கோயம்பேட்டில் பஸ் ஏற போனவர்களுக்கு ஷாக்.. சனி ராத்திரி கூடவா.. கண்ட காட்சி.. அதிர்ந்து போன மக்கள்
சென்னை: நள்ளிரவில் கோயம்பேட்டில் அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதியால் பரபரப்பு ஏற்பட்டது. விடுமுறையை முன்னிட்டு மக்கள் பலரும் சொந்த ஊருக்கு திரும்பியதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பேருந்து நிலையத்தில் இரவு முழுக்க மக்கள் நின்றதால் கோயம்பேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும்.
இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதேபோல் கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,183 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
பேருந்து நெரிசல்:

கூட்டம்:
வகையில் நேற்று நள்ளிரவில் கோயம்பேட்டில் அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதியால் பரபரப்பு ஏற்பட்டது. விடுமுறையை முன்னிட்டு மக்கள் பலரும் சொந்த ஊருக்கு திரும்பியதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பேருந்து நிலையத்தில் இரவு முழுக்க மக்கள் நின்றதால் கோயம்பேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
ஞாயிறு விடுமுறை, மே 1ம் தேதி விடுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் பலரும் பேருந்து கிடைக்காமல் கடுமையாக அவதிப்பட்டனர்.

நேற்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.
போக்குவரத்து மாற்றம்
மக்கள் கூட்டம் காரணமாக சென்னையில் போக்குவரத்தும் மாற்றப்பட்டு இருந்தது,
சென்னைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் வருகிறார்கள். அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளில் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
பொதுவாக இந்த பேருந்துகள் இரண்டு - மூன்று ரூட்களை பயன்படுவது வழக்கும். பெருங்களத்தூர் வழியாக கிண்டி, வடபழனி என்று வருவது ஒரு வகை.
போக்குவரத்து
இரண்டாவது ஓஎம்ஆர் வழியாக கிண்டி, வடபழனி வழியாக கோயம்பேடு வருவது இன்னொரு பக்கம். கடைசியாக சில பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக செல்லும். இதனால் வடபழனி, கிண்டி செல்ல விரும்பும் பயணிகள் நேரடியாக செல்ல முடியாமல் கோயம்பேட்டில் இறங்கி செல்ல வேண்டி இருக்கும்.
கோயம்பேட்டில் இறங்கி மெட்ரோவிலோ அல்லது ஆட்டோ, பஸ்ஸிலோ செல்ல வேண்டி இருக்கும். இந்த நிலையில்தான் சென்னை வரும் பேருந்துகளுக்கு புதிய போக்குவரத்து விதிகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விதித்து உள்ளது.
அதன்படி தினமும் சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது. தாம்பரம் கிண்டி வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் மார்க்கத்தில் செல்லலாம். மாலை 5 மணிக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
முக்கியமாக தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் என்பதால் மதுரவாயல் சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Click it and Unblock the Notifications