பறந்து வந்த கூடுதல் "டாஸ்க்".. பிடிஆருக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்.. ஆஹா "அந்த" துறையா!
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கியமான துறை ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்தாலும் கூட அவருக்கு கட்சி ரீதியாக பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. கட்சி ரீதியான அரசியலில் அவருக்கு கொஞ்சம் அனுபவம் குறைவு என்பதால், பெரிதாக கட்சி ரீதியான அரசியலில் அவரும் ஆர்வம் காட்டுவது இல்லை.
ஆனால் ஆட்சி ரீதியாக நிதி அமைச்சராக மிக சிறப்பாக அவர் செயல்பட்டு வருகிறார்.

பிடிஆர்
சமீபத்தில் கூட மதுரையில் தனது ஆதரவாளர்களுக்கு மதிப்பு இல்லாதது குறித்து பிடிஆர் பொது மேடையில் பேசி இருந்தார். சில நாட்களாக வரும் தகவல்கள் வேதனை தருகிறது என்று அமைச்சர் பிடிஆர் தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார். மதுரையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், திமுகவில் சில நாட்களாக வரும் தகவல்கள் வேதனை தருகிறது.

புறக்கணிப்பு
சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. எப்போதும்.. தயவு செய்து குட்டி மிருகங்களாக ஆகாதீர்கள். இன்று நான் சொல்கிறேன்.. நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து.. பொதுவாழ்க்கையை விட்டுவிட்டு வெளியே போவது வரை யாரையும் நான் கட்டுப்படுத்த மாட்டேன். அவரை போய் பார்க்காதே.. அவருடன் பேசாதே.. இவருடன் பேசாதே.. அந்த கூட்டத்தில் கலந்து கொள் என்று கூற மாட்டேன். என்றும் நான் அப்படி யாரிடமும் சொல்ல மாட்டேன்.அவர் பெயரை கட் அவுட்டில் போடாதே. அவரின் படத்தை கட் அவுட்டில் போடாதே என்று சொல்லவே மாட்டேன். அப்படி எல்லாம் நான் என் வாழ்க்கையில் சொல்லவே மாட்டேன். நான் பெரிய மனிதன். அப்படி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அப்படியே எனக்காவும் நான் பேச மாட்டேன். என் படத்தை போடு, என் பெயரை போடு என்று சொல்ல மாட்டேன், என்று குறிப்பிட்டார்.

ஆதரவு இல்லை
இவரின் ஆதரவாளர்கள் யாருக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு மதுரையில் கிடைக்கவில்லை. இருந்தாலும் திமுகவின் சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் பொறுப்பு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக இவரிடம் இருந்த ஐடி விங் செயலாளர் துறையும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் பிடிஆருக்கு விருப்பமான புள்ளியில் துறை அவருக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக தேர்வாகி உள்ளார். இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது காலை 9.30 மணிக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்று உள்ளார்.

புள்ளியியல் துறை
இதன்பின் பல்வேறு அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளது. இந்த இலாக்கா மாற்றத்தின் போது புள்ளியியல் துறையை கூடுதலாக கவனித்து வரும் ஐ பெரியசாமியிடம் இருந்து அந்த துறை வாங்கப்பட்டு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புள்ளியியல் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர். இதனால் அவருக்கு கூடுதலாக இந்த துறை அளிக்கப்பட உள்ளது. தற்போது நிதித்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, சட்டத்துறை ஆகிய துறைகளை பிடிஆர் கவனித்து வருகிறார். இந்த துறைகளை அவர் தொடர்ந்து கவனிப்பார். இதோடு கூடுதலாக புள்ளியியல் துறையையும் அவர் கவனிக்க உள்ளார்.

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலத்தில் இருக்கும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறைக்கு திடீரென சென்றார். அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் பிடிஆர் தனது செயல்பாடு தொடர்பான வார ரிப்போர்ட்டை கொடுத்து உள்ளார். வாராந்திர ரிப்போர்ட் ஒன்றை அமைச்சர் கொடுப்பது இதுவே முதல்முறை. அமைச்சர் பிடிஆருக்கு கொடுக்கப்பட்டு உள்ள தலைமை செயலகத்தில் உள்ள அறைக்குத்தான் முதல்வர் ஸ்டாலின் திடீரென இன்று சென்றார். அங்கு சில நிமிடங்கள் இவர்கள் பேசிக்கொண்டனர். அதன்பின் முதல்வரிடம் பிடிஆர் ரிப்போர்ட்டை கொடுத்தார். தான் அமைச்சராக அந்த வாரம் செய்தது என்ன என்று ரிப்போர்ட்டாக கொடுத்தார்.

மனசு குளிரும்
இந்த நிலையில்தான் பிடிஆர் மனசு குளிரும் விதமாக அவருக்கு விருப்பமான துறையை கூடுதலாக ஸ்டாலின் கொடுக்க உள்ளார். இந்த அமைச்சரவை மாற்றம் மிகவும் கவனமாக செய்யப்பட்டு வருகிறது. அமைச்சரவையை மாற்ற இரண்டு விதமான ரிப்போர்ட்கள் பயன்படுத்தப்படுகிறதாம். ஒரு ரிப்போர்ட் அமைச்சர்கள் தங்கள் துறையை பற்றி கொடுக்கும் ரிப்போர்ட். தங்களுக்கு கீழ் உள்ள இலக்காக்களில் அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகள், செயல்பாடுகள் பற்றி அமைச்சர்களே கொடுக்கும் ரிப்போர்ட். இரண்டாவது ரிப்போர்ட் அமைச்சர்கள் பற்றி உளவுத்துறை கொடுக்கும் மாதாந்திர ரிப்போர்ட். அமைச்சர்களின் செயல்பாடு பற்றி உளவுத்துறை கொடுக்கும் மார்க். இதை எல்லாம் அடிப்படையாக வைத்து, அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையிலேயே நிதித்துறையுடன் சேர்த்து புள்ளியில் துறையையும் பிடிஆர் பெற உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications