கேம் ஓவர்.. மோடி செய்த "சம்பவம்".. அதான் கோடு போட்டு காட்டிட்டாங்களே.. அதிர்ந்து போன எடப்பாடி டீம்?
சென்னை: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையால் எடப்பாடி ஆதரவாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு வந்தார். அவரை தொடர்ந்து மறுநாளே உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்தார்.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டிற்கு பாஜக அமைச்சர்கள் படையெடுத்து வரும் நிலையில்தான் மோடி, அமித் ஷா இருவரும் அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

அதிமுக வருகை
இவர்களின் வருகை பாஜக இடையே விவாதத்தை ஏற்படுத்திய அதே அளவிற்கு அதிமுகவிற்கு உள்ளேயும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று அதிமுகவின் இரண்டு அணிகளும் தீவிரமாக முயன்று வந்தது. அதாவது சந்திப்பது என்றால் விமான நிலையத்தில் சந்திப்பது இல்லை. 10 நிமிடம் தனியாக மோடியை சந்தித்து பேசுவது . இதற்காக இரண்டு தரப்பும் தீவிரமான முயற்சிகளை செய்து வந்தது.

முயற்சி
இந்த நிலையில்தான் எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் இருவருக்கும் மோடியை சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை. தனியாக இவர்களுக்கு சந்திக்க நேரம் தரப்படவில்லை. மாறாக இருவரும் மோடியை வரவேற்கவும், வழி அனுப்பவும் அனுமதிக்கப்பட்டனர். அதாவது மோடியிடம் தனியாக பேசாமல், வெறுமனே வந்து சந்தித்துவிட்டு செல்லுங்கள் என்று மட்டும் அனுமதி கொடுத்தனர். அதாவது இரண்டு பேருக்கும் சமமான உரிமை, மதிப்பு கொடுத்து.. ஒன்றாக வாருங்கள் என்று அழைப்பு விடுத்து உள்ளனர்.

எடப்பாடி
அதேபோல் மறுநாள் ஓ பன்னீர்செல்வம் அமித் ஷாவை நேரில் சந்தித்துள்ளார். அமித் ஷா சென்னைக்கு வந்த போது அவரை தனியாக சந்திக்க ஓ பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். ஆனால் இதற்கான நேரம் கொடுக்கப்படவில்லை. மாறாக அமித் ஷாவை வரவேற்க மட்டும் நேரம் கொடுக்கப்பட்டது. எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் யாருக்கும் இதற்கும் கூட நேரம் கொடுக்கப்படவில்லை. இந்த இரண்டு சம்பவம்தான் எடப்பாடி தரப்பை அப்செட் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அப்செட்
அதன்படி மோடியும், அமித் ஷாவும் கிளியர் கட்டாக சொல்லிவிட்டனர்.. அதிமுகவில் ஒற்றை தலைமையை அவர்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. அதனால் தான் இரண்டு தலைவர்களை அழைத்து உள்ளார் மோடி. அதோடு அமித் ஷா ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து உள்ளார். இதன் அர்த்தம் ஒற்றை தலைமையை அதிமுக விரும்பவில்லை என்பதே. மோடி, அமித் ஷா இருவருமே ஒற்றை தலைமை வந்த போது எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்லவில்லை.

சமமாக நடத்தி உள்ளனர்
இப்போது இரண்டு தலைவர்களையும் சமமாக நடத்தி உள்ளனர். இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு இருக்க முடியும். மோடியும், அமித் ஷாவும் அதிமுக எப்படி இருக்க வேண்டும் என்று கோடு போட்டு காட்டிவிட்டனர் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்போ.. எங்களை பாஜக தரப்பு மதித்து உள்ளது. அதனால்தான் எங்களையும் அழைத்து உள்ளனர். அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புவதையே அவர்களும் விரும்புகிறார்கள் என்பதுதான் இதற்கு அர்த்தம் என்று உற்சாகமாக குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications