ரயிலின் கடைசி பெட்டியில் ஏன் X இருக்கு? இது தெரியாம போச்சே! பெட்டிகளின் கலரில் பின்னணியில் சீக்ரெட்
சென்னை: இன்று ரயில்வேயின் தேவை உயர்ந்து கொண்டே வருகிறது.. நம்முடைய இந்தியாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்யப் பலருக்கும் பிடித்தமான ஒன்று ரயில் பயணம்.. பிளாட்பாரத்தில் ரயில் வந்து நிற்கும் போது, அதில் இருக்கும் பெட்டிகளின் பலவிதமான நிறங்களை கவனித்திருப்பீர்கள்.. சிலர் இவை வெறும் அலங்காரத்திற்காக அடிக்கப்பட்ட பெயிண்ட் என்று நினைக்கிறார்கள்.. ஆனால், உண்மையில் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப ரகசியமும், பாதுகாப்பு அம்சமும் ஒளிந்து கொண்டுள்ளது. அதை பற்றி தெரிந்துவைத்து கொள்வதும் அவசியமாகிறது.
நாம் பல ஆண்டுகளாக பார்த்து பழகிய அந்த நீல நிறப் பெட்டிகள் இப்போது மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது.. முதலில் நாம் அதிகம் பார்த்த நீல நிறப் பெட்டிகள் ICF அதாவது Integral Coach Factory வகையைச் சேர்ந்தவையாகும்..

ரயில் பெட்டிகள் நிறங்கள்
இவை சென்னையில் உள்ள பெரம்பூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுபவை.. இரும்புப் பொருட்களால் செய்யப்படும் இந்தப் பெட்டிகள் 70 முதல் 140 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை.
ஆனால், விபத்து காலங்களில் இந்தப் பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்று ஏறி அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் என்பதால், இப்போது இந்த பெட்டிகளின் உற்பத்தியை ரயில்வே குறைத்து வருகிறது.. இதற்கு மாற்றாகத்தான் அந்த தகதகக்கும் ரெட் கலர் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.. இதனை LHB அதாவது Linke Hofmann Busch என்று சொல்வார்கள்..
துருப்பிடிக்காத எஃகு மூலம் செய்யப்படும் இந்தப் பெட்டிகள் விபத்து நடந்தாலும் ஒன்றன் மேல் ஒன்று ஏறாது.. ராஜ்தானி, சதாப்தி போன்ற அதிவேக ரயில்களில் இந்தச் சிகப்பு பெட்டிகளையே நீங்கள் அதிகம் பார்க்க முடியும்.
பச்சை நிற பெட்டி
அதேபோல பச்சை கலர் பெட்டிகளையும் கவனித்திருக்கலாம்.. இவை பெரும்பாலும் கரீப் ரத் போன்ற ஏழை எளிய மக்களுக்கான ஏசி ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன.. குறைந்த கட்டணத்தில் ஏசி வசதி கொண்ட பெட்டி என்பதைத் தூரத்திலிருந்தே அடையாளம் காண இப்படியான பச்சை நிறம் உதவுகிறது.
சமீபகாலமாக வெள்ளை மற்றும் ஆரஞ்சு கலரிலும் ஜொலிக்கும் வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் வேகத்தையும், நவீனத்தையும் பறைசாற்றுகின்றன.. இதில் வெள்ளை நிறம் தூய்மையையும், ஆரஞ்சு நிறம் இந்தியாவின் வீரத்தையும் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது..
வெள்ளை நிற கோடுகள் ஏன்
அதுமட்டுமல்ல, சில பெட்டிகளில் ஜன்னலுக்கு மேலே மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் சாய்வான கோடுகள் வரையப்பட்டிருக்கும்.. இது அந்தப் பெட்டி முன்பதிவு இல்லாத பெட்டி என்பதை, கல்வியறிவு பெறாதவர்களும் எளிதில் புரிந்துகொள்ள வைக்கப்பட்ட குறியீடாகும்..
ரயிலின் கடைசி பெட்டியில் மஞ்சள் நிறத்தில் ஒரு பெரிய X குறியீடு இருக்கும்.. இது அந்த ரயில் முழுமையாகச் சென்றுவிட்டது என்பதைக் குறிக்கும் சிக்னல் ஆகும்.
அதேபோல நீல நிறப் பெட்டிகளில் மஞ்சள் கோடுகள் இருந்தால், அது மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி என்பதை உணர்த்துகிறது.. இப்படி ஒவ்வொரு நிறமும், கோடும் ஒரு மொழியாகவே ரயிலில் செயல்படுகின்றன.. இனிமே நீங்கள் பயணம் செய்யும் போது, வெறும் பெட்டியை பார்த்தே அது எந்த வகை ரயில், எவ்வளவு வேகம் செல்லும், அது பாதுகாப்பானதா என்பதை நீங்களே ஈஸியாக கணித்துவிடலாம்...!!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications