Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாஜக" அண்ணாமலைக்காக சப்போர்ட்டுக்கு வந்த சீமான்! எங்கேயோ கூட்டணி இடிக்குதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை யாரும் சாதாரணமாக எடை போடாதீர்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புகழ்ந்து தள்ளியிருந்த நிலையில் சீமானோ மும்பை விவகாரத்தில் வாண்ட்டடாக அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை சீமானும், நாம் தமிழர் கட்சியை பாஜக தலைவர்களும் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் அண்ணாமலை ஒரு பேட்டியில் சீமானை புகழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.

seeman annamalai

சீமானை யாரும் சாதாரணமாக எடை போட வேண்டாம். கொள்கைக்காக ஒரு மனிதர், அந்த கொள்கை எனக்கு பிடிக்கும் பிடிக்காது என்பது தனி! தான் வைத்த கொள்கைக்காக சீமான் தனித்து, துணிச்சலாக தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். தேர்தலுக்கு தேர்தல் நிற்கிறார்.

லோக்சபா தேர்தலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் சம்மந்தமே இல்லை என்றாலும் (நாதக தேசிய கட்சி அல்ல என்பதால் அவர் அவ்வாறு சொல்கிறார்) 8.5 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார். அதுவும் வலுவான கட்சிகளுடன் போட்டியிட்டு அவர் அத்தகைய வாக்குகளை எடுத்துள்ளார். இவ்வாறு சீமானை அண்ணாமலை புகழ்ந்து தள்ளினார்.

இந்த நிலையில் மும்பை மகாராஷ்டிர நகரம் இல்லை என அண்ணாமலை கூறியதற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மண்ணின் மைந்தர்களே மண்ணை ஆள வேண்டும்" என்பதே ஒவ்வொரு தேசிய இனத்தின் இறையாண்மை கொள்கை! ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மையான உரிமை! அம்முழக்கங்களை முன்வைத்து மராட்டிய மாநில உரிமைக்காக சிவசேனா, போராடுவது 100 விழுக்காடு சரியானதே!

அதேபோன்று மராத்திய மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போரிடும் சிவசேனா கட்சியின், தாய்மொழி கொள்கையும் 100 விழுக்காடு சரியானதே! தேசிய இனங்களின் உரிமைக்காக போராடும் அனைத்து தேசிய இன மக்களின் கருத்தோடும் உடன்படுகின்றோம். தேசிய இனங்களின் உரிமை மீட்புக்கான போராட்டத்தில் மராத்திய மாநில உரிமைக்காக குரல் கொடுக்கவும், துணை நிற்கவும் தயாராக உள்ளோம்!

ஆனால், மும்பை மாநகராட்சி தேர்தல் பரப்புரையின்போது, அம்மண்ணில் நின்று தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் தம்பி அண்ணாமலை, 'மும்பை மராத்தியர்களின் நகரம் அல்ல, பன்னாட்டு நகரம்' என்று பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்; அதை ஏற்பதும், எதிர்ப்பதும் அவரவரின் சனநாயக உரிமை! ஆனால், மும்பைக்கு வந்தால் தம்பி அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன் என்பதெல்லாம் கடும் கண்டனத்திற்குரியது.

தம்பி அண்ணாமலையின் கருத்தியல், கோட்பாடு அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் முற்றிலும் முரண்படுகிறோம். அதற்கு நேர் எதிரான, அரசியலை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
இருப்பினும், தம்பி அண்ணாமலையின் கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக, தம்பி அண்ணாமலை மும்பையில் கால்வைத்தால் வெட்டுவேன் எனும் கொடும்போக்கு ஒரு போதும் ஏற்புடையதல்ல.

அண்ணாமலை ஒரு தனி நபர், ஒரு கட்சியைச்சேர்ந்தவர், குறிப்பிட்ட கொள்கையை ஏற்றவர் என்பதை மட்டும் கருத்தில்கொண்டு பேசுவது ஏற்புடையதல்ல; ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு தம்பி அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும்; அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்களை வழிநடத்தும் மதிப்புமிக்கத் தலைவர் பெருமக்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது சரியானதல்ல;

கடந்த காலங்களில் ஆந்திர காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் கேட்க நாதியில்லை; நடுக்கடலில் மீனவர்கள் தமிழர்கள் என்பதால் சுட்டுக்கொல்லப்பட்ட போதும் கேட்க நாதியில்லை; அப்படி ஒரு நிலை தமிழ் மண்ணில் இன்று இல்லை. அண்ணாமலை தனி நபரல்ல; முதலில் அவர் தமிழ்த்தேசிய இனத்தின் மகன்.

தம்பி அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம். தம்பி அண்ணாமலை குறித்த ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது!

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை சீமானை பாராட்டுவதும், சீமான் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும் என இருக்கிறார்கள்.

காலம் காலமாக நாம் தமிழர் கட்சி, பாஜகவின் பி டீம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இதை சீமான் மறுத்து வருகிறார். இந்த நிலையில் பாஜகவில் அண்ணாமலை பெரிய பொறுப்பில் இல்லாவிட்டாலும் டெல்லி தலைமையுடன் இணக்கமாக இருக்கும் அண்ணாமலைக்கு சீமான் ஆதரவு தெரிவித்து பேசியது சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தன.

எனினும் சிலர், மண்ணுக்காக மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக என எல்லா கட்சிகளும் ஒன்றிணையும் போது தமிழருக்காக (அண்ணாமலை) தமிழின போராளி என சொல்லிக் கொள்ளும் சீமான் ஆதரவு தெரிவிப்பதில் என்ன தவறு என்ற வாதமும் மேலோங்கியுள்ளது. இதெல்லாம் தேர்தல் கூட்டணியில் பிரதிபலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+