புழல் சிறையில் உள்ள யூடியூபர் ஸ்ரீ விஷ்ணுகுமார் வேறு ஒரு வழக்கில் கைது.. மனைவி மீதும் வழக்கு
சென்னை: கோவையை சேர்ந்தவர் விஷ்ணு என்ற ஸ்ரீ விஷ்ணுகுமார் என்பவர் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் பிரபல யூடியூபர் ஆவார். இவரது மனைவி அஷ்மிதா.. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் அஷ்மிதாவின் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீ விஷ்ணுகுமார். இந்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக எழுந்த புகாரிலும் ஸ்ரீ விஷ்ணுகுமார் கைதாகி உள்ளார்.
கோவையை சேர்ந்தவர் விஷ்ணு என்ற ஸ்ரீ விஷ்ணுகுமார் (வயது 32). பிரபல யூடியூபரான இவரது மனைவி அஷ்மிதா (33). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் நண்பர் ஒருவரின் தங்கைக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி உல்லாசத்திற்கு அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரது நண்பர்கள் சிலர் ஸ்ரீவிஷ்ணுகுமாரை பார்ட்டிக்கு அழைத்து இளம் பெண்ணுக்கு அனுப்பியதாக கூறி ஒரு குறுஞ்செய்தியை காட்டி உதைத்து கண்டித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியது.

1 கோடி பணம் கேட்டு கடத்தல்
ஆனால் யூடியூபரான ஸ்ரீவிஷ்ணுகுமார் கடந்த ஏப்ரல் 23ம் தேதி தன்னை கடத்தி ரூ.1 கோடி பணம் கேட்டு தாக்கிய நபர்கள் மீது புகார் அளித்தார். ஆனால் நாங்கள் யாரையும் கடத்த வில்லை என்றும், விஷ்ணுகுமார் ஐபோனை அவரது மனைவி அஸ்மிதா தான் அனைத்து பாஸ்வேர்டு மற்றும் இன்ஸ்டாகிராம் முகப்பு பக்கங்களை மாற்றினார். இதற்கும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று எதிர் தரப்பினர் புகார் அளித்தனர். இந்த இரண்டு புகார்கள் மீது போலீசார் விசாரணை நடத்தினர்.
கூடுதல் டிஜிபியுடன் நட்பு
யூடியூபர் ஸ்ரீவிஷ்ணுகுமார் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது மனைவி அஸ்மிதா மீது புகார் அளிக்க வேண்டாம் என்று எங்கள் வீட்டின் எதிரே குடியிருக்கும் கூடுதல் டிஜிபி ஒருவர் தன்னிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் மீது புகார் அளிக்கவில்ல, தனது மனைவிக்கும் கூடுதல் டிஜிபிக்கும் இடையே நட்பு உள்ளது என்று கூறியதாக கூறப்படுகிறது.
மனைவி புகார்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், ஸ்ரீவிஸ்ணுகுமார் மனைவி ஒப்பனை கலைஞரான அஸ்மிதா விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் எனது கணவர் தன்னை திருமணம் செய்து நம்பிக்கை மோசடி செய்துவிட்டார் என்றும் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. எனது சொத்துக்களை அபகரிக்கும் வகையில் மிரட்டியும் தாக்கியும் வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
ஸ்ரீவிஷ்ணுகுமார் கைது
மேலும் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் அவதூறு கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்து வருவதாகவும் கூறினார். இதையடுத்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்திய போலீசார், ஸ்ரீவிஷ்ணுகுமார் மீது நம்பிக்கை மோசடி, தாக்குதல், மானபங்கம் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்
மனைவி மீது வழக்கு
இந்த நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் யூடியூபர் விஷ்ணு மற்றும் அவரது மனைவி அஸ்மிதா மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறையில் இருக்கும் விஷ்ணுவை இந்த மோசடி வழக்கில் கைது செய்தனர். அவரது மனைவி அஷ்மிதா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
