மிகப்பெரிய செக்யூரிட்டி விஷயம் இது.. வேலையை காட்டிய துருக்கி? இந்தியா உடனே சுதாரிக்கணும்!
சென்னை: பாகிஸ்தான் போரை தொடர்ந்து இந்தியா துருக்கி இடையிலான மோதல், கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் பொருளாதார தலைநகர் மும்பை உட்பட ஒன்பது இந்திய விமான நிலையங்களில் உயர் பாதுகாப்பு பணிகளை கையாளும் துருக்கியை தளமாகக் கொண்ட செலிபி ஏவியேஷனுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை இந்தியா மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த மோதலில்.. பாகிஸ்தானை துருக்கி தீவிரமாக ஆதரித்தது பலருக்கும் தெரியும். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பின் சீனா + அமெரிக்கா + துருக்கி போன்ற சர்வதேச நாடுகளின் செயலும் இருக்கின்றன.

உதாரணமாக துருக்கி, சீனா ஆகியவை பாகிஸ்தானை நேரடியாக ஆதரித்தது. ராணுவ ரீதியாக அரசியல் ரீதியாக பாகிஸ்தானை சப்போர்ட் செய்தது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இதிலேயே பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா ஆதரவு இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.
மோதல் உச்சம்
இதனால் இந்தியா துருக்கி இடையே மோதல் உச்சம் அடைந்து உள்ளது. அதன் ஒரு கட்டமாக டெல்லி மற்றும் மும்பை உட்பட ஒன்பது இந்திய விமான நிலையங்களில் உயர் பாதுகாப்பு பணிகளை கையாளும் துருக்கியை தளமாகக் கொண்ட செலிபி ஏவியேஷனுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை இந்தியா மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக அரசாங்கத்தால் எந்த காலக்கெடுவும் வழங்கப்படவில்லை என்றாலும், தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால் இதில் விரைவில் முடிவு எடுக்க உள்ளனர். தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் துருக்கியின் ஈடுபாடு இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு ரீதியாக மட்டுமல்ல, அரசியல் கண்ணோட்டத்திலிருந்தும், அரசாங்கம் தீர்க்கமாக செயல்படுவதைக் காட்ட வேண்டிய அழுத்தத்தில் உள்ளது. இதில் உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய, சுதாரிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
இந்தியா துருக்கியை நேரடியாக எதிர்த்தது இல்லை. நேரடியாக தாக்கியது இல்லை. ஏன் துருக்கி நிலநடுக்கத்திற்கு இந்தியா பணம் கூட அனுப்பி உள்ளது. ஆனால் இத்தனை இருந்தும், வரலாற்று ரீதியாக எதிரியாக இல்லாத இந்தியாவை துருக்கி எதிர்ப்பது ஏன்? போர் சமயத்தில் பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு உதவுவது ஏன் என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதற்கான காரணங்கள் இங்கே விளக்கி உள்ளோம்.
துருக்கி ஏன் இந்தியாவை எதிர்க்கிறது
1. காஷ்மீர் பிரச்சினை விமர்சனம்: இந்தியா 370வது பிரிவை நீக்கியதை துருக்கி வெளிப்படையாக விமர்சிக்கிறது. காஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசம் என்ற பாகிஸ்தானின் கருத்தை ஆதரிக்கிறது. காஷ்மீர் விவகாரம் காரணமாக துருக்கி இந்தியாவை எதிரியாக கருதுகிறது.
2. இந்தியா எதிர்ப்பு நிலைப்பாடு: துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் பலமுறை இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளார், குறிப்பாக ஐ.நா. உரைகளின் போது. அவர் அங்கே பதவிக்கு வந்த பின் இந்திய எதிர்ப்பு அதிகம் ஆகிவிட்டது.
3. தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு: இந்தியாவின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக நிலைப்பாட்டை அடிக்கடி எதிர்க்கும் உலகளாவிய தீவிரவாத அமைப்புகளை துருக்கி ஆதரிக்கிறது. அதாவது பல தீவிரவாத அமைப்புகளுக்கு துருக்கி ஆயுதங்களை வழங்குகிறது.
4. பொருளாதார ஆதாயங்களுக்காக பாகிஸ்தானுடன் கூட்டணி: பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் துருக்கி பொருளாதார மற்றும் இராணுவ ஆதாயங்களைக் பெறுகிறது (எ.கா., பாதுகாப்பு ஏற்றுமதிகள்).
5. இந்தியாவின் உலகளாவிய எழுச்சியின் மீதான பொறாமை: உலக அரசியலில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் QUAD, BRICS போன்ற கூட்டணிகள் மற்றும் வலுவான அமெரிக்க உறவுகள் துருக்கியை ஓரங்கட்டப்பட்டதாக உணர வைக்கிறது.
6. UAE-இந்தியா நட்புறவை எதிர்த்தல்: UAE மற்றும் சவுதி அரேபியா இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதை துருக்கி விரும்பவில்லை. துருக்கி பாகிஸ்தானுடனான உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அதை எதிர்க்க முயல்கிறது.
7. இந்தியா-கிரீஸ்-சைப்ரஸ் உறவுகள்: துருக்கியின் போட்டியாளர்களான கிரீஸ் மற்றும் சைப்ரஸுடன் இந்தியா நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது. இதை துருக்கி விரும்பவில்லை.
8. இஸ்ரேல் உடன் இந்தியா நெருக்கமாகி வருவதையும் துருக்கி விரும்பவில்லை.












Click it and Unblock the Notifications