மோடி ஆட்சியே வந்தாலும்.. அது இனி நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பு இல்லை? என்ன காரணம்?
சென்னை: 2024ல் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியே மீண்டும் வந்தாலும் அது நீண்ட காலம் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்பதால் அது நீடிக்குமா என்ற கேள்வி உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது அனுசரித்து போவது. அதாவது கூட்டணி கட்சிகளை அனுசரித்து ஆட்சியை தக்க வைக்க எந்த எல்லைக்கும் செல்லும். உதாரணமாக சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் என்பதால் அவரால் பிரதமர் ஆக முடியாமல் போக.. மன்மோகன் சிங்கை காங்கிரஸ் களமிறங்கியது.

அவ்வளவு மக்கள் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கை வைத்தே 10 வருடங்கள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. மைனாரிட்டி காங்கிரஸ் கூட்டணிகளை அனுசரித்து ஆட்சி செய்தது. அப்படி கூட்டணி ஆட்சி செய்ய.. ஈகோ இருக்க கூடாது.. அனுசரிக்க தெரிய வேண்டும்.. கூட்டணிகள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. இந்தியா என்பது மாநிலங்களின் தொகுப்பு என்பதையும் உணர வேண்டும்.
ஆனால் ஒரு நாடு.. ஒரு கொள்கை என்று சொல்லும் பாஜகவிற்கு இந்த ஸ்டைல் செட்டாகாது. அதனால்தான் வாஜ்பாய்- ஜெயலலிதா ஆட்சி 13 நாட்களில் கவிழ்ந்தது. விபி அரசை பாஜக கவிழ்க்கவும் பாஜகவிடம் கொள்கை ரீதியாக சகிப்பு தன்மை குறைவாக இருந்ததே காரணம்.
பாஜக ஆட்சி நீடிக்குமா: இப்போது அதே பாஜக மீண்டும் கூட்டணி ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது. ஆனால் மோடி பாஜக கூட்டணிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் அதற்கு பல விஷயங்கள் சரியாக ஒத்துப்போக வேண்டும். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆதரவோடுதான் பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
பாஜகவுக்கு அவர்களின் இருப்பிலேயே குழப்பம் ஏற்பட்டு உள்ளது. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததும், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இருவரிடம ஆதரவு கேட்பதும் பாஜகவுக்கு சிக்கலாக இருக்கும்.
1. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இருவருமே இந்துத்துவாவின் கருத்தியல் எதிர்ப்பாளர்கள்
2. இருவருமே மாநிலங்களுக்கு அதிக உரிமை வேண்டும் என்று கேட்பவர்கள்.
3. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இருவரும் மதச்சார்பற்ற அடையாளம் கொண்டவர்கள்.
4. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இருவரும் பிரதமர் ஆக ஆசை படுபவர்கள்.
5. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இருவரின கொள்கை காரணமாக மோடியோ பாஜகவோ அவர்களின் கொள்கை ரீதியான சித்தாந்த ஆட்சி மாதிரியை தொடர முடியாது. இது அவர்களின் இந்துத்துவா ரீதியான வாக்கு வங்கியை சீர்குலைத்து அவர்களின் ஆதரவைக் குறைக்க வழிவகுக்கும்.
6. மோடிக்கு தனிப்பட்ட இமேஜ் முக்கியம். அவர் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க மாட்டார்.
7. மோடி நீண்ட காலம் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் பேச்சை கேட்க வாய்ப்பு இல்லை என்பதால் இப்போது மோடி ஆட்சிக்கு வந்தாலும் கூட ஆட்சி நீண்ட காலம் நீடிக்குமா என்பது கேள்வியே.
8. பாஜக எதிர்காலத்தை கருதினால் நிதின் கட்கரி , ராஜ்நாத் சிங் ஆகியோரை பிரதமர் ஆக்கலாம். இவர்கள் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் பேச்சை கேட்டு ஆட்சி செய்யலாம். அது 5 வருடம் பாஜக ஆட்சி செய்ய வழி வகுக்கும்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக












Click it and Unblock the Notifications