விஜயகாந்த் விசாரிச்சாராமே.. "பத்திரமா போகணும், போன் பண்ணி கேப்பேன்".. துள்ளி குதித்த மதுரை..!
மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்
சென்னை: மதுரைக்கு பிரச்சாரம் செய்ய வந்த பிரேமலதா, திடீரென விஜயகாந்த் பற்றி பேசியதும் மக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
மதுரைக்கும் விஜயகாந்த்துக்கும் எப்போதுமே ஒரு நெருக்கம் உண்டு.. வாழ்க்கையின் அரிச்சுவடியை கற்று தந்த மதுரை மண்ணை அவர் எக்காலத்திலும் மறந்தது இல்லை..
அதற்கேற்றார்போல், மதுரை மாவட்ட மக்களும் விஜயகாந்த் மேல் இன்றுவரை பாசத்தை பொழிந்து வருகின்றனர். விஜயகாந்த்துக்கு எப்போது உடம்பு சரியில்லை என்றாலும், முதலில் கோயிலுக்கு போய் அவருக்காக வேண்டி கொள்வது இந்த மாவட்ட மக்கள்தான்!

மதுரை
2 வருடத்துக்கு முன்பு மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் தேமுதிக சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது... அந்த விழாவுக்கு விஜயகாந்த் வந்திருந்தார்.. அவரை பார்ப்பதே அரிதாகி விட்டது.. அப்படியே பார்த்தாலும் பேசுவதை கேட்பதும் அபூர்வமாகிவிட்டது. விஜயகாந்த் வருகிறார் என்பதற்காகவே மக்கள் கூட்டம் மதுரையில் அன்றைய தினம் அலைமோதியது..

விஜயகாந்த்
மைக்கில் பேச ஆரம்பித்த விஜயகாந்த், "உட்கார்ந்தே பேச சொல்றாங்க என்னை.. அதான் உட்கார்ந்தே பேசறேன்.. இங்கு அமர்ந்திருக்கும் அன்பு சகோதர, சகோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.. என் மக்களுக்கு ஒன்னுன்னா விஜயகாந்த் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.. பத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்.. ஆமா பத்திரமா போய் சேரணும்.. நான் போன் பண்ணி கேப்பேன்.. எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போணும்.." என்றார்.

வார்த்தைகள்
விஜயகாந்த் இப்படி சொன்னதும் ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி ஆரவாரம் செய்தது.. ஆனால் அவர் பேசியது எதுவுமே சரியாக புரியவில்லை.. ரொம்பவும் சிரமப்பட்டுதான் இந்த வார்த்தைகளையும் சொன்னார்.. தட்டுத்தடுமாறி விஜயகாந்த்தை பேசுவதை கேட்டு மக்களில் சிலர் கண்கலங்கினர்.. எப்படி எப்படியோ ஆக்டிவ்வாக பார்த்த விஜயகாந்த்தை, இப்படி பேசுவதை பார்க்கும்போது சிலரால் தாங்கி கொள்ளவும் முடியவில்லை...

ஆலங்குளம்
இத்தனை நாளும் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா மதுரைக்கு இன்று வந்திருக்கிறார்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால், மதுரை மாநகராட்சியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டார்.. ஆலங்குளம் பகுதியில் திறந்த வேனில் நின்றுகொண்டே பேசினார்..

ஆட்சி அதிகாரம்
அப்போது, "ஆட்சி, அதிகார, பண பலத்தை எதிர்த்து தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.. எல்லா வார்டுகளிலும் பணம் கொடுக்கத்தான் திமுகவும், அதிமுக-வும் நினைக்கிறது. 2 கட்சிகளும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் கடந்த 50 வருடங்களாகவே எடுக்கவில்லை... பொங்கல் பரிசு பொருட்கள் தரமற்ற நிலையில் வழங்கப்பட்டன, 1,000 ரூபாய் உரிமை தொகை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர்.

ஸ்டாலின்
2 இருகட்சிகளும் 60 ஆண்டுகளாக பொய் வாக்குறுதிகளை மட்டுமே தெரிவித்து ஆட்சி அமைத்து வருகின்றன. தேர்தல் வந்ததால் 1000 ரூபாயை விரைவில் தருவதாக ஸ்டாலின் சொல்கிறார்.. மகளிர் உரிமை தொகையை கொடுக்காமல் மறுபடியும் ஏமாற்றினால் முதல்வரால், தமிழகத்தில் எங்கும் வரவே முடியாது.. தேர்தல் பிரச்சாரத்தில் பேசியவர் நல்லா இருந்த சிட்டியை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சீரழித்தது மட்டுமே மிச்சம்.

வெள்ளந்தி
"கேப்டன் நல்லா இருக்கார்.. மதுரைக்கு போறேன்னு சொன்னதுமே, மதுரை மக்களை ரொம்ப விசாரிச்சதா சொல்லுன்னு சொல்ல சொன்னார்.." என்றார் பிரேமலதா.. அவர் இப்படி சொல்லவும், அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த கூட்டம் கைகளை தட்டி ஆரவாரம் செய்தது.. சிலர் கேப்டன் வாழ்க என்று முழக்கமிட்டனர்.. அரசியலையும் தாண்டி, அனைத்து பொதுமக்கள், அனைத்து கட்சி தலைவர்கள் விஜயகாந்த்தை விரும்ப காரணமே, அந்த வெள்ளந்தி மனசும் - பாசமும்தான்..!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications