Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எவ்வளவு நேரம் I'm Waiting bro! ராகுலே பேசிட்டார்! இன்னும் வாயை திறக்காத விஜய்! இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜயின் கடைசி படமான 'ஜனநாயகன்' வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் 'ஜனநாயகன்' படத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி குரல் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் தனது படத்துக்காக இன்னும் விஜய் பேசவே இல்லை. தற்போது எதை பேசினாலும் பாஜக மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் விஜய் அமைதி காப்பதாக சொல்கின்றனர்.

விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத விவகாரம் தற்போது தேசிய அரசியல் அரங்கிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி 9-ம் தேதி பொங்கல் வெளியீடாக வெளியாக இருந்த இந்த படம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தணிக்கை வாரிய நடவடிக்கைகளால் வெளியாக முடியாமல் போனது.

இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, விஜய்க்கு ஆதரவாக வெளிப்படையாக குரல் கொடுத்துள்ளார்.

vjay rahul gandhi jana nayagan

ஜனநாயகன் தணிக்கை சர்ச்சை

'ஜனநாயகன்' திரைப்படத்தை தடுக்க முயற்சிப்பது, தமிழ் கலாசாரத்தின் மீதான நேரடி தாக்குதல் என அவர் குற்றம் சாட்டியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஜனநாயகன் திரைப்படத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல். தமிழக மக்களின் குரலை அடக்கி, நீங்கள் எப்போதும் வெல்ல முடியாது மோடி அவர்களே" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜனநாயகன் ரிலீஸ் பிரச்சனை

இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்கள் ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னதாகவே, 'ஜனநாயகன்' திரைப்பட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் குரல் கொடுத்து வந்தனர். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர், தணிக்கை வாரியத்தின் நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என விமர்சித்திருந்தனர்.

ராகுல் விஜய்க்கு ஆதரவு

அந்த வரிசையில், தற்போது நேரடியாக ராகுல் காந்தியே கருத்து தெரிவித்திருப்பது, இந்த விவகாரத்தின் அரசியல் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது. இதற்கிடையில், கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாகவும் தவெக தலைவர் விஜய் தற்போது மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விஜய் நேற்று நேரில் ஆஜராகி சுமார் 7 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

சிபிஐ விசாரணை

விசாரணை முடிந்து அவர் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், வரும் 19ஆம் தேதி மீண்டும் விசாரணக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒருபுறம் சிபிஐ விசாரணை, மறுபுறம் திரைப்பட தணிக்கை சர்ச்சை என விஜய் மீது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான அழுத்தங்கள் அதிகரித்திருக்கும் சூழலில், ராகுல் காந்தியின் ஆதரவு அரசியல் ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கரூர் துயர சம்பவம் நடந்த காலகட்டத்திலேயே விஜய்யிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியானது.

தவெக - காங்கிரஸ்

ஆனால் அந்த உரையாடல் குறித்த விவரங்கள் வெளியில் வரவில்லை. தற்போது நேரடியாக சமூக வலைதளத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது, அந்த தொடர்பை மீண்டும் நினைவூட்டியுள்ளது. மேலும், தவெக மற்றும் காங்கிரஸ் இடையிலான நெருக்கம் குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் ஏற்கனவே விவாதங்கள் நடந்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த பதிவு திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள போதும், தவெகவுடன் காங்கிரஸ் நெருக்கம் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகன்

இதனால், 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான தணிக்கைச் சர்ச்சை, ஒரு திரைப்பட விவகாரமாக மட்டுமின்றி, தற்போது மாநிலம் மற்றும் தேசிய அரசியல் அரங்கில் முக்கிய விவாதப் பொருளாக மாறி வருகிறது. இப்படி ராகுல் காந்தி பேசி இருப்பதன் மூலம் ஜனநாயகன் திரைப்படம் தேசிய அளவில் கவனத்தை பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் இது தொடர்பாக விஜய் ஒரு முறை கூட கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜக

இந்த நிலையில் விஜய் பேசாததற்கான காரணம் என்ன என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைக்கு ஜனநாயகன், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ ர்விசாரணை என இரு சிக்கல்களில் விஜய் மாட்டியிருக்கும் நிலையில் எதை பேசினாலும் பாஜகவின் மத்திய அரசிடமிருந்து கடுமையான எதிர்வினையை சந்திக்க வேண்டும். தற்போதைய சூழலில் பொங்கல் அல்லது அதற்கு பிறகாக ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதுதான் விஜயின் எண்ணம். தற்போதைக்கு எது பேசினாலும் பிரச்சனை ஆகும் என்பதால், அமைதி காக்கலாம் எனவும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்து உறுதியானால் பாஜகவை நேரடியாகவே தாக்கி பேச விஜ திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+