'கிளைமாக்ஸ்".. சட்டென முடிவெடுத்த எடப்பாடி பழனிசாமி.. "அவரை" மீட் பண்ண போறாராமே.. திமுக சமாளிக்குமா?
: எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் புது வியூகத்தை கையில் எடுக்க போகிறாராம்
சென்னை: சமீபத்தில் கோர்ட் தீர்ப்பு வெளிவந்து இத்தனை நாட்கள் ஆன நிலையில், பொதுச்செய
சென்னை: ஒருபக்கம் திமுக, மறுபக்கம் சசிகலா, இதற்கு நடுவில் ஓபிஎஸ்.. ஒரே கல்லில் மொத்தம் 3 மாங்காய்களை அடிக்க போகிறார் எடப்பாடி பழனிசாமி.. எங்கே? எப்படி? எப்போது? ஏன்? என்று பாருங்கள்.
பொதுச்செயலாளர் குறித்த கோர்ட் தீர்ப்பு வந்தபிறகு, மேல்முறையீடு செய்ய போவதாக சசிகலா அறிவிப்பார் என்று எடப்பாடி தரப்பு நிஜமாகவே எதிர்பார்க்கவில்லையாம்.
எனவே, அதற்கு செக் வைக்க வேண்டிய கட்டாயம் அதிமுக மேலிடத்துக்கு உடனடியாக எழுந்துள்ளது.. அதுமட்டுமல்ல, அதிமுகவின் 30 எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் தட்டி தூக்க போவதாக, செய்திகள் கசிந்துவிடவும், எடப்பாடியே நேரடியாக மும்முரமாக இறங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

எடப்பாடிக்கு டென்ஷன்
ஜெ.இருந்தபோது, மொத்தம் 61 எம்எல்ஏக்கள் இருந்தனர்.. இதே வாக்குவங்கியை இப்போதுவரை எடப்பாடி பழனிசாமி தக்க வைத்து வருகிறார்.. அதாவது கட்சியை பலமாக இறுக்கி பிடித்து தன்னுள் வைத்துவருவதே இவரது சக்சஸ் ஆகும்.. இவர்கள்தான் எடப்பாடிக்கான பலமாகவும் இன்றுவரை உள்ளனர்.. அதேசமயம், இவர்களில் யாருமே சசிகலா பக்கம் தாவிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் எடப்பாடி பழனிசாமிக்கு அகிமாகவே உள்ளது.. அதனால்தான், பொதுச்செயலாளர் பதவி விஷயத்தில் மீண்டும் ஆர்வம் காட்டபோவதாக 4 நாட்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தன.

எடப்பாடி பழனிசாமி
இப்போதைக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தாலும், கட்சியை மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு என்று எடப்பாடி ஆழமாகவே நம்புவதாக தெரிகிறது.. அதற்கான முதல் அதிரடியைதான் தற்போது கையில் எடுத்துள்ளார்... அதன்படி, கிராமம் கிராமமாக சென்று அதிமுகவை பலப்படுத்த போகிறாராம் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் உள்கட்சி தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று உள்ள நிலையில், சூட்டோடு சூடாக இந்த முடிவை எடப்பாடி எடுத்துள்ளார்...

ஆலோசனை
இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கிஉள்ளார்.. அவரது பிறந்த நாளையொட்டி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் இருந்து வரும் அரசியல் கட்சியினர் அவரது வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.. வாழ்த்து சொல்ல வரும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனையும் நடத்தி கொண்டுதான் இருக்கிறார்..

எடப்பாடி பழனிசாமி
அப்போது மேல்சபை எம்பி வேட்பாளர்களாக யாரை அறிவிப்பது உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி விவாதித்து வருகிறாராம். அதுமட்டுமல்ல, இன்னும் 2 வருடங்களில் எம்பி தேர்தல் வர உள்ளதால், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி வாரியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இது குறித்தும் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது..

ஹாட் டாபிக்
அதைவிட இன்னொரு ஹாட் டாபிக் உள்ளது.. பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி சென்னை வரபோகிறார்.. அப்போது ஸ்டிரைட்டாக அவரையே சந்தித்து ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளாராம்.. கையோடு திமுக பற்றின புகார் லிஸ்ட் ஒன்றையும் கொண்டுபோக போகிறாராம்.. ஆக மொத்தம் திமுகவுக்கு ஒருபக்கம் செக் வைக்க போகிறார் என்றாலும், இதில் ஓபிஎஸ் ரோல் என்ன என்பதும் நமக்கு குழப்பமாகவே உள்ளது.. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications