கவனிச்சீங்களா.. பேச்சுக்கு இடையில் தோனி நைசாக சொன்ன விஷயம்.. அப்போ இதுதான் முடிவா தல? போச்சே!
சென்னை: நேற்று நடந்த குஜராத் போட்டிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கொடுத்த பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
நேற்று குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே டாஸ் தோல்வி அடைந்த நிலையில், சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து களமிறங்கிய தொடக்கத்தில் இருந்தே ருத்துராஜ் அதிரடியாக பேட்டிங் செய்தார். 44 பந்துகள் பிடித்த அவர் 7 பவுண்டரி, 1 சிக்ஸ் என்று அதிரடியாக ஆடி 60 ரன்கள் எடுத்தார். 136.36 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி இருந்தாலும் கூட அவரின் தொடக்கம் சிஎஸ்கே அணிக்கு நல்ல அஸ்திவாரத்தை கொடுத்தது.
இன்னொரு பக்கம் கான்வே 34 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் ஜடேஜா 16 பந்தில் 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்தார்.

இதனால் சிஎஸ்கே அணி 20 இவரில் 172-7 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணி:இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் இருந்தே சீராக விக்கெட்டுகளை இழந்து வந்தது.
11 பந்தில் வெறும் 12 ரன்கள் எடுத்து சாகா அவுட் ஆனார். ஒன் டவுன் இறங்கிய ஹர்திக் பாண்டியா 7 பந்தில் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல் தசுன் ஷானகா 16 பந்தில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
மில்லர், விஜய் சங்கர் தலா வெறும் 4 மற்றும் 14 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். ரஷீத் கான் மட்டும் 2 சிக்ஸ், 3 பவுண்டரி என்று 16 பந்தில் 30 ரன்கள் எடுத்து பிரஷர் கொடுத்தாலும் கடைசியில் அவனும் அவுட்டாக வெற்றி சிஎஸ்கே வசமானது. கில் மட்டும் அதிரடியாக 38 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். சாகர், தீக்சனா, பத்திரனா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதன் மூலம் 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அதிரடியாக பைனல்ஸ் சென்றுள்ளது.

தோனி பேச்சு:இந்த போட்டிக்கு பின்பாக சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில், ஐபிஎல் மிகப் பெரியது, மற்ற தொடர்களை போல இந்த தொடரின் இறுதிப் போட்டி என்பது சாதாரண விஷயம் கிடையாது. முன்பெல்லாம் 8 முன்னணி அணிகள், இப்போது அது 10 அணிகள் ஆகிவிட்டது
இதனால் தொடர் பெரிதாகிவிட்டது. இதனால் இப்போது நாங்கள் ஆடப்போகும் இறுதிப் போட்டி சாதாரண இறுதிப்போட்டி கிடையாது. இந்த வெற்றிகள் எல்லாம் எண்களின் 2 மாத கடின உழைப்பு. இதற்கு அனைவரும் பங்களித்துள்ளனர். ஆனால் பேட்டிங் செய்வதில், மிடில் ஆர்டருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
குஜராத் ஒரு அற்புதமான அணி, அவர்கள் நன்றாக சேசிங் செய்தனர். அவர்களின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளது. எனவே அவர்களை முடிந்த அளவு ரன்களை அடிக்க விடாமல் கட்டுப்படுத்தி கடைசி வரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
அது நடந்து விட்டது. நாங்கள் டாசில் தோல்வி அடைந்தது கொஞ்சம் பின்னடைவுதான். ஜட்டுவுக்கு மைதானத்தில் சாதகமான சூழ்நிலைகள் கிடைத்தால் அவர் எளிதாக விக்கெட்டுகளை எடுப்பார். மைதானம் அவருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவரை அடிப்பது மிகவும் கடினம். அவரது பந்துவீச்சுதான் ஆட்டத்தை மாற்றியது.
ஜடேஜா - மொயீன் இருவரும் அமைக்கும் கூட்டணி சிறப்பாக உள்ளது. ஒரு வேகப்பந்து வீச்சாளரின் பலம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின் அவருக்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். எங்கள் வீரர்களுக்கு முடிந்த வரை நம்பிக்கையை அளிக்க முயற்சிக்கிறோம்,. அதன் மூலம் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
"கொஞ்சம் உங்கள் பந்துவீச்சை ஆராய முயற்சி செய்யுங்கள்' என்றும் அவர்களிடம் கூறுகிறோம். முடிந்தவரை அவர்களை ஊக்குவிக்க முயற்சிக்கிறோம். பிராவோ மற்றும் எரிக் போன்றவர்கள் பவுலர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
நான் பிட்சை பார்ப்பேன். அதற்கு ஏற்ப வியூகத்தை மாற்றுவேன். சமயத்தில் நான் மிகவும் எரிச்சலூட்டும் கேப்டனாக இருப்பேன், பீல்டர்களை 2-3 அடிக்கு மாற்றிக்கொண்டே இருப்பேன். ஃபீல்டர்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள், மைதானத்தில் இருக்கும் போது கேட்ச் விட்டால் கூட பரவாயில்லை.. என்னை பார்த்துக்கொண்டே இருங்கள். அதுதான் முக்கியம். கேட்ச் விட்டால் கூட கோபம் அடைய மாட்டேன்.

ஆனால் என்னை பார்க்காமல் இருக்காதீர்கள், என்று கூறினார்.
ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் சொன்ன தோனி.. அதை பற்றி எல்லாம் முடிவு செய்ய 8-9 மாதங்கள் உள்ளன. இப்போது ஏன் அந்த தலைவலியை பற்றி யோசிக்க வேண்டும். இடையில் சிறிய ஐபிஎல் ஏலம் உள்ளது. அதனால் பார்க்கலாம். விளையாடும் வீரராகவோ அல்லது நிர்வாகியாகவோ சிஎஸ்கே அணியுடன்தான் எப்போதும் இருப்பேன், என்று தோனி கூறியுள்ளார்.
என்ன சொன்னார்?தோனி தனது பேச்சில் சிஎஸ்கே அணியில் நிர்வாகியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கூறியுள்ளார். அதோடு இல்லாமல், இடையில் சிறிய ஐபிஎல் ஏலம் உள்ளது என்றும் கூறி உள்ளார். அவரின் இந்த பேச்சு பெரிய அளவில் விவாதம் ஆகி உள்ளது.
இடையில் சின்ன ஏலம் உள்ளது என்று அவர் கூறுவதால்.., தனக்கு பதில் கேப்டனாக வேறு வீரரை தோனி எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது மினி ஏலத்தில் கேப்டன் ஆக தகுதி உள்ள வீரர்கள் அல்லது வெளிநாட்டு வீரர்களை உள்ளே கொண்டு வர தோனி திட்டமிட்டு உள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications