விஜய் சிக்கிக்கொண்டார்.. இது சரியில்லை.. புஸ்ஸி ஆனந்தை நீக்குங்கள்.. கட்சி உள்ளேயே வெடிக்கும் கலகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் உள்ளே புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக பெரிய அளவில் கலகக்குரல் வெடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 17 நாட்களுக்கு பிறகு சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

TVK Vijay

சிரித்தபடி போட்டோ

புஸ்ஸி ஆனந்த் 17 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் பனையூரில் தவெக கட்சி அலுவலகத்துக்கு வந்தார். முகத்தில் தாடி வளர்த்திருந்தார். ஆனால் சிரித்தபடி புகைப்படம் எடுத்தார். அவரை நிர்வாகிகள் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். நேற்று புஸ்ஸி ஆனந்த் யாருக்கும் அஞ்சலி செலுத்தவில்லை. மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலை கூட போடவில்லை.

ஆனால் கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டார். அலுவலகத்துக்குள் புஸ்ஸி ஆனந்த் நுழைந்ததும் கதவு மூடப்பட்டது. அதன்பிறகு அவர் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் உள்ளே புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக பெரிய அளவில் கலகக்குரல் வெடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் மாயமாகிவிட்டார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும் கிட்டத்தட்ட தலைமறைவாகி இருந்தனர். விஜய் மட்டும் இருக்கிறார். ஆனால் அவரும் கூட பனையூர் வீட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார். கட்சியின் முகமாக இருப்பவர் தலைவருக்கு அடுத்து பொதுச்செயலாளர்தான். ஆனால் அப்படிப்பட்ட புஸ்ஸி ஆனந்தே 2 வாரங்கள் தலைமறைவாக இருந்தார்.

இதனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. கரூர் விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டியது பொதுச்செயலாளர் கடமை. ஆனால் அதே புஸ்ஸி ஆனந்த் இந்த விவகாரங்களை எதிர்கொள்ளாமல் தலைமறைவாகிவிட்டார். அவரின் முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி ஆகிவிட்டது. அந்த மனுவிற்கு எதிராக மேல்முறையீடு இன்னும் செய்யப்படவில்லை. இப்போது சிபிஐ விசாரணை வந்த பின்பே அவர் மீண்டும் வெளியே வந்துள்ளார்.

விஜய் ஏன் நீக்கவில்லை?

இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. விஜய்.. ஏன் புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியை அம்போ என்று விட்டுவிட்டு சென்ற அவர் மீது விஜய் ஏன் ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. விஜய் அவரிடம் சிக்கிக்கொண்டது போல செயல்படுகிறார். அவரை இனியும் ஏன் நம்புகிறார். ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் இப்படி விட்டு இருப்பார்களா? விஜய் அவர்களை போல ஆக ஆசைப்படுகிறார்.. ஆனால் அப்படி ஆக்சன் எடுக்கவில்லை என்று கட்சிக்கு உள்ளே புகார் எழுந்துள்ளதாம்.

கட்சிக்கு உள்ளே ஆதவ் அர்ஜுனா - புஸ்ஸி ஆனந்த் இடையே கடுமையான மோதல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இரண்டு பேருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் புஸ்ஸி ஆனந்தை நீக்க வேண்டும் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சிக்கு உள்ளேயே புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு குரல் பதிவாக தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+