4 "அவுட்".. பாஜகவிற்கு இன்றைய நாள் ரொம்ப முக்கியம்ங்க.. அக்னி மேல் நடப்பது போல.. ஏன் தெரியுமா?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் இன்று நடக்கும் 5ம் கட்ட தேர்தல் பாஜகவிற்கு மிக மிக முக்கியமான தேர்தல் ஆகும்.
2024 மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.
5ம் கட்ட தேர்தல்: 2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாடு இப்போது ஐந்தாவது கட்ட பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது.
பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 3, லடாக்கில் 1, மகாராஷ்டிராவில் 13, ஒடிசாவில் 5, உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த கட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள ஸ்மிரிதி இராணி போட்டியிடும் அமேதி, ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, லக்னோ மற்றும் கைசர்கஞ்ச்; பீகாரில் சரண்; மற்றும் அனைத்து ஆறு மும்பை மக்களவைத் தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிராவில் கல்யாண் ஆகிய தொகுதிகள் ஆகும்.
ஏன் முக்கியம்: இன்று உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் 5 ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறகிறது. இதுதான் பாஜகவிற்கு இந்த நாளை மிக முக்கியமான நாளாக மாற்றி உள்ளது. காரணம் இதில் கடந்த 2019 ம் ஆண்டு பாஜக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரே தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் இங்கே இப்போது நிலைமை வேறு மாதிரி உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த 14 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக அமேதி , ரேபரேலி, கைசர்கன்ஜ், பாண்டா,. கௌசாம்பி, பைசாபாத் ஆகிய 6 தொகுதிகள் பார்க்கப்படுகின்றன.
5-ம் கட்ட தேர்தல் விஐபி வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:
அமேதி: ஸ்மிருதி இரானி (பாஜக), கிஷோரி லால் சர்மா (காங்கிரஸ்)
ரேபரேலி: ராகுல் காந்தி (காங்கிரஸ்)
லக்னோ: ராஜ்நாத் சிங் (பாஜக)
ஹாஜிபூர்: சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி கட்சி- ராம்விலாஸ்)
சரண்: ரோகினி ஆச்சார்யா (ஆர்ஜேடி), ராஜீவ் பிரதாப் ரூடி (பாஜக)
முசாபர்பூர்: ராஜ் பூஷன் சவுத்ரி (பாஜக)
மும்பை வடக்கு: பியூஷ் கோயல் (பாஜக)
மும்பை தெற்கு: அரவிந்த் சாவந்த் (சிவசேனா- தாக்கரே)
வட-மத்திய மும்பை : உஜ்வல் நிகம் (பாஜக), வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்)
கல்யாண்: டாக்டர் ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா)
பாரமுல்லா: உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி)
6 தொகுதிகள்: அமேதி , ரேபரேலி, கைசர்கன்ஜ், பாண்டா, கௌசாம்பி, பைசாபாத் ஆகிய 6 தொகுதிகள் இந்திய கூட்டணிக்கு வெற்றிக்கு வாய்ப்பு உள்ள இடங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த இடங்கள்தான் பாஜகவிற்கு தற்போது நெருக்கடியை கொடுத்துள்ளது.
இன்றைய நாளை கத்தி மேல் நடக்கும் நாளாக பாஜகவிற்கு மாற்றி உள்ளது. ஏற்கனவே 4 கட்ட தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்து உள்ளதாக. பாஜகவிற்கு பெரிய அளவில் இடங்கள் குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில்தான் இந்த 5ம் கட்ட தேர்தலில் முக்கியமான இடங்களில் தேர்தல் நடக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications