ஹெலிகாப்டரில் ஏறுங்க.. சட்டென சொன்ன அமித் ஷா.. உடனே வந்த அண்ணாமலை.. ஆமா எல் முருகன் எங்கே?
சென்னை: நேற்று அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்து இருந்த நிலையில் இணை அமைச்சர் எல் முருகன் எந்த பாஜக மேடையிலும் தோன்றாதது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக தீவிரமாக பணிகளை செய்ய தொடங்கி உள்ளது. அந்த வகையில் வேலூரில் நடக்கும் 9 ஆண்டு பாஜக ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கலந்து கொண்டார்.

இதற்காக அமித் ஷா நேற்று முதல்நாள் இரவு தமிழ்நாடு வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பின் அமைச்சர் அமித் ஷா சென்னையில் உள்ள கிண்டி ஐ.டி.சி ஹோட்டலுக்கு சென்று தங்கினார். அங்கு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு அரசு சார்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா இவருக்கு வரவேற்பு கொடுத்தார்.
அடுத்தடுத்த ஆலோசனைகள்: நேற்று அமித் ஷா தனது பயணத்தில் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். அமித் ஷா அமைச்சராக இல்லாமல்.. முழுக்க முழுக்க பாஜக சார்பான அரசியல் பணிக்காக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று காலை 11.40 மணிக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.

பாஜக கட்சி நிர்வாகம், நாடாளுமன்ற தேர்தல்., கூட்டணி அமைப்பது, தொகுதிகள் தேர்வு செய்வது, திமுகவிற்கு எதிராக வியூகம் வகுப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமித் ஷா நேற்று ஆலோசனை செய்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருடன் சுமார் ஒரு மணி நேரம் அமித் ஷா ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முதல்நாள் சென்னை வந்த அமைச்சர் அமித் ஷா இரவோடு இரவாக அரசியல் சாராத பிரபலங்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். அரசியல் சார்ந்த, சாராத பிரபலங்கள் என்று பல துறைகளை சேர்ந்த பிரபலங்களுடன் சந்திப்பு நடத்தினார். வின் தொலைக்காட்சி தேவநாதன், விளையாட்டு துறையைச் சேர்ந்த லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன், இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகரன், இந்தியா சிமெண்ட்ஸ், செட்டிநாடு சிமெண்ட்ஸ், தாஜ், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்நல்லி குப்புசாமி, பாஸ்கரன், அனிதா பால்துரை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஆர்காட் நவாப், டேப்லட்ஸ் இந்தியா, பி.கே.எஃப், இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அமித் ஷா, அதன்பின் ஆளுநர் ஆர்என் ரவியுடன் தொலைபேசியில் பேசினார். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பற்றி ஆர்என் ரவியுடன், அமித் ஷா பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்டாலின் - ரவி மோதல், சட்ட ஒழுங்கு, அரசின் மசோதாக்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இன்று மதியம் வேலூர் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் சாதனைகளை பற்றி அமித் ஷா பேசுகிறார். அதற்கு முன்பாக ஆளுநர் ஆர். என் ரவியுடன் அமித் ஷா பேசி உள்ளார். இப்படி வரிசையாக அமித் ஷா பல்வேறு மீட்டிங்குகளை நடத்தி வந்தார்.
எல் முருகன் எங்கே? : அதன்பின் வேலூர் பொதுக்கூட்டத்தில் திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்தும் பேசினார். வேலூருக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார் அமித் ஷா. அவருடன் அண்ணாமலை சென்றார்.
அதோடு அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், சுதாகர் ரெட்டி கூட ஹெலிகாப்டரில் இருந்தனர். ஆனால் எல் முருகன் இந்த பயணத்தில் இல்லை.

எல் முருகன் நேற்று அமித் ஷாவை வரவேற்ற நிலையில் அதன்பின் எங்குமே காணவில்லை. மேடையில் எந்த இடத்திலும் எல் முருகன் இடம்பெறவே இல்லை. முன்னதாக வேலூர் நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா.. அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை வழிநடத்துவதைப் பார்த்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 25 சீட்டுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கிராமங்கள் எல்லாம் பாஜகவை கொண்டு சென்ற அண்ணாமலைக்கு பாராட்டுக்கள் என்று அமித் ஷா இந்த நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார்.
அண்ணாமலையை அமித் ஷா பாராட்டிய நிலையில் மேடையில் எங்கும் எல் முருகன் இடம்பெறாதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications