"விடிவுகாலம்".. இந்த 2 தமிழ்நாட்டு வீரர்களை எடுங்க.. ஐபிஎல்லில் சொல்லி சொல்லி அடித்த தமிழ் "பாய்ஸ்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் 2023 தொடரில் இரண்டு தமிழ்நாட்டு வீரர்கள் ஆடும் விதம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இவர்களை இந்திய அணிக்குள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

2023 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. குஜராத் அணி கடந்த வருடம் போலவே இந்த வருடமும் வெற்றிகளை குவித்து வருகிறது.

இன்னொரு பக்கம் மும்பை அணி எப்போதும் போல முதல் போட்டி தோல்வியோடு தொடங்கி உள்ளது. சிஎஸ்கே அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியோடு ஆடி வருகிறதில்லை. லக்னோ, ஹைதராபாத் அணிகள் நல்ல டீம் இருந்தும் தோல்வி அடைந்துள்ளன.

இரண்டு தமிழர்கள்

இரண்டு தமிழர்கள்

இந்த தொடரில் இரண்டு தமிழர்கள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டனர். முதல் வீரர் சாய் சுதர்ஷன். சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், நேற்று டெல்லி அணிக்கு எதிராக சாய் சுதர்சன் சிறப்பாக ஆடினார். நேற்று டெல்லி அணிக்கு எதிராக அவுட்டாகாமல் ஆடிய இவர் 48 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று மொத்தம் 62 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் டாப் ஆர்டர் சொதப்ப இவர் விக்கெட்டை இழக்காமல் முதலில் மெதுவாக ஆடிவிட்டு அதன்பின் அதிரடி காட்டினார். சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் இவர் அதிரடியாக 17 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம்.

நன்றாக ஆடுகிறார்

நன்றாக ஆடுகிறார்


இரண்டு போட்டியிலும் இவரின் ஆட்டம் நன்றாக இருந்தது. முக்கியமாக மிடில் ஓவர்களில் ஓவர் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்ட விதம், டெத் ஓவர்களில் வேகம் எடுத்தது எல்லாம் சிறப்பாக இருந்தது. முக்கியமாக டி 20 போட்டிகளில் ஒரு வீரர் நன்றாக ஆட வேண்டும் என்றால் வேகமாக ஆடுவதை தாண்டி அவர் ஆங்கர் செய்து ஆட வேண்டும். அதாவது ஆட்டத்தில் விக்கெட்டை இழக்காமல் ஆடி கடைசி கட்டத்தில் வேகத்தை அதிகரிக்கும் யுக்தி தெரிந்து இருக்க வேண்டும். அது சாய் சுதர்ஷனிடம் இருந்தது நேற்று அப்பட்டமாக தெரிந்தது.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இவரின் ஆட்டத்தை பார்த்த ஹர்திக் பாண்டியா கூட நேற்று.. சாய் சுதர்ஷன் சிறப்பாக ஆடினார். ஐபிஎல்லிலும் இந்திய அணியிலும் அவர் இதே போல சாதனைகளை தொடர்ந்து செய்வார் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறி இருந்தார். கிட்டத்தட்ட இவரை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று ரகசியமாக சிக்னல் கொடுத்து இருந்தார். ஹர்திக் பாண்டியா இந்திய டி 20 அணியின் எதிர்கால நிரந்தர கேப்டனாக வாய்ப்புகள் உள்ளதால் பெரும்பாலும் சாய் சுதர்ஷனுக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

இன்னொரு வீரர் நடராஜன். கடந்த ஐபிஎல் சீசன்களிலும் நடராஜன் சிறப்பாகவே பவுலிங் செய்தார். முக்கியமாக இந்திய அணிக்காக ஆடிய அவர், ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி 20 தொடரில் சிறப்பாக பவுலிங் செய்தார். அவ்வளவு சிறப்பாக அவர் பவுலிங் செய்தும் கூட அவருக்கு அதன்பின் வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற ஆவேஷ் கான் ஆசிய கோப்பை தொடரில் மோசமாக ஆடினார். புவனேஷ்வர் குமாரும் மோசமாக பவுலிங் செய்து வருகிறார். ஆனால் அவர்களுக்கு எல்லாம் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாறாக ஒரு தொடரில் நன்றாக ஆடியும் கூட நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அவர் முன்பு காயத்தில் இருந்தாலும் இப்போது காயம் இல்லை என்பதால் அவரை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஐபிஎல்

ஐபிஎல்

இந்த நிலையில்தான் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பவுலிங் செய்தார். ஹைதராபாத் அணியில் எல்லோரும் 8 - 10 ரன்களை ஓவருக்கு கொடுத்த போது 7 ரன்களை தாண்டாமல் கட்டுப்பாட்டோடு பவுலிங் செய்தார். அதோடு டெத் ஓவர்களில் யார்க்கர்களை அள்ளி வீசி பெரிதாக ரன் கொடுக்காமல் சமாளித்தார். மேலும் 2 விக்கெட்டுகளையும் 3 ஓவரில் எடுத்து வெறும் 23 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். இதனால் இவரையும் மீண்டும் இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+