ஆயுள் காப்பீடு ஏன் அவசியம் தேவைப்படுகிறது? என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?
சென்னை: ஆயுள் காப்பீடு ஏன் அவசியம் தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தின் எதிர்காலத்தையே இந்த ஆயுள் காப்பீடுகள் தீர்மானிப்பதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சமூகவலைதள பக்கத்தில் வெங்கடராமன் ராமசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: தனி மனித நிதியில் இரண்டு விஷயங்கள் முக்கியம்.

1. சம்பாதித்த பணத்தைப் பெருக்குதல் - முதலீடு
2. சம்பாதித்த பணத்தை காத்தல் - காப்பீடு
காப்பீட்டில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, வாகன காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவை
ஆயுள் காப்பீடு என்றால் என்ன?
இதில், ஆயுள் காப்பீடு என்பது குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் திடீரென இறந்துவிட்டால், காப்பீடு செய்யப்பட்ட தொகை குடும்பத்திற்கு வழங்கப்படும். குடும்பம் அவர் உயிரோடிருந்தால், எவ்வாறு நிதி பிரச்சனை இல்லாமல் இருந்திருக்குமோ, அவ்வாறே குடும்பத்தின் நிதி நிலைமையை காக்கப்படும்.
ஆயுள் காப்பீடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. சம்பாதிக்கும் நபர் இல்லாத பட்சத்திலும், குடும்பத்தினை காக்கிறது.
ஆயுள் காப்பீடு பின்வரும் விதங்களில் உதவும்
குடும்பத்தின் உறுப்பினர்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு உதவும் பணம்
குடும்பத்தில் ஏதேனும் கடன் இருப்பின், அதனை அடைக்க உதவும்
குடும்பத்தில் குழந்தைகள் படிப்பினைத் தொடரவும், மேல்படிப்பு படிக்கவும், திருமணம் செய்யவும் உதவும்.
ஏற்கனவே, குடும்பத்தின் எதிர்காலத்திற்காக செய்த முதலீடுகளை நடுவில் எடுக்காமல் தொடர உதவும். இதன் மூலம், முதலீடுகளை வளர்க்க முடியும். முதலீடுகளை நடுவில் எடுப்பதென்பது, தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமமானது.
- குடும்பத்தின் நிதி நிலைமையைக் காக்கிறது
- குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர் உயிரோடு இருந்தால், எத்தகைய வாழ்க்கைத் தரம் இருந்திருக்குமோ, அதே வாழ்க்கைத் தரத்தை வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் பெற உதவுகிறது
- குறைந்த காப்பீட்டுத் தவணைத் தொகைக்கு , மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது. உதாரணமாக, 1 கோடி ரூபாய் காப்பட்டுத் தொகைக்கு, காலவரையுள்ள காப்பீட்டுத் திட்டத்தில், வருடம் கிட்டத்தட்ட 10,000 ரூபாய் தவணை செலுத்தினால் போதுமானது.
- குடும்பத் தலைவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் மன நிம்மதியை அளிக்கிறது. இது வாகனம் ஓட்டும் போது, தலைக்கவசம் போன்றது. வாழ்க்கை என்னும் பயணத்தில், ஏதேனும் விபத்து நிகழ்ந்தால், குடும்பத்தை காக்கும்.
- குடும்பத்தின் எதிர்காலத்தை காக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications