1 வருடம்தான் தேர்தலுக்கு.. அதிமுக எதிர்பார்க்காத இடத்தில்.. திமுக வைத்த செக்.. பட்ஜெட்டில் 6 சிக்ஸர்
சென்னை: 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் மட்டுமே உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான். அடுத்த வருட பட்ஜெட் பாதி பட்ஜெட்தான்.
முழு பட்ஜெட் கடைசியாக தாக்கல் செய்யப்படுவதால் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நீண்ட நேரம் எடுக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. 2 மாத ஆய்விற்கு மேல் உருவாக்கப்பட்ட பட்ஜெட் இன்று தாக்கல் செய்ய மட்டும் இரண்டரை மணி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முழுக்க 200க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு பட்ஜெட் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. மக்களிடம் பட்ஜெட் சென்று சேர வேண்டும்.. அரசு வழங்கும் அறிவிப்புகள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்று திமுக இந்த முடிவை எடுத்துள்ளது. இதில் திமுக வெளியிட்ட 6 அறிவிப்புகள் மக்களிடம் பெரிய கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக தேர்தலை மனதில் வைத்து இந்த 6 அறிவிப்புகள் வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
1. அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி (அ) மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. ஏற்கனவே பெண்கள் ஆதரவு திமுக பக்கம் உயர்ந்து வரும் நிலையில் பெண்களை ஆதரிக்கும் விதமாக இன்னும் பல அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும். பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது.. மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும். ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெற்றிடாத மகளிருக்கு மீண்டும் உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். எல்லோருக்கும் பணம் கிடைக்கும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
3. பெண்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்தால் பதிவுக் கட்டணம் 1% குறைவு. ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகளின் பத்திரப் பதிவுகளுக்கும் இது பொருந்தும். விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது.
4.. சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நகரம் அமைக்கப்படும். இதில் ஐடி பார்க்குகள், பன்னடடுக்கு கட்டிடங்கள், புதிய ஐடி நிறுவனங்கள், மெட்ரோ, உலக தர வசதி, புதிய நிறுவனங்கள், வெளிநாட்டில் இருப்பது போன்ற வசதிகளுடன் குளோபல் சிட்டி அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக தரமான வசதிகள் எல்லாம் இருக்கும் வகையில் இந்த சிட்டி அமைக்கப்பட உள்ளது.
5. சரண்டர் பணபலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணியாளர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பில் வருடந்தோறும் 15 நாட்களை ஒப்பளிப்பு செய்து பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்மொழிக் கொள்கை ஏற்க மறுப்பால் ரூ.2152 கோடி தராத மத்திய அரசை கண்டிக்கிறோம். ஆனால் அதற்காக அவர்களின் 3 மொழிக்கொள்கையை ஏற்க முடியாது. மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு ரூ.2150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது. இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என உறுதியாக உள்ள முதல்வரின் பக்கம் நின்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
6. சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications