சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சாத்தியமே" இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்... ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்!

Google Oneindia Tamil News

சென்னை: மக்களை சந்திக்காமல் சமூகவலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது சாத்தியமில்லை என்றும் அந்த பிரச்சாரங்கள் எடுபடாது என்றும் ரஜினி தனது அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    திடீரென வெளியான அறிக்கை.. Rajinikanth பின்வாங்க காரணம் என்ன?

    ரஜினிகாந்த் கடந்த அரசியல் கட்சியை தொடங்குவதாக இருந்தது. இவரது வரவால் திராவிடக் கட்சிகள் சற்று கலங்கியே இருந்தன. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வமோ, தேவைப்பட்டால் ரஜினியுடன் கூட்டணி வைக்க அதிமுக தயார் என வாய்விட்டே கூறிவிட்டார்.

    அது போல் இந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்தது. இதற்காக வியூகம் வகுக்கும் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தலைமையில் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

    அப்படியெல்லாம் வசனம் பேச முடியாது.. இனி வெறும் ஸ்டார்தானா.. ரஜினிக்கு காத்திருக்கு பெரிய சவால்! அப்படியெல்லாம் வசனம் பேச முடியாது.. இனி வெறும் ஸ்டார்தானா.. ரஜினிக்கு காத்திருக்கு பெரிய சவால்!

    பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோர்

    ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என 2017-ஆம் ஆண்டு சொன்னதுடன் சரி, அதன் பிறகு அது பற்றியே பேசாததால் பிரசாந்த் கிஷோரும் திமுக வெற்றிக்கு வியூகம் வகுத்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி ரஜினி தனது நிர்வாகிகளுடன் உடல்நிலை குறித்து ஆலோசித்தவுடன் ரஜினி வரமாட்டார் என சிலர் நினைத்தனர்.

    அரசியலுக்கு வரப்போவதில்லை

    அரசியலுக்கு வரப்போவதில்லை

    ஆனால் யாரும் எதிர்பாராத வேளையில் கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சியை ஜனவரியில் தொடங்குவதாக அறிவித்திருந்தார். இது திராவிடக் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது உடல் நலம் பாதிப்புக்கு பிறகு நேற்றைய தினம் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என ஒரு முடிவை அறிவித்திருந்தார்.

    உடல்நலம்

    உடல்நலம்

    கொரோனாவையும் தனது கட்சி நிர்வாகிகள், ரசிகர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால் உண்மையான காரணம் மகள்கள் ஐஸ்வர்யாவும் சவுந்தர்யாவும் ஹைதராபாத் மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த அரசியல் எல்லாம் வேண்டாம், உங்கள் உடல்நலம்தான் முக்கியம் என கூறியதாக ஒரு தகவல் வருகிறது.

    தமிழருவி மணியன்

    தமிழருவி மணியன்


    அதாவது வெளியே செல்லாமல் அரசியல் பிரச்சாரம் செய்ய முடியுமா என பாருங்கள் இல்லாவிட்டால் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிடுங்கள் என தெரிவித்துவிட்டார்கள். இதையடுத்து கடந்த 28-ஆம் தேதி அதாவது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மறுநாள், தமிழருவி மணியனை போனில் அழைத்து கட்சி பணிகள் குறித்து ரஜினி கேட்டறிந்துள்ளார்.

    90 நாட்கள்

    90 நாட்கள்

    பின்னர் தமிழகத்தின் ஒரு முக்கிய கட்சிக்கு ஏற்கெனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனத்தை ரஜினி தொடர்பு கொண்டாராம். அப்போது 90 நாட்களில் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க முடியுமா, அதற்கான வழிமுறைகள் ஏதாவது உண்டா என கேட்டுள்ளார். மேலும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களின் மூலம் பிரச்சாரம் செய்தால் எடுபடுமா என கேட்டுள்ளார். இதையடுத்துதான் ரஜினி இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

    English summary
    Here are the reasons for why Rajinikanth is dropping his decision to quit starting of Political party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X