சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம்.. பிடிஆர் அறிவிப்பு.. உதயநிதி ஸ்டாலினின் திட்டம் என்ன?
சென்னையில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. எங்கு இந்த விளையாட்டு மையம் அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் 3வது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20 ம் தேதியான இன்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் கல்வித்துறை மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீட்டை அறிவித்து பிடிஆர் உரையை வாசிக்கையில், "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

கலைஞர் நூலகம்
மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ,40 299 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

குடிமைப்பணி பயிற்சி
வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும். ரூ.120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் உலகளாவிய தொழில் பயிற்சி மையம் அமைக்கப்படும். குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குத் தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது" என்றார்,

தொடக்க பள்ளிகள்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் பிடிஆர் கூறினார்.

சென்னையில் அமைகிறது
அத்துடன் சென்னையில் அதிநவீன வசதிகளுடன் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், சென்னையில் அதிநவீன வசதிகளுடன் விளையாட்டு மையம் அறிவிப்பு வெளிடப்பட்டிருக்கிறது. இதற்கான கோரிக்கையை உதயநிதிதான் எழுப்பி இருப்பார் என்று கூறப்படுகிறது.

எப்படி அமையப்போகுது
சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் சிஎம்டிஏ மூலம் சென்னையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு எழுந்துள்ளது. சென்னையில் எங்கு அமைக்கப்பட உள்ளது என்பது தெரியவில்லை. சென்னையின் மையப்பகுதிகளில் சேப்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. அதேநேரம் சர்வதேச விளையாட்டு மையம் புதிதாக அமைக்கப்படவிருப்பது மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினின் இந்த திட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications