இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் தயக்கம்.. கருணையில் கூட திமுக அரசு மதப் பாகுபாடு? சீமான் கண்டனம்!
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் தயக்கம் காட்டுவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட அரசுகளும் பாஜகவின் எதிர்ப்புக்கு பயந்து இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுத்ததன் விளைவே, அபுதாகிர் உயிரும் பறிபோயுள்ளது. இன்னும் எத்தனை இஸ்லாமியச் சிறைவாசிகளின் உயிரைப் பலி கொள்ள திமுக அரசு திட்டமிட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்புச்சகோதரர் அபுதாகிர் சிறைக்கொடுமைகளால் உடல் நலிவுற்று உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்துப் பேசியதற்காக கடந்த 2008ம் ஆண்டு திமுக அரசால் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, எனக்கு அபுதாகிரிடம் பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

சீமான் அறிக்கை
அவரது உடல்நிலையைக் கருத்திற்கொள்ளாமல் சிறிதும் இரக்கமின்றி விடுதலை செய்ய மறுத்த திமுக, அதிமுக அரசுகளின் கொடுங்கோன்மை மனப்பான்மையே சகோதரர் அபுதாகிர் மரணத்திற்கான முக்கியக் காரணமாகும். திமுக ஆட்சிக்கு வந்தால் நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்வோம் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதியளித்து, இசுலாமியர்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தை அடைந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இசுலாமிய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்ய மறுத்து, பச்சை துரோகத்தைப் புரிந்தது.

அதிமுக ஆட்சி
கடந்த 2008ம் ஆண்டு திமுக அரசால் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுதலை என்ற பெயரில் மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினர் அம்மையார் லீலாவதியைப் படுகொலை செய்த திமுகவினர் உட்பட பலரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அப்போது நீண்டகால இசுலாமியச் சிறைவாசிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் கடந்த 2017ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாளினை முன்னிட்டு 1627 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டபோதும் இசுலாமியச் சிறைவாசிகள் எவரையும் விடுதலை செய்யாமல் அதே துரோகத்தைத் தொடர்ந்தது.

இசுலாமியச் சிறைவாசிகள்
மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 2021ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாளினை முன்னிட்டு 700 சிறைவாசிகளை விடுதலை செய்தபோதும் கூட, மீண்டும் நீண்டகால இசுலாமியச் சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்ய மறுத்து கருணையிலும் மதப்பாகுபாடு காட்டி வஞ்சித்தது. கடந்த காலங்களில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபூர் ரகுமான், ரிசுவான் உள்ளிட்ட நால்வர் சிறைவாசிகளாகவே மரணித்த கொடுமைகள் அரங்கேறிய நிலையில், தற்போது சகோதரர் அபுதாகிரும் உயிரிழந்துள்ளார்.

அதிமுக, திமுக
திமுக, அதிமுக கட்சிகள் ஒருபோதும் இசுலாமிய மக்களுக்கு உண்மையான துணையாக இருக்காது என்பதற்கான சாட்சியுமாகும். உரிய காலத்தில் விடுதலை செய்து முறையான மருத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் அவர்களது உயிரிழப்பினைத் தடுத்திருக்க முடியும். ஆனால், இரு திராவிட அரசுகளும் பாஜகவின் எதிர்ப்புக்கு பயந்து, சிறிதும் மனச்சான்று இன்றி இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுத்ததன் விளைவே, தற்போது சகோதரர் அபுதாகிர் உயிரும் பறிபோயுள்ளது.

நியாயமா?
இன்னும் எத்தனை இசுலாமியச் சிறைவாசிகளின் உயிரைப் பலி கொள்ள திமுக அரசு திட்டமிட்டுள்ளது? சிறைவாசிகள், இசுலாமியர் என்பதாலேயே நோய் முற்றும்வரை உரிய சிகிச்சை அளிக்காமலும், விடுப்பு அளிக்காமலும் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? மரணம் மட்டும்தான் அவர்களுக்கான முழுமையான விடுதலையைத் தரமுடியும் என்று திமுக அரசு கருதுகிறதா?

தயக்கம் ஏன்?
கடுமையான நோயுற்றவர்களை விடுதலை செய்யலாமென சிறைவிதி பிரிவு 632 கூறும் நிலையில், அதன்படி இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய திமுக அரசிற்கு என்ன தயக்கம்? கருணை அடிப்படையில் விடுதலை என்று கூறிவிட்டு, கருணையில்கூட திமுக அரசு மதப் பாகுபாடு காட்டுவதற்குப் பெயர்தான் 'திராவிட மாடலா'?. திமுக அரசு இனியும் இசுலாமிய மக்களை ஏமாற்றாது, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications