அமெரிக்காவில் இருந்து இதுவரை நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில்.. ஒருவர் கூட தமிழர் இல்லை! ஏன் தெரியுமா?
சென்னை: அமெரிக்காவில் இருந்து இதுவரை நாடு கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 400 பேரில் ஒருவர் கூட தமிழர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் விரிவாக சொல்லப்போனால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த யாருமே இதில் கிடையாது.
அமெரிக்காவில் இருந்து 4 கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதுவரை 4 கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில்.. 5ம் கட்டமாக அடுத்த வாரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். நேற்று 4ம் கட்டமாக 12 பேர் வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 15 நாட்களில் 334 இந்தியர்கள் நாடு அமெரிக்க அரசால் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் கடந்த வாரம் தரையிறங்கியது.
இவர்களில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மற்றும் 31 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் இருந்து தங்கள் மாநிலத்தவர்களை வால்வோ பேருந்தில் ஹரியானா பாஜக அரசு, அழைத்துச் சென்றுள்ளது. இதுவரை நாடு கடத்தப்பட்டவர்களில் குஜராத்திகள், ஹரியானாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
தென்னிந்தியர்கள் இல்லை:
அங்கே இந்தியர்கள் பலர் அதிகார பூர்வமற்ற முறையில் குடியேறி உள்ள நிலையில் அவர்கள் வெளியேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இப்படி அமெரிக்காவில் இருந்து இதுவரை நாடு கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 400 பேரில் ஒருவர் கூட தமிழர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் விரிவாக சொல்லப்போனால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த யாருமே இதில் கிடையாது. இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
1. தமிழர்கள் ஆவணங்கள் இன்றி அமெரிக்காவிற்கு செல்வது இல்லை. முறையான விசா வாங்கியே செல்கின்றனர்.
2. தமிழர்கள் பொதுவாக ஏமாற்றி அமெரிக்கா செல்லும் வகையில் செயல்களில் ஈடுபடுவது குறைவு.
3. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் அங்கே முறையாக வேலை விசா வாங்கி சென்று.. கிரீன் கார்டு பெற பல வருடம் காத்திருப்பவர்கள்.
4. கிரீன் கார்டு பெறுவது என்பது அங்கே உள்ள தமிழர்களின் குறிக்கோள்களில் ஒன்று. அப்படி இருக்க ஆவணங்கள் இன்றி சென்றால் கிரீன் கார்டு எல்லாம் பெற முடியாது.
5. வேலை இன்றி படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் தமிழர்கள் பலரும் பொதுவாக அங்கே படிப்பு முடித்து overstay செய்வது இல்லை. அது சட்ட விரோதம் என்பதால் திரும்பி வந்துவிட்டு அதன் பின்பே வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
குஜராத்திகள் அதிகமாக நாடு கடத்தல்
முதல் கட்டமாக நாடு கடத்தப்பட்டவர்களில்,
ஹரியானா - 35
குஜராத் - 33
பஞ்சாப் - 31
உத்தரப்பிரதேசம் - 3
மகாராஷ்டிரா - 2
குஜராத்திகள் பலர் கடந்த சில மாதங்களாக 1 கோடி ரூபாய் எல்லாம் தந்து அமெரிக்காவிற்கு ஆவணங்கள் இன்றி செல்லும் நிலையில்தான் இப்படி நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு இப்படி வரலாம்.
வட இந்தியர்கள்தான் அதிகம்
இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 199 பேரில் 67 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி நாடு கடத்தப்பட்டவர்களில் தென்னிந்தியர்கள் யாரும் கிடையாது. வடஇந்தியர்கள் மட்டுமே இதுவரை நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
செலவு எவ்வளவு:
இந்த ராணுவ விமானத்தில் ஒருவரை நாடு கடத்த குறைந்தபட்சம் $4,675 (ரூ. 4.07 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு வணிக விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலையை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
ICE வகை விமானங்களை நாடு கடத்த பயன்படுத்தினால் மிகவும் மலிவு விலையில் அதாவது ஒரு நபருக்கு ரூ. 55,000 என்ற செலவில் நாடு கடத்த முடியும்.
ஆனால் சாதாரண விமானத்தில் நாடு கடத்தி அது விபத்துக்கு உள்ளானால்.. அது இரண்டு நாட்டு பிரச்சனையாக மாறும். வேறு நாட்டு குடிமகனை கொன்றதாக மாறிவிடும். இதை தடுக்கவே C-17 போர் விமானத்தை டிரம்ப் பயன்படுத்துகிறார்.
நாடு கடத்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் C-17 போக்குவரத்து விமானம், ஒரு மணி நேரத்துக்கு $28,500 (ரூ. 24,90,559) இயக்கச் செலவாகும், இந்தியாவுக்குச் செல்லும் விமானம் 12 மணி நேரத்திற்கும் அதிகமாகும். கிட்டத்தட்ட 48 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதாவது 119546832 ரூபாய் செலவு. அதாவது 200 பேர் நாடு கடத்தப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 6 லட்சம் வரை செலவு ஆகும். அமெரிக்க அரசின் துல்லியமான கணக்குப்படி ஒரு நபருக்கு நான்கரை லட்சம் செல்வாக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications