ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடி காட்டும் பழனிச்சாமி.. 5 மாதத்தில் 116 அதிகாரிகள் மாற்றம்.. பகீர் காரணம்!
பல்வேறு முக்கிய காரணங்களுக்கு தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: பல்வேறு முக்கிய காரணங்களுக்கு தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து இப்படி செய்வதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் என்று மாற்றப்பட்டு வருகிறார்கள். இன்றும் கூட 150 டிஎஸ்பிக்கள் அதிரடியாக தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கடந்த 5 மாதத்தில் மட்டும் 28 ஐஎஸ்எஸ் அதிகாரிகள் மற்றும் 88 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5 மாதத்தில் இப்படி அதிரடியாக பலர் மாற்றம் செய்யப்பட்டது, ஆளும் தரப்பிலேயே சிலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

யார் எல்லாம்
முக்கியமாக தமிழக தலைமைச் செயலாளராக கே சண்முகம் நியமிக்கப்பட்டார். டிஜிபியாக கே திருப்பாதி நியமிக்கப்பட்டார். நேற்றும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். புதிய தமிழக பொதுப்பணித்துறை செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் மணிவாசன் இதற்கு முன் சமூக நலத்துறை செயலாளராக இருந்தார்அதேபோல் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த பிரபாகர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிலர் மாற்றம்
பிரபாகர் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய சமூக நலத்துறை செயலாளராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுமதி இதற்கு முன் நுகர்பொருள் விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக இருந்தார். இதனால் நுகர்பொருள் விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக தற்போது கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

என்ன அதிரடி
இப்படி அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்படுவதற்கு நிறைய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது. அதில் முக்கிய காரணம் தேர்தல் தோல்வி என்கிறார்கள். லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் படு தோல்வி அடைந்தது. இதற்கு அதிகாரிகள் சரியாக அவர்களுக்கு கொடுத்த டாஸ்குகளை செய்யவில்லை என்பதும் ஒரு காரணம் என்கிறார்கள்.

சரி இல்லை
அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏக்கள் இடையே சரியான பேச்சுவார்த்தை நிகழவில்லை. இதனால்தான் ஆட்சியில் இருந்தும் கூட தோல்வியை தழுவி இருக்கிறோம் என்று முதல்வர் பழனிச்சாமிக்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறது. திறமையான நபர்களை பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவும் பணியிட மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள்.

யார்
அதேபோல் மிக முக்கியமாக தலைமை செயலாளர் பதவிக்கு சண்முகம் உள்ளிட்ட நேர்மையான திறமையான அதிகாரிகளை நியமித்ததும் இதனால்தான் என்று கூறுகிறார்கள். ஆனால் இது மட்டும் அதிகாரிகளின் பணியிட மாற்றத்திற்கு காரணம் கிடையாது. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.

இரண்டு பேர்
அதிமுகவில் இரண்டு பிரிவாக தலைவர்கள் பிரிந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் முதல்வர் பிறப்பிக்கும் சில முக்கிய உத்தரவுகளை அதிகாரிகள் கேட்பது இல்லை எனப்படுகிறது. அதிமுகவில் ஒருவர் ஒரு ஆணையும், இன்னொருவர் வேறு ஆணையும் பிறப்பிப்பதால் அதிகாரிகள் குழம்பி வருகிறார்கள்.

ஸ்டைல்
இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா ஸ்டைலில் தனக்கு தோதான அதிகாரிகளை பார்த்து முக்கிய பொறுப்பில் அமர்த்தி வருகிறார். தன்னுடைய கட்டுப்பாட்டில் எல்லா அதிகாரிகளும், துறைகளும் இருக்க வேண்டும் என்று இப்படி செய்து வருகிறார் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications