சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கமலாலயம் டூ அறிவாலயம்".. "அந்த அயோக்கியனை கண்டிக்க துப்பில்லையா?".. குமுறும் பாஜக புள்ளிகள்.. ஏன்?

மைனர் விஜய் மீது நடவடிக்கை கோருகின்றனர் தமிழக பாஜக தலைவர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சிவ பெருமான் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை செய்த ஒரு தரங்கெட்ட பதர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
'மைனர் விஜய்' என்பவர் U2 brutas என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்... திராவிட மற்றும் இடதுசாரி சிந்தனைகள் சார்புடைய அந்த சேனலில், வலதுசாரி மற்றும் தமிழ்தேசிய சித்தாந்தங்களை தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பது வழக்கம்,

அந்த வகையில், 2 நாட்களுக்கு முன்பு " நடராஜர் காலை தூக்கி நிற்க இதுதான் காரணம்! " என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியானது..

 இது ஒரு நாடுதானா என அரசியமைப்பு சபையை கூட்டி விவாதிக்கலாமா? தைரியம் இருக்கா? -பொங்கிய திமுக பிரமுகர் இது ஒரு நாடுதானா என அரசியமைப்பு சபையை கூட்டி விவாதிக்கலாமா? தைரியம் இருக்கா? -பொங்கிய திமுக பிரமுகர்

 மைனர் விஜய்

மைனர் விஜய்

அந்த வீடியோவில் தில்லை நடராஜர் சிலையின் தோற்றம் குறித்து, சில தவறான தகவல்களை சித்தரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இதனையடுத்து அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கோரிக்கைகள் வலுவாகி வருகிறது.. மற்றொருபக்கம், இந்து மக்கள் கட்சி சார்பில், 'மைனர் விஜய்' மற்றும் அவரது யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னையிலுள்ள ஆதம்பாக்கம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது..

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

எனினும் பாஜக மூத்த தலைவர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.. அதிலும் எச்.ராஜா ஆவேசமாகிவிட்டார்.. ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்து, தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. சிவனை இகழ்ந்தவனை தமிழக அரசே உடனே கைது செய் என்று காட்டமாக கூறியிருந்தார்.. இதற்கு அடுத்தபடியாக, இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலையிட்டார்.

 ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

அவரும் இது தொடர்பான கேள்வியை கேட்டார்.. "மத கோட்பாடுகள் மற்றும் இறைநம்பிக்கையை அவதூறாகப் பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர் சிலர்! ஆளும் கட்சியின் ஆசி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதுபோன்ற அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

 நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

பின்னர், பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இதற்காகவே ஒரு தனி அறிக்கை வெளியிட்டுள்ளார். "யூடூ புரூட்டஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் மைனர் விஜய் என்பவர் இந்து கடவுள்களை தொடர்ந்து மிக ஆபாசமாக வசித்து வருகிறார். சமீபத்தில் தில்லை நடராஜர் ஏன் காலைத் தூக்கி ஆடுகிறார் என்று அவர் பேசியுள்ள வீடியோ ஆபாச அருவருப்பின் உச்சகட்டம். திமுக அரசும் தமிழக காவல்துறையும் இந்து தெய்வங்களை அவமதிக்கும் செயல்களை வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல என்றார். இந்நிலையில், தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் திமுக அரசு மீது பாய்ந்துள்ளார்.. "சிவ பெருமான் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை செய்த ஒரு தரங்கெட்ட பதர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கூட வியப்பளிக்கவில்லை.

 மத உணர்வுகள்

மத உணர்வுகள்

ஆனால், அந்த அயோக்கியனை கண்டிப்பதற்கு பாஜகவை தவிர்த்து தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு கூட துப்பில்லாதது தான் கேவலம். அரசியல் என்கிற தொழிலை பாதுகாக்க அரசியல் தலைவர்களின் மௌனம் வெட்கக்கேடு. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய அந்த கொடியவனை கைது செய்ய காவல்துறை தயங்குவதேன்? இது தான் பேச்சுரிமை என்றால், இனி யார் வேண்டுமானாலும் எந்த கடவுள் குறித்தும் தரம் தாழ்ந்து பேசும் முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உருவாகும்..

களவாணிகள்

களவாணிகள்

தமிழ்நாடு காவல்துறை தன் கடமையை செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இது போன்ற களவாணிகளை, புறம்போக்குகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று நாராயணன் கடுமையாக எச்சரித்தும் வேண்டுகோள் விடுத்தும் உள்ளார்.. ஏற்கனவே கருப்பர் கூட்டத்தின் செயல்கள் ஆறாத வடுவாய் உள்ள நிலையில், இந்த சேனலும் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாகவே இந்த தலைவர்கள் ஒருமித்த குரல் எழுப்பி உள்ளனர்.. ஒட்டுமொத்த தலைவர்களும் இந்த விவகாரத்தில் ஆவேசத்தில் உள்ளதால், திமுக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Why is the DMK government silent over u2 brutas thillai natarajar controversy video, மைனர் விஜய் மீது நடவடிக்கை கோருகின்றனர் தமிழக பாஜக தலைவர்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X