வெளிநாட்டில் பாலின டெஸ்ட் எடுத்தாலும் குற்றமா? யூடியூபர் இர்பான் நோட்டீஸ்.. "இதுதான்" பிரச்சனையே!
சென்னை: குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்து வெளியிடுவது தமிழ்நாட்டில் தவறு ஆகும். இந்த நிலையில் இதை வெளிநாட்டில் கண்டுபிடிப்பது பற்றி சுகாதாரத்துறை முக்கியமான சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
வலைஒளியாளர் (You tuber) இர்பான் தான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டதாகவும் அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது அங்கு குழுமியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வினை ஒளிப்படமாக எடுத்து 19.05.2024 அன்று தனது You tube Channal-ன் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர்.

மேலும், இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர், (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் திரு.இர்பான் அவர்களுக்கு 21.05.2024 அன்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இர்பான் வலையொளி செய்யப்பட்ட ஒளிப்படத்தினை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட வலையொளி தளத்திற்கும், கணிணி குற்றம் (Cyber Crime)பிரிவிற்கும் 21.05.2024 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் .
வெளிநாட்டில் செய்வது சரியா: குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்து வெளியிடுவது தமிழ்நாட்டில் தவறு ஆகும். இந்திய PCPNDT சட்டப்படி இந்த முறை தவறானது ஆம்.
இந்த நிலையில் இதை வெளிநாட்டில் கண்டுபிடிப்பது பற்றி சுகாதாரத்துறை முக்கியமான சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் வெளிநாடு சென்று பாலினத்தை சோதனை செய்வது பற்றி தனி சட்டம் இல்லை. ஆனால் அதை பொதுவில் தமிழ்நாட்டில் வெளியிடுவது தவறு ஆகும்.
வெளிநாட்டில் சோதனை செய்தாலும் தமிழ்நாட்டில் அதை வெளியிடுவது PCPNDT சட்டத்திற்கு எதிரானது. முக்கியமாக மேற்கண்ட வீடியோ காரணமாக இனி கொஞ்சம் பணம் உள்ளவர்கள் துபாய் சென்று பாலினத்தை சோதனை செய்து கண்டுபிடிக்கும் வழக்கம் உருவாகும். இதனால் குழந்தை வளர்ப்பு.. முக்கியமாக பெண் குழந்தை வளர்ப்பு சிக்கலுக்கு உள்ளாகும்.
பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்வதை தடுக்கவே PCPNDT சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் இந்தியாவில் மருத்துவர்கள் பாலினத்தை கண்டுபிடிக்க மாட்டார்கள். இப்போது மேற்கண்ட வீடியோ காரணமாக இனி கொஞ்சம் பணம் உள்ளவர்கள் துபாய் சென்று பாலினத்தை சோதனை செய்து கண்டுபிடிப்பது வழக்கம் உருவாகும்.
ஏற்கனவே இந்தியர்கள் சிலர் ரகசியமாக வெளிநாடுகளில் பாலினத்தை சோதனை செய்வது வழக்கமாக உள்ளது .ஆனால் அவர்கள் அதை இந்தியாவில் இருந்து கொண்டு பொதுவில் வெளியிடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து கொண்டு பொதுவில் பாலினத்தை வெளியிடுவது இந்த சட்டப்படி இப்போதும் குற்றம் ஆகும்.












Click it and Unblock the Notifications