நான் சாட்சி சொல்றேன்! கூலாக சொன்ன சசிகலாவிற்கு பெரிய சிக்கல்.. ஃபோகசை திருப்பிய ஸ்டாலின்.. 2 ட்விஸ்ட்
சென்னை: கோடநாடு வழக்கிலும், ஜெயலலிதா மரண விசாரணையிலும் சசிகலா தரப்பு திடீரென குறி வைக்கப்பட்டுள்ளது. ஆளும் தரப்பின் இந்த மூவ் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை நடக்க உள்ள நிலையில் போலீசார் தற்போது விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சமீபத்தில் சசிகலாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர் . எஸ்டேட் உரிமையாளர் என்று முறையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

விசாரணை
சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரது தி நகர் வீட்டில் வைத்து விசாரணை செய்யப்பட்டது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். எஸ்டேட்டில் காணாமல் போன ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் சசிகலா மிகவும் கூலாக பேசினார். எஸ்டேட்டில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற போது சசிகலா ஜெயிலுக்குள் இருந்ததால்.. அவர் மிகவும் கூலாக இதில் வாக்குமூலங்களை அடுக்கினார். இன்று விசாரணையில் சசிகலாவிடம் மொத்தம் 121 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குமூலம்
பெரும்பாலும் கோடநாடு எஸ்டேட்டில் என்ன இருந்தது என்பது பற்றிய கேள்விகள் இவை. கோடநாடு எஸ்டேட்டில் நடந்தது கொடுமையான விஷயம். அடுத்தடுத்து பலர் இறந்துட்டாங்க. இதை போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளை பிடிக்கணும், எனக்கு அதுதான் முக்கியம் என்று சசிகலா கூறி இருக்கிறாராம். அதோடு நான் எங்கு வேண்டுமானாலும் சாட்சி சொல்ல தயார். எஸ்டேட் பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை சொல்ல தயார் என்று சசிகலா கூறினார்.

விசாரணை
சசிகலா என்னதான் அன்று கூலாக வாக்குமூலம் அளித்தாலும் தற்போது விசாரணை அவருக்கு எதிராக திரும்பும் அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் இந்த வழக்கு தொடர்பாக நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கறிஞர் செந்தில் சசிகலா குடும்பத்திற்கு மிக மிக நெருக்கம். சசிகலாவிற்கு குடும்ப நண்பர் போன்றவர் செந்தில். இவரை திடீரென அரசு குறி வைத்தது ஏன்? சசிகலா பக்கம் இந்த வழக்கில் ஃபோகஸ் திரும்பி உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா
இன்னொரு பக்கம் ஜெயலலிதா மரண வழக்கிலும் சசிகலா விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் முடிவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விவரங்கள் முழுமையாக பொதுவில் வெளியாகவில்லை.

தமிழ்நாடு அரசு முடிவு
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதம் செய்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருமதி V.K.சசிகலா, திரு சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது, என்று தமிழ்நாடு அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சசிகலா
அதாவது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது. அரசு விசாரணை நடைபெறும். அதில் அறிக்கை தயார் செய்யப்படும். இந்த அறிக்கையும், ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையும் ஒன்றாக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. திடீரென கோடநாடு வழக்கிலும், ஜெயலலிதா மரண விசாரணையிலும் சசிகலா தரப்பு குறி வைக்கப்பட்டுள்ளது. ஆளும் தரப்பின் இந்த மூவ் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications