சென்னைவாசிகள் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.. ராதாகிருஷ்ணனுக்கே இப்படியா? டேஞ்சர் டெங்கு வந்துடுச்சே
சென்னை: சென்னையில் டெங்கு சீசன் மறுபடியும் தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக வெளியே வந்த கொசுக்கள் காரணமாக டெங்கு பரவ தொடங்கி உள்ளது.
டெங்கு என்பது டெங்கு வைரஸால் (DENV) ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. தமிழ்நாட்டில் அதிகம் பரவக்கூடிய நோய்களில் ஒன்றாக டெங்கு வைரஸ் நோய் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 100-400 மில்லியன் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதால், உலக மக்கள்தொகையில் பாதி பேர் இப்போது டெங்கு ஆபத்தில் உள்ளனர் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு மோசமான நோய் இது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாது.
ஆனால் கொசுக்கள் மூலம் பரவ கூடியது. டெங்கு உலகளவில் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல காலநிலைகளில் காணப்படுகிறது, பெரும்பாலும் நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் அதிகம் பரவுகிறது.
அறிகுறிகள்: டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் இருக்காது. அதுவே அறிகுறிகள் உள்ளவர்களுக்கு.. அதிக காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குமட்டல் மற்றும் சொறி ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். பெரும்பாலானவை 1-2 வாரங்களில் சரியாகிவிடும். சிலருக்கு கடுமையான டெங்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், டெங்கு கடுமையான ஆபத்தானது. உயிரைக் கூட கொல்லும்.
குறிப்பாக பகலில் கொசு கடிப்பதைத் தவிர்ப்பதன் மூலம் டெங்கு அபாயத்தைக் குறைக்கலாம். டெங்கு காய்ச்சலுக்கு தற்போது குறிப்பிட்ட சிகிச்சை இல்லாததால் வலி மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான அல்லது அறிகுறிகள் இல்லாமல் 1-2 வாரங்களில் குணமடைவார்கள். அரிதாக, டெங்கு தீவிரமடைந்து மரணத்திற்கு வழிவகுக்கும் சம்பவங்களும் நடக்கும்.
தமிழ்நாட்டில் டெங்கு சீசன் நேரங்களில் மரணம் ஏற்படுவது வழக்கம். அறிகுறிகள் ஏற்பட்டால், அவை பொதுவாக நோய்த்தொற்றுக்கு 4-10 நாட்களுக்குப் பிறகு தொடங்கி 2-7 நாட்களுக்கு நீடிக்கும்.
- அதிக காய்ச்சல் (40°C/104°F)
- கடுமையான தலைவலி
- கண்களுக்கு பின்னால் வலி
- தசை மற்றும் மூட்டு வலிகள்
- குமட்டல்
- வாந்தி
- வீங்கிய தோல் பகுதிகள்
- சொறி ஆகியவை ஏற்படும்.
சென்னையில் தொடங்கிய சீசன்: இந்த நிலையில்தான் சென்னையில் டெங்கு சீசன் மறுபடியும் தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக வெளியே வந்த கொசுக்கள் காரணமாக டெங்கு பரவ தொடங்கி உள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு கூட இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் சாலை பணிகள், கொசு ஒழிப்பு, டெங்கு விழிப்புணர்வு உள்ளட்ட பணிகளுக்காக அடிக்கடி அவர் பல இடங்களுக்கு சென்றதால் தனக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சுகாதார செயலாளராக இருந்த அவருக்கே, நோய் பரவல் குறித்து விவரங்கள் தெரிந்த அவருக்கே டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் மக்களும் டெங்கு பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக சென்னை மக்கள் டெங்கு பாதிப்பை தடுக்க கொசு வலைகள், கொசு இல்லாத அளவிற்கு கதவுகளை மூடிக்கொள்வது, கொசு மருந்துகளை பயன்படுத்துவது, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications