Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சை தமிழன்".. கையில் பேப்பர் கூட இல்லை.. அந்த 45 நிமிஷம்.. நம்ம ராகுலா இது? மலங்க விழித்த பாஜக

ராகுல் காந்தியின் பாராளுமன்ற பேச்சு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகுல்காந்தி நேற்றைய தினம் பேசிய பேச்சு, இந்தியா முழுமைக்கும் தமிழகத்தை கொண்டு போய் சேர்த்துள்ளது.. ராகுல் பேச பேச.. அவரை கட்டுப்படுத்த முடியாமல், சமாளிக்க முடியாமல், கண்டிக்க முடியாமல், பதிலளிக்க முடியாமல், திணறிய பாஜகவையும் இந்த நாடு பார்த்தது.. உண்மையிலேயே ராகுல் நேற்று சொன்ன "மெசேஜ்" என்ன?

ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் நேற்று எத்தனையோ விஷயங்களை பேசினாலும், தமிழகத்தை பற்றி பேசும்போது, தமிழகத்தையே பெரும்பாலும் கோடிட்டு காட்டினார்.

தமிழகம் ஒவ்வொரு முறையும் உங்களிடம் திரும்ப வந்து நீட் தேர்வு வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறது. நீங்களும் முடியாது வெளியே போங்கள் என்று கூறுகிறீர்கள். உங்களுடைய கட்டமைப்பில் அவர்களின் குரலுக்கு மதிப்பு இல்லை. உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என்றார். ஒரே நாளில் ராகுல் பேச்சு வைரலாக என்ன காரணம்?

 முதல் காரணம்

முதல் காரணம்

முதல் விஷயம், பப்பு என்று கிண்டல், கேலிக்கு ஆளான ராகுலா இப்படி பேசியது? என்ற வியப்பு ஒருபுறம் இருந்தாலும், ராகுல் இந்த அளவுக்கு நீங்கள் அரசியலைப் புரிந்து வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.. காங்கிரசுக்கும் திராவிடத்துக்கும் நீண்ட நெடிய உறவு பயணித்தாலும், இன்றைய காலத்தில் ராகுல் போன்ற இளைய தலைவர்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையை ராகுலின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது.

 2வது காரணம்

2வது காரணம்

இரண்டாவதாக, 70 வருட பாராளுமன்ற வரலாற்றில் இதுபோன்ற ஒரு உரையை யாரும் பேசியது இல்லை.. ராகுல் கையில் பேப்பர் இல்லை.. எதையும் முன்கூட்டியே தயார் செய்தும் வரவில்லை.. மனதில் இருந்து ஒவ்வொன்றையும், நிஜ வலியுடன், கொட்டி தீர்த்த உணர்வு குவியல்களை காண முடிந்தது.. கருணாநிதியுடன் இத்தனை வருட காலமாக பயணித்த மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கே இல்லாத ஒரு உந்துதலும் தெளிவும் ராகுலிடம் காண முடிந்தது.

 3வது காரணம்

3வது காரணம்

மூன்றாவதாக, தமிழகம் மட்டுமில்லாமல், பாஜக அல்லாத மற்றும் மத்திய பாஜகவால் பாதிப்புக்குள்ளான மாநிலங்களை ராகுல் கையிலெடுத்தது அரசியலுக்கும் அப்பாற்பட்டது.. அத்தகைய மாநிலங்களில் பாஜகவால் எதிர்கொண்ட பிரச்சனைகளை, குறிப்பாக மாநில உரிமைகளையும், கலாச்சாரங்களையும் ராகுல் தொட்டு பேசியதுதான், உணர்வுப்பூர்வமாக அந்த பேச்சு அமைய காரணம்.

 4வது காரணம்

4வது காரணம்

நான்காவதாக, மாநிலங்களிடம், பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக எப்படி நாசூக்காக செய்து கொண்டிருக்கிறது என்பதை ஒரே உதாரணத்தில் கோடிட்டு காட்டியது மெச்சத்தக்கது.. கேரளாவுக்கு என தனி கலாச்சாரம் உள்ளது. ராஜஸ்தானுக்கு என ஒரு தனி கலாச்சாரம் உண்டு. அதற்காக அனைவரையும் ஆட்சி செய்துவிடலாம் என நினைக்காதீர்கள்.. உங்கள் செங்கோல் முறிந்துவிடும். நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்தினது குரலையும் ஒடுக்கி வைத்துள்ளீர்கள். மணிப்பூரை சேர்ந்த குழுவினர் அமித்ஷாவை சந்திக்க செல்லும் போது ஷூக்களை கழற்றிவிட்டு உள்ளே செல்ல சொல்லி இருக்கின்றனர். ஆனால் அமித்ஷாவோ காலணி அணிந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இது மணிப்பூர் மக்களை அவமதிப்பது இல்லையா? என்ற கேள்வியை பாஜக எதிர்பார்க்கவே இல்லை..

 5வது காரணம்

5வது காரணம்

ஐந்தாவதாக, தேசிய கட்டமைப்பின் முக்கியத்துவத்தை ராகுல் தெளிவுபடுத்தியிருக்கிறார்.. இந்த நாட்டின் அடிப்படை கட்டமைப்புடன் ஆர்எஸ்எஸ். இயக்கமும் பாஜகவும் விளையாடிக் கொண்டிருக்கின்றன.. இந்த தேசத்தை மிகப் பெரும் ஆபத்தில் சிக்க வைத்து கொண்டிருக்கிறீர்கள் என்ற எச்சரிக்கை தொனியை இதுவரை இந்த அளவுக்கு பாஜகவை பார்த்து எந்த தலைவர்களும் எழுப்பியதும் இல்லை.. கட்டமைப்பின் அவசியத்தை பாஜக எந்த அளவுக்கு சீர்குலைத்து கொண்டிருக்கிறது என்பதை விளக்கியதும் இல்லை.

 6வது காரணம்

6வது காரணம்

ஆறாவதாக, தமிழகத்தின் மீதான ராகுலின் பாசம், அவர் மீதான இதுவரை இருந்த ஒட்டுமொத்த அதிருப்தியையும் கோபத்தையும் பறக்க செய்துவிட்டது.. சொல்ல வேண்டிய விஷயத்தை, சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில் ஆணித்தரமாக சொல்லிவிட்ட திருப்தி கிடைத்துள்ளது.. தமிழகம் மற்றும் பல மாநில மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நேர்மையாக இருந்தது.. தமிழ்த்தேசிய அரசியல் பத்து வருடங்களாக தமிழ்நாட்டில் பேசிய பேச்சு இன்று தமிழ்த்தேசியமும்.. தேசிய இனங்களின் அரசியலும் நாடாளுமன்றத்தில் ஒலித்தது இரட்டிப்பு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

 7வது காரணம்

7வது காரணம்

ஏழாவதாக, எல்லாவற்றையுமே அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது என்பதை ராகுல் பாஜகவுக்கு புரிய வைத்துள்ளதாகவே தெரிகிறது.. நல்லது யார் செய்தாலும் அரசியலையும் தாண்டி வரவேற்க வேண்டும், பிரிவினையை கையில் எடுத்தால், அது சொந்த கட்சியையே காணாமல்போக செய்துவிடும் என்ற வார்னிங்கை தன் பாணியிலேயே ராகுல் பறைசாற்றி உள்ளார்.. முக்கியமாக நீட் விஷயத்தில் பாஜக விளையாடியிருக்க கூடாது, அது எந்த அளவுக்கு மாநில அரசியலில் வெறுப்பை பெற்று தந்துவிடும் என்ற கோபத்தை காட்டியிருக்கிறார் ராகுல்.

 8வது காரணம்

8வது காரணம்

எட்டாவதாக, தன் பேச்சில் பெரும்பாலும் தமிழ்நாட்டை முன்னிறுத்தியே பேசுயிருக்கிறார்.. அதாவது தமிழ்நாட்டை மேலிட காங்கிரஸ் ஒரு முக்கியமான மாநிலமாக கருதுகிறது என்பது புலப்படுகிறது.. ஏன் தமிழ்நாட்டை பற்றியே அதிகம் பேசுகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நான் ஒரு தமிழன் என்று சட்டென யோசிக்காமல் ராகுல் பதிலளிக்கிறார் என்றால், தமிழ்நாட்டை சக்திவாய்ந்த மாநிலமாக கருதுவதால்தான்.. மத்திய அரசின் இந்த 8 வருட காலத்தில், தமிழ்நாட்டுக்கு கிடைத்த உளக்கிடக்கையை ஏமாற்றங்கள், துரோகங்கள், வலிகள், கண்ணீர்களை ராகுல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொண்டு செல்ல நினைத்துள்ளார்.. அதனால் ராகுலை பச்சை தமிழனாகவே மக்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

 9வது காரணம்

9வது காரணம்

ராகுல் பேச்சுக்கு பாஜக வழக்கம்போல் கொந்தளிப்பையும், கண்டனத்தையும் மட்டுமே பதிவு செய்து கொண்டிருக்கிறதே தவிர, அதற்கு ஒரு பதிலையும் சொல்ல முடியவில்லை.. பல்வேறு மாநிலங்களில் பாஜக அதிருப்தியை சம்பாதித்து கொண்டிருக்கிறது.. கோபத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிறது.. இத்தனை காலமும் தென்மாநில மக்களே பாதிப்புக்கு உள்ளான நிலையில், வடமாநிலங்களிலும் மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. அதன்பலனைதான் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் ரிசல்ட்கள் எடுத்துக் காட்டியது.. இன்னும் 5 மாநில தேர்தல் நடக்க போகும் சூழலில், ராகுலின் இந்த பேச்சு மேலும் மக்களின் சிந்தனையை உந்துதல்படுத்தி உள்ளது..

Recommended Video

    பாஜகவால் ஒரு காலத்திலும் தமிழ்நாட்டை ஆளவே முடியாது - Rahul Gandhi
     இதுதான் மெசேஜ்

    இதுதான் மெசேஜ்

    இறுதியாக, தமிழக மக்கள்தான் தமிழகத்தில் யார் ஆட்சி செய்யவேண்டும் என்று முடிவெடுப்பார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துவிட்டார் ராகுல்.. திராவிடத்தை கையில் எடுக்காமல், திராவிட கட்சிகளின் ஆதரவு இல்லாமல், தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது என்பதையும் உரிமை ஆழிப்பேரலையாய் அதிர வைத்துவிட்டார்.. சுருக்கமாக சொன்னால், சாமான்ய மக்களின் உணர்வுகளையும், உரிமையும், கலாச்சாரத்தையும் தொட்டால், இந்தியாவின் 2வது விடுதலை போருக்கும் மக்கள் துணிந்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கையே, பாஜகவுக்கு ராகுல் தந்த மெசேஜ் ஆகும்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+