Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணும் கண்ணும்.. ஓ. பன்னீர்செல்வம் "அவருடன்" சந்திப்பு?.. ஓபிஎஸ்ஸின் வேட்டை.. ரெடியான எடப்பாடியார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்துள்ள தேவர் ஜெயந்தி நிகழ்வுகள் ஓபிஎஸ்ஸுக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாம்.. இதையடுத்து, அடுத்தடுத்த வியூகங்களை ஓபிஎஸ் கையிலெடுக்க தயாராகி வருகிறாராம்.

எதிர்பார்த்ததுபோலவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான, முக்குலத்தோரின் கோபம் இன்னும் தணியவில்லை என்றே தெரிகிறது. பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி காலை வைத்ததில் இருந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, மறுபடியும் காரில் திரும்பி செல்லும்வரை, "ஒழிக" முழக்கங்கள் அதிமுகவை அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டன.

Why is Panneerselvam going to Singapore and Will OPS overtake Edappadi Palanisamy

எதிர்பார்த்ததுபோலவே, சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என 3 பேருக்குமே ஆதரவுகள் பசும்பொன்னில் வலுத்து காணப்பட்டன.. இந்த ஆதரவுகள்தான், ஓபிஎஸ்ஸுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்துள்ளதாம். எனினும், எதிர்கால அரசியலில் தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்கு, இந்த ஆதரவுகள் மட்டுமே ஓபிஎஸ்ஸூக்கு போதுமானதாக இருக்காது.

மேற்கு மண்டலம்: அதனால்தான், மேற்கு மண்டலத்தில் தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் நோக்கில் அடுத்த மாநாட்டை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டு வருகிறார்.. புரட்சிப்பயணத்தை மேற்கொண்டுள்ளதும், இந்த அடிப்படையில்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

சென்னை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகள் எல்லாம், எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக கருதப்படுகிறது. கொங்குவில் எடப்பாடிக்கு செல்வாக்கு உள்ளதைபோல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் ஓரளவு பலம் இருக்கவே செய்கிறது.

சொந்த பலம்: அப்படிப்பட்ட மேற்கு மண்டலத்தில், தங்களுக்கும் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான், அடுத்த மாநாட்டை மேற்கு மண்டலம் பக்கம் திருப்பியுள்ளதாக சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தென்மண்டலத்திலேயே, அதுவும் சொந்த சமூகத்திலேயே, ஓபிஎஸ்ஸுக்கான ஓட்டு வங்கியும் எவ்வளவு இருக்கிறது என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை. சொந்த மண்ணில் ஓபிஎஸ்ஸுக்கான செல்வாக்கு உள்ளதாக கருதப்படுகிறதே தவிர, வாக்கு வங்கி எவ்வளவு சதவீதம் என்பது நிரூபிக்கப்படவில்லை. காரணம், இதுவரை ஓபிஎஸ். எந்தவொரு தேர்தலையும் தனித்து சந்தித்ததும் இல்லை.

கடந்த முறை, ஒருங்கிணைந்த அதிமுகவில் இருந்தே, வாக்கு சதவீதத்தை தெற்கில் பெரிதாக எட்டமுடியவில்லை. அதனால், முக்குலத்தோர் வாக்குகளை, ஓபிஎஸ் எந்த அளவுக்கு தன்பக்கம் கொண்டுவருவார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

தினகரன்: இதுவே, அமமுக பொதுச்செயலாளர் தினகரனை எடுத்துக்கொண்டால், கடந்த முறை அவர் பிரித்த ஓட்டுக்கள், பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள்தான்.. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரித்ததே தினகரன்தான்.. அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவு வாக்குகள், தினகரனுக்கு குறிப்பிட்ட சதவீதம் இருந்துவருவது, ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஓபிஎஸ் அப்படியில்லை.. இனிமேல்தான் தன்னுடைய சொந்த செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். இதற்காகவே தினகரனுடன் இந்த முறை கைகோர்த்திருக்கிறார் என்றாலும், "சொந்த வாக்கு வங்கி" என்பது, எதிர்கால அரசியலுக்காகவாவது ஓபிஎஸ்ஸூக்கு மிகவும் அவசியமாகிறது.

பாஜக கூட்டணி: இப்படிப்பட்ட சூழலில்தான், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திடீரென சிங்கப்பூர் பயணமாகி உள்ளார்.. எதற்காக இந்த பயணம் என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், தேர்தல் நெருங்கி வரும்சூழலில், பாஜக கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர் வெளிநாட்டில் இருப்பதால், அவரை சந்தித்து பேசுவதற்காகவே இந்த பயணம் என்கிறார்கள்..

அடுத்தடுத்த மாநாடு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஓபிஎஸ் கையிலெடுப்பதால், பணவிவகாரம் தொடர்பாகவும், வெளிநாடு பயணமாகியிருப்பதாக சொல்கிறார்கள். சொந்த காரணங்களுக்காக, ஓபிஎஸ் வெளிநாடு சென்றதாகவும் சொல்கிறார்கள்.

வாக்கு வங்கி: இப்படி வேறு வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பாஜகவின் முக்கிய புள்ளியை சந்தித்து பேசவே இந்த பயணம் இருக்கலாம் என்று கூறப்படுகின்றன. எது எப்படியிருந்தாலும், பாஜகவை மட்டுமே முழுமையாக நம்பி, அல்லது தினகரன், சசிகலாவை மட்டுமே முழுமையாக நம்பியிராமல், தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கையும், வாக்கு வங்கியையும், களத்தில் நிரூபிக்க வேண்டிய நெருக்கடி ஓபிஎஸ்ஸுக்கு உள்ளதால், அவரது அரசியல் இனி வேகமெடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

தராசு ஷ்யாம்: ஒருமுறை, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ஒரு பேட்டியில், "எடப்பாடி பழனிசாமி என்பவர் அகில இந்திய தலைவர் கிடையாது.. தமிழகத்திலேயே வேறு ஏதாவது தொகுதியில் நின்று எடப்பாடி ஜெயிப்பாரா? ஆண்டிப்பட்டியில் எடப்பாடி ஜெயிப்பாரா? மதுரை மேற்கில் நின்று ஜெயிப்பாரா? தர்மபுரியில் ஜெயிப்பாரா? அவர் மாவட்டத்தில் மட்டும் தான் அவரால் ஜெயிக்க முடியும்.. காரணம் இவர் பகுதி தலைவர்.. ஓபிஎஸ்ஸுக்கும் இது பொருந்தும்.. அவரும் சேலத்தில் நின்று ஜெயிக்க முடியாது..

ஓபிஎஸ்: ஆக, இவர்கள் எல்லாருமே பகுதி தலைவர்கள்தான்.. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, தமிழகத்தில் எங்கு நின்றாலும் அவர்களால் வெற்றி பெற முடிந்தது என்றால், அதற்கு காரணம் அவர்கள், அனைவருக்குமான தலைவர்களாக அரவணைத்து செல்லும் தலைவர்களாக இருந்தார்கள்" என்று கூறியிருந்தார்.

ஆக, எடப்பாடியும் சரி, ஓபிஎஸ்ஸும் சரி, அனைவருக்குமான தலைவர்களாக தங்களை உருவாக்கிகொள்வார்களா? அல்லது "அடையாள" அதிமுகவையே மீண்டும் முன்னிறுத்திவிடுவார்களா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+