RBI: தங்கம் கொள்முதலை திடீரென பாதியாக குறைத்த ரிசர்வ் வங்கி.. என்ன காரணம்?
சென்னை: நம் நாட்டின் ரிசர்வ் வங்கி தற்போது தங்கம் கொள்முதலை படிப்படியாக குறைத்து வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில் 72.6 டன் தங்கம் வாங்கிய ரிசர்வ் வங்கி, கடந்த 2025-ல் அதனை 4.02 டன்னாக குறைத்தது. கடந்த ஜனவரியில் 0.13 டன் என்ற மிக குறைந்த தங்கத்தை வாங்கிய நிலையில் அதற்கு பிறகு தங்கத்தையே வாங்கவில்லை. ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவதை நிறுத்தியது ஏன்? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முக்கிய அமைப்பாகும். இது வெளிநாட்டு நாணய கையிருப்புகளுடன் சேர்த்து தங்கத்தையும் சேமித்து வைத்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி
பொருளாதார சிக்கல்கள் அல்லது உலகளாவிய பாதிப்புகள் ஏற்பட்டால், தங்கம் பாதுகாப்பான சொத்தாக செயல்படுகிறது. அதனால் ரிசர்வ் வங்கி தங்கக் கையிருப்பை அதிகரித்து, நாட்டின் நாணய மதிப்பையும் பொருளாதார நிலைத்தன்மையையும் பாதுகாக்கிறது. இப்படி இருக்கையில் உலகத் தங்க கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி ரிசர்வ் வங்கி படிப்படியாக தங்கம் வாங்குவதை குறைத்து வருவது தெரியவந்துள்ளது. அதிலும் கடைசியாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தங்கமே வாங்கவில்லை.
உலகத் தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் துருக்கி 8 டன் தங்கத்தை விற்று இருக்கிறது. ரஷ்யா 6 டன் தங்கத்தை விற்பனை செய்து இருக்கிறது. ஆனால் போலந்து, சீனா, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகள் தங்கத்தை வாங்கி உள்ளன.
தங்கம் வாங்குவதை குறைத்துள்ளது
இந்தியாவை எடுத்து கொண்டால், கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத சராசரியாக 26 டன்னாக இருந்த தங்க கொள்முதல், நடப்பு ஆண்டின் முதல் இரு மாதங்களில் 12.5 டன்னாக குறைந்து இருக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியில் 880.3 டன் தங்க இருப்பு இருந்தது. அதே சமயம் கடந்த 2024 ஆம் ஆண்டில் 72.6 டன் தங்கம் வாங்கிய ரிசர்வ் வங்கி 2025-ல் அதனை 4.02 டன்களாக குறைத்து உள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 0.13 டன் என்ற மிக குறைந்த தங்கத்தை வாங்கி இருக்கிறது. இதற்கு பிறகு பிப்ரவரி, மார்ச் என 2 மாதங்களாக தங்கம் வாங்கவில்லை" என்று தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவதை நிறுத்தியது ஏன்? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக நிபுணர்கள் கூறியிருப்பதாவது:-
காரணம் என்ன?
ஈரான் அமெரிக்கா போர் காரணமாக சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால், தங்கம் வாங்குவதை விட அன்னியச் செலாவணி கையிருப்பை பாதுகாப்பதிலேயே ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஜனவரியில் தங்கம் விலை உச்சத்தில் இருந்தது. எனவே அப்போது கொள்முதலை தவிர்த்த ரிசர்வ் வங்கி, தற்போது விலை சரிந்து வரும் சூழலில் சந்தையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தங்கம் வாங்காமல் இருப்பது, விலை ஏற்ற இறக்கம் மற்றும் டாலரின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை" என்று கூறினர்.
ஒட்டுமொத்த அன்னிய செலாவணி
எனினும், தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த அன்னிய செலாவணி கையிருப்பில் தங்கம் தற்போது 17.2 சதவீதமாக உள்ளது. 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக, உலகில் உள்ள அனைத்து மத்திய வங்கிகளின் அன்னிய செலாவணி இருப்பில் அமெரிக்க கருவூலப் பத்திரங்களை விட தங்கத்தின் மதிப்பு அதிகரித்து இருக்கிறது.
தற்போது வங்கிகளின் இருப்பில் அமெரிக்க டாலர் 46 சதவீதமாகவும், தங்கம் 20 சதவீதம், யூரோ 16 சதவீதமாகவும் உள்ளது. இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற சூழலில், நாடுகள் காகிதப் பணத்தை விடத் தங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைப்பதையே இது காட்டுகிறது.
தங்கம் விலை சரிவு
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலையானது சரமாரியாக குறையத் தொடங்கியது. தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி இறுதியில் 1 கிராம் (24 காரட்) தங்கம் ரூ.1,752 என்ற உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நிலவரப்படி அது ரூ.1,460 ஆகக் குறைந்து இருக்கிறது. இது சுமார் 16.5 சதவீத சரிவு ஆகும்.
-
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
500 ரூபாய் நோட்டுகளுக்கு புதிய சிக்கல்? ஏடிஎம்களில் இனி 700 ரூபாய் தான் புழக்கத்திற்கு வருகிறதா -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்.. ஆர்பிஐ - மத்திய அரசு முடிவு? அப்போ ரூ.500 நோட்டின் நிலைமை என்ன? -
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
உங்கள் வீட்டு லோன் இஎம்ஐ குறையுமா? ரிசர்வ் வங்கி முடிவு என்ன.. கீதா கோபிநாத் பேட்டி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications