் அதிகாரிகளை விட அதிமுக, பாஜக தரப்பை அதிர வைத்துள்ளதாம். ஏனென்றால் அதிமுக தரப்பிற்கு இத்தனை நாட்கள் தகவல் கொடுத்து வந்த சில டாப் அதிகாரிகள் அப்படியே ஒதுக்கப்பட்டு சிறிய துறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
அதேபோல் வெளியே இருக்கும் சில அரசியல் ஆலோசகர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சீக்ரெட்டுகளை சிலர் கசியவிட்டு உள்ளனர். அவர்ளையும் கட்டம் கட்டி இருக்கிறார் ஸ்டாலின்.
இதெல்லாம் போக 2024 லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தல் இரண்டையும் மனதில் வைத்தே முதல்வர் ஸ்டாலின் இந்த மாற்றங்களை செய்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று 2 வருடம் ஆகிவிட்டது.
இப்படிப்பட்ட நேரத்தில் தேர்தலில் வெற்றிபெற வசதியாக, பணிகளை செய்ய வசதியாக இந்த மாற்றங்களை முதல்வர் ஸ்டாலின் செய்கிறாராம்.
அதேபோல் 2024 லோக்சபா தேர்தலுக்காக புதிய நம்பிக்கையான போலீஸ் அதிகாரிகளை உயர் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்று ஸ்டாலின் இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளாராம். ஸ்டாலினின் இந்த வேகமான பிளானை பார்த்து அதிமுக, பாஜக தரப்பும் வரும் நாட்களில் தேர்தல் பணிகளை தொடங்கும் என்கிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications