சவுக்கு சங்கரிடம் சம்மன் கொடுக்க 2 கான்ஸ்டபிள்கள் போதாதா? கடப்பாரை எதற்கு? இன்பதுரை கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சம்மன் வழங்க சவுக்கு சங்கர் வீட்டிற்கு சென்றிருந்தால், 2 கான்ஸ்டபிள்கள் போதாதா? எதற்காக போலீஸ் படை, தீயணைப்புத் துறை, கடப்பாரை என அதிமுக ராஜ்யசபா உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "35 BNSS விசாரணை நோட்டீஸ் வழங்க தான் சவுக்கு வீட்டுக்கு போலீஸ் சென்றது என்றால் 2 கான்ஸ்டபிள்கள் போதாதா? இவ்வளவு படை தேவையா? நோட்டீஸை அவர் வாங்க மறுத்துவிட்டால் வீட்டுச் சுவரில் அதை ஒட்டலாமே? தீயணைப்புத் துறை- கடப்பாரைகள் எதற்கு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் #கடப்பாரை_கவர்ன்மென்ட் என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications