ஸ்டாலின் வார்னிங்.. சுதாரித்த செந்தில் பாலாஜி.. ஏன் அத்தனை இடங்களில் ஐடி ரெய்டு செய்கிறது தெரியுமா?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ரெய்டுகளை அதிக இடங்களில் வருமான வரித்துறை நடத்துவதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தியாவில் நடந்த பெரிய ரெய்டுகளில் ஒன்று சசிகலாவிற்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டு ஆகும்.

அதற்கு இணையாக கிட்டத்தட்ட தற்போது செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடக்கின்றன. பல்வேறு வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக இந்த மத்திய விசாரணை ஆணையங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர்.
அந்த வகையில்தான் தற்போது தென்னிந்தியா பக்கம் இந்த ரெய்டு நடக்கிறது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் குறி வைக்கப்பட்டு உள்ளார்.
ஏன் அதிக இடங்கள்?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் முதலில் 40ல் தான் ரெய்டு நடந்தது. அவரின் தம்பி அசோக் வீட்டில் 2 நாட்கள் மட்டுமே ரெய்டு நடந்தது.ஆனால் முதல் நாளே 40 இடங்கள் 200 இடங்களாக உயர்த்தப்பட்டது.
இப்போதும் கூட கிட்டத்தட்ட 200 இடங்களில் ரெய்டு நடக்கிறது. அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கோவையில் மட்டும் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 42 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடக்கிறது.
இப்படி அதிக இடங்களில் ரெய்டு நடக்க காரணம் உள்ளது. அதன்படி இந்த ரெய்டு குறித்து முன்பே முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திலேயே முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை அழைத்து.. லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. கவனமாக இருங்கள்.
கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி உள்ளார். முக்கியமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி உள்ளிட்டவர்களை அழைத்து பேசிய ஸ்டாலின்.. உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தயாராக இருந்த செந்தில் பாலாஜி:
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி ரெய்டுக்கு தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவருக்கு நெருக்கமான ஒருத்தரை விடாமல் ரெய்டு செய்துள்ளனர்.
அவர் ஆவணங்களையோ, பணங்களையோ..உறவினர்களுடைய.. உறவினர்களுடைய.. உறவினர்களிடம் கொடுத்து வைத்து இருக்கலாம் என்பதால்.. ஒருவர் விடாமல் சல்லடை போட்டு ஷாக் கொடுத்துள்ளனர் வருமான வரித்துறையினர்.
செந்தில் பாலாஜிக்கு முன்பே விஷயம் தெரிந்து ஆவணங்களை வேறு இடங்களுக்கு மாற்றி இருக்கலாம் என்று சந்தேகித்துதான் ஐடி துறையினர் எதிர்பார்க்காத அளவிற்கு தமிழ்நாடு முழுக்க 200 இடங்களில் ரெய்டு விட்டதாக ஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications