ஆயுதங்களாகும் சமூக தளங்கள்.. வலை விரிக்கும் காமுகர்கள்! சிக்கும் மாணவிகள் -அதிர வைத்த சென்னை ஸ்ரீதர்
சென்னை: வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் குற்றங்களை தடுக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட, மறுபக்கம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு குற்றங்களை செய்து வருகிறார்கள் குற்றவாளிகள்.
முன்பெல்லாம் நேரில், பணியிடங்களில், பள்ளி, கல்லூரிகளில் பெண்களை ஏமாற்றி வந்த காமுகர்கள் இணையதள பயண்பாடு அதிகரிக்க தொடங்கிய பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களை ஏமாற்றினர். தற்போது இது ஷேர்சாட் வரை நீண்டிருக்கிறது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி. இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு விட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கணவர் ஸ்ரீதர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

செல்போன் ஆடியோ
இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி வைதீஸ்வரி இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர் வைதீஸ்வரியை தாக்கியதுடன் செல்போனை உடைத்துவிட்டு வீட்டைவிட்டு சென்று உள்ளார். இதன்பின்னர் சில நாட்கள் கழித்து வைத்தீஸ்வரி, கணவர் ஶ்ரீதரின் செல்போனை சரி செய்து அழிக்கப்பட்ட தரவுகளை மீட்டபோது சில ஆடியோக்களை அவர் பார்த்து இருக்கிறார்.

ஷேட்சாட் செயலி
அதில் கணவர் ஸ்ரீதர் ஷேர் சாட் செயலி மூலமாக பல கல்லூரி பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்ட பலரிடம் பழகி வந்ததை வைத்தீஸ்வரி கண்டுபிடித்தார். அத்துடன் பல பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் ஸ்ரீதர் இருந்துவந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பெண்களிடம் ஸ்ரீதர் பேசிய ஆடியோக்களை வைத்தீஸ்வரி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கல்லூரி மாணவியுடன் திருமணம்
வைதீஸ்வரி உடனான திருமணத்தை மறைத்து மேட்டுப்பாளையத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி உடன் ஆப்பில் பேசி நம்ப வைத்து நெருக்கமாக பழகியுள்ளார். அப்பெண் ஶ்ரீதரிடம் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். இதனையடுத்து பெண்னை வீட்டிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.

கைவிடப்பட்ட மாணவி
பின்னர் அப்பெண்ணுடன் சில வாரங்கள் இருந்துவிட்டு தொழில் நிமித்தமாக செல்வதாக கூறி அங்கிருந்து சென்னை வந்து தங்கி இருந்துள்ளார். மேலும் இந்த ஷேர்சாட் வாயிலாக கல்லூரி மாணவிகளை குறிவைத்து தொடர்ந்து ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

காவல் நிலையத்தில் புகார்
இதனை அறிந்து கணவரிடம் கேட்ட வைதீஸ்வரியை கர்ப்பிணி என்றும் பாராமல் ஸ்ரீதர் கடுமையாக தாக்கி தலைமறைவானதாக கூறப்படுகிறது. எனவே முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பல பெண்களை ஏமாற்றி வரும் தனது கணவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 11ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.

15 சவரன் நகை
ஆனால் புகார் மீது காவல்துறை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து வைதீஸ்வரி கூறுகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் தங்களுக்கு திருமண நடைபெற்றதாகவும் திருமணம் நடைபெற்று சில காலம் சேர்ந்து வாழ்ந்ததாகும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த 15 சவரன் நகைகளை அடகு வைத்து விற்பனை செய்து பல பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.

போலீஸ் விசாரணை
எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று இல்லையெனில் பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் எனவும் தெரிவிக்கும் வைதீஸ்வரி, தனக்கும் குழந்தைக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அம்பத்தூர் அனைத்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பெண்களை ஏமாற்றி வரும் ஸ்ரீதரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications