உன்னை தொலைச்சிடுவேன்.. கோபப்பட்ட எடப்பாடி.. முடிஞ்சா பாருங்க.. சண்டை உச்சம்! அப்போ செங்கோட்டையன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுதான் எடப்பாடி - செங்கோட்டையன் மோதலின் உச்சம். கட்சியில் உள்ள நிர்வாகிகள் ஒன்று சேர எல்லா தலைவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் கட்சியில் மிக மோசமான சூழல் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே சமீபகாலமாக உரசல் அதிகரித்திருந்தது. இருவருக்குமிடையே பேச்சுவார்த்தையும் நின்று போனது. ஆனால், இந்த முறுகல் நிலை தேவையற்றது. தலைவர்களே இப்படி உள்கட்சி பிரச்சனைகள் பொதுவெளியில் விவாதிக்கப்படுகிற அளவுக்கு நடந்து கொள்ள வேண்டுமா? என்று எடப்பாடி மற்றும் செங்கோட்டையனிடம் சீனியர்கள் பேசியிருக்கிறார்கள்.

Edappadi Palaniswami Sengottaiyan

பேட்டி

இந்த மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில், செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும் இடையே மோதல் உச்சம் பெற்று உள்ளது. இன்னொரு மணியான நபரும் இந்த சண்டையில் நுழைந்து இருக்கிறார் . அந்த மணியான நபரை பார்த்து.. எடப்பாடி உன்னை தொலைச்சிடுவேன். நீ கட்சியில் இருக்க மாட்ட. உன்னை தொலைத்துவிடுவேன். நீ கட்சியை விட்டு போனால் உன்னுடன் யாரும் வர மாட்டார்கள். ஈ காக்கா கூட வராது என்று உள்ளார்.

அந்த மணியான நபர்.. நீங்கள் முடிஞ்சால் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சொல்லிவிட்டீர்கள். முடிந்தால் பார்த்துக்கொள்ளுங்கள் என்று பதிலடி தந்துள்ளார். இன்னொரு மோதலில் செங்கோட்டையனை எடப்பாடி திட்டி உள்ளார். இதற்கு செங்கோட்டையன் நான் 9 முறை ஜெயித்தவன் என்று போனில் எடப்பாடியிடம் கூறி உள்ளார். இதற்கு எடப்பாடி முடிந்தால் 10 வது முறை ஜெயித்து பாரு. இன்னும் 1 மாதத்தில் அதிமுகவில் உள்ள எல்லோரும் ஒன்றாக சேர போகிறார்கள்.

எடப்பாடி உடன் முரண்டு நிற்கும் மணியான கும்பல், செங்கோட்டையன் எல்லோரும் ஒன்றாக சேர போகிறார்கள். 1 மாதத்தில் இவர்கள் ஒன்று சேர போகிறார்கள். செங்கோட்டையன் போய் சபாநாயகரை சந்திக்கிறார். எடப்பாடிக்கு எதிரான மூவ் இது. ஜெயலலிதா இருக்கும் போது செங்கோட்டையன் இப்படி செய்ய முடியுமா? இப்போது எடப்பாடி இருக்கும் போது செய்கிறார்.

இதுதான் எடப்பாடி - செங்கோட்டையன் மோதலின் உச்சம். கட்சியில் உள்ள நிர்வாகிகள் ஒன்று சேர எல்லா தலைவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்., என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

அப்செட்

சமீபத்தில் எடப்பாடி அதிமுக கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் 82 பேருடன் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார். இதில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் பலரிடமும் பேசினார் எடப்பாடி. ஆனால், செங்கோட்டையனிடம் எதுவும் பேசவில்லை.

ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களிடமும் எடப்பாடி பேசியது போல செங்கோட்டையனிடமும் எடப்பாடி விவாதித்திருந்தால் செங்கோட்டையன் கூலாகியிருப்பார். எடப்பாடி தன்னிடம் பேசுவார் என்றும், பேசினால் சகஜமாக பேச வேண்டும் என்றும், கொங்கு மண்டலம் குறிப்பாக ஈரோடு மாவட்ட அரசியல் பற்றி நிறைய விசயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் நினைத்திருந்தார் செங்கோட்டையன்.


செங்கோட்டையன் அப்செட்

ஆனால், செங்கோட்டையனிடம் எடப்பாடி முகம் காட்ட வில்லை. கூட்டம் முடியும் தருவாயில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் நன்றி சொல்லும் போது செங்கோட்டையனின் பெயரையும் சொன்னார். இதைத்தவிர, செங்கோட்டையன் எதிர்பார்த்தது எதுவும் காணொலி காட்சி கூட்டத்தில் நடக்கவில்லை. இதனால் செங்கோட்டையன் அப்-செட்டானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+