கலைந்து போன ஆசை.. எடப்பாடி கண் முன் நிற்கும் "அக்னி பரீட்சை".. சூழ்நிலை மோசமாம்.. என்னாச்சு?
சென்னை: எடப்பாடி ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கும் என்று ஆசையாக இருந்தார். அந்த ஆசை எல்லாம் பேராசையாகி.. நிறைவேறாத ஆசையாகிவிட்டது. அதனால் இப்போது லோக்சபா தேர்தலில் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். அவரின் இந்த பேட்டி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி: எடப்பாடி இப்போது இஸ்லாமியர்களை ஆதரித்து பேசுகிறார். இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் அதெல்லாம் கூட்டணியில் மீண்டும் இணையும் போது நடக்காது. பாஜக உடன் மீண்டும் எடப்பாடி கூட்டணி வைக்க வேண்டிய நிலைமை வரலாம் என்று நான் நினைக்கிறன்.
அதனால்தான் இப்போது எடப்பாடி பாஜகவை பற்றி பேச கூடாது. பாஜகவை எதிர்க்க கூடாது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். மீண்டும் கூட்டணி தேவைப்பட்டால் டெல்லி பாஜக எடப்பாடியை அணுகும். கூட்டணி வேண்டும் என்றால்.. அண்ணாமலையை ஆப் செய்யும் . இல்லையென்றால் கூட்டணி இல்லாமல் செல்லும். பெரும்பாலும் இவர்கள் கூட்டணி வைப்பார்கள் என்றே தோன்றுகிறது.
அண்ணாமலை எதுவும் சொல்ல முடியாது: கூட்டணி விஷயங்களில் அண்ணாமலை எதுவும் சொல்ல முடியாது. வேண்டும் என்றால் எடப்பாடி சொன்னால் அதை அண்ணாமலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்ணாமலை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றால் அவர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவருக்கு வேறு வழியில்லை.
கூட்டணி மீண்டும் சேருவார்கள் என்றே நினைக்கிறேன். லோக்சபா தேர்தல் நேரத்தில் இந்த பிரச்சனை மீண்டும் சூடு பிடிக்கும். அதுவரை இஸ்லாமியர்களை காக்கா பிடிக்க எடப்பாடி முயற்சி செய்வார். இஸ்லாமியர்களை வைத்து திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த, சமயங்களில் திமுக கூட்டணி கட்சிகளை உடைத்து வெளியே கொண்டு வர அவர் முயற்சி செய்வார்.
எடப்பாடி பிளான் என்ன?: இரண்டு கட்சியிலும் நிர்வாகிகள் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். இவர்கள் தனி தனியாக கூட்டணி அமைத்தாலும் வெற்றிபெறும் அளவிற்கு கூட்டணி இருக்காது. அதிமுக தனியாக கூட்டணி அமைத்தாலும் அது வெற்றிபெறும் கூட்டணியாக இருக்காது. பாஜகவிற்கு அதேதான். அவர்கள் பாமக, தொடங்கி பலருடன் கூட்டணி வைத்தாலும் வெற்றி கிடைக்காது. எனவே இரண்டு கூட்டணியிலும் நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
சிறுபான்மையினர் வாக்குகள் வலிமையாக திமுக பக்கம் செல்கிறது. திமுகவின் இந்த கப்பல் வலிமையாக இருக்கிறது. இந்த கப்பலில் ஓட்டை போட வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். சிறுபான்மையினர் வாக்குகளை உடைக்க வேண்டும் என்று அவர் திட்டம் போட்டுள்ளார். இதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்.
பல நாள் இருக்கிறது: எடப்பாடி ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கும் என்று ஆசையாக இருந்தார். அந்த ஆசை எல்லாம் பேராசையாகி.. நிறைவேறாத ஆசையாகிவிட்டது. அதனால் இப்போது லோக்சபா தேர்தலில் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார். எப்படியாவது அதிக இடங்களில் அவர் லோக்சபா தேர்தலில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக கூட நிலைமை மாறும்.

இந்த லோக்சபா தேர்தல் அவருக்கு அக்னிபரீட்சை போல இருக்கும். அதனால் எடப்பாடி பழனிசாமி இதில் எப்படியவாது வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications