கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி.. இனி ஒருபோதும் சாத்தியமில்லை.. மக்கள் அறிய வேண்டிய விவரம்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் காலங்களில் "ஐந்து சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி" என்ற வாக்குறுதி வருகிறதா என்று தான் மக்கள் பார்ப்பார்கள். அதற்காகவே கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்தவர்கள் அதிகம். ஆனால் கடந்த 2021 முதல் 2026 வரை கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்கு கீழ் அல்லது 3 சவரனுக்கு கீழ் வழங்கப்பட்ட நகைக்கடன் எவ்வளவு தெரியுமா? எந்த அரசாலும் இனி கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை.. ஏன் தெரியுமா? புள்ளி விவரங்களை முழுமையாக பார்க்கலாம்
தமிழ்நாட்டில் எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் கூட்டுறவு வங்கிகளில் தங்க நகையின் பேரில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்று மக்கள் எதிர்பார்ப்பது அதிகமாக உள்ளது. ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வர விரும்பினாலும் அறிவிக்கும் திட்டமாக நகைக்கடன் தள்ளுபடி இருக்கிறது. அதனை கட்சிகளும் ஆட்சிக்கு வந்த உடன் செய்திருக்கின்றன.

அதன்படி 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இதன்படி சுமார் ₹6,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. சுமார் 14.50 லட்சம் பேருக்கு அரசு கடனை தள்ளுபடி செய்தது. அதேநேரம் சுமார் 35 லட்சம் பேர் தகுதியற்றவர்களாக நீக்கப்பட்டனர். அவர்கள் கடனை கட்டிக்கொண்டு தான் உள்ளார்கள்.
தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கான ₹6,000 கோடி பணத்தை தமிழக அரசு தவணை முறையில் கூட்டுறவு வங்கிகளுக்குத் தொகையை வழங்கி வந்தது. இதில் வட்டி நிலுவை மட்டுமே சுமார் ₹400 கோடிக்கும் மேல் இருந்தது. ஆனால் இனிமேல் தங்க நகையை அடகு வைத்தவர்களுக்கு தள்ளுபடி என்பது எந்த அரசு அமைந்தாலும் இனி சாத்தியமேல்லை. அதற்கு மூன்று காரணங்களை பார்ப்போம்.
வங்கிகளின் நிதி நெருக்கடி
பொதுவாக கூட்டுறவு வங்கிகள் என்பவை லாப நோக்கமற்றவை என்றாலும், அவை சுயமாக இயங்க வேண்டியவையாகும். கடந்த முறை செய்யப்பட்ட தள்ளுபடித் தொகையை அரசு வங்கிகளுக்கு முழுமையாகக் கொடுக்கவே பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இதனால் வங்கிகளின் சுழற்சி நிதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2026 நிலவரப்படி, பல கூட்டுறவு சங்கங்கள் டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டி கொடுக்கக் கூடத் திணறி வருவதாக கூறப்படுகிறது.
கணினிமயமாக்கல்
2021-க்கு முன்பு வரை கூட்டுறவு வங்கிகளில் ஒரு நபர் பல்வேறு பெயர்களிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு சங்கங்களிலும் கடன் பெற்று தள்ளுபடி பெற்றனர். ஆனால் இப்போது அனைத்து கூட்டுறவுச் சங்கங்களும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளதால், ஒரு நபர் ஒருமுறைக்கு மேல் கடன் தள்ளுபடி பெறுவது தொழில்நுட்ப ரீதியாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. அரசு இப்போது 'புள்ளிவிவரங்களை' விரல் நுனியில் வைத்துள்ளதால், முறைகேடுகளுக்கு வாய்ப்பே இல்லை
தகுதி நீக்கப் பட்டியலின் நீளம்
கடந்த முறை 5 சவரன் தள்ளுபடியில், அரசு போட்ட நிபந்தனைகளால் சுமார் 25 லட்சம் பேர் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் கடன் வாங்கியது தெரியவந்தது. பலருக்கு 5 சவரனுக்கு மேல் கடன் இருந்தது. இதனால் மீண்டும் ஒருமுறை இவ்வளவு பெரிய 'தணிக்கை'யை அரசு செய்தது.
புள்ளிவிவரம் சொல்லும் உண்மை
தற்போது தமிழக கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள மொத்த நகைக்கடன்களின் மதிப்பு (5 சவரனுக்குக் கீழ்) சுமார் ₹20,000 கோடி முதல் 25000 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் சுமை அதிகரித்து வரும் சூழலில், இவ்வளவு பெரிய தொகையை எந்த அரசாலும் தள்ளுபடி செய்து வங்கிகளுக்கு ஈடு கட்ட முடியாது.
கூட்டுறவு வங்கிகள் திவாலாகிவிடும்
அதுமட்டுமல்ல.. தங்கத்தின் மதிப்பு அதிகமாகிவிட்டது, தங்கத்தின் பேரில் கடன் வழங்கும் தொகையும் அதிகம். ஒரு நபருக்கு சராசரியாக ஐந்து சவரன் என்றால் 2.5 லட்சம் வரை கடன் வாங்கியிருப்பார்கள். கடந்த முறை புள்ளி விவரத்தின்படி எடுத்தாலும் 25000 கோடிக்கு மேல் அரசு கடனை கட்ட செலுத்த வேண்டியதிருக்கும். ஏற்கனவே நெருக்கடியில் தமிழக அரசு உள்ளது. 25000 கோடி தள்ளுபடி செய்தால், கூட்டுறவு வங்கிகளின் மொத்த மூலதனமே இதில் முடங்கிவிடும். அரசு உடனடியாக இந்த ₹25,000 கோடியை வங்கிகளுக்குத் தரவில்லை என்றால், அந்த வங்கிகள் அடுத்த நாளே திவாலாகிவிடும்
கசப்பான உண்மை
நகைக்கடன் தள்ளுபடி என்பது ஒருமுறை பெய்யும் மழை போன்றது. அது மக்களை ஒருமுறை பாதுகாத்திருக்கலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் மழையை நம்பி கிணற்றை (வங்கியை) மூட முடியாது. இனிவரும் காலங்களில் மக்கள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதை மட்டுமே எதிர்பார்க்க முடியுமே தவிர, "வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டத் தேவையில்லை" என்ற நிலை இனி வராது என்பதே கசப்பான அரசியல் உண்மை. முழு தகவல்களை செய்தியுடன் இணைக்கப்பட்ட வீடியோவில் பாருங்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications