பால் எடுத்து கொண்டு வந்த பிரபா.. பின்னாடியே வந்த 2 "பாய் ஃபிரண்டுகள்".. சீனிவாசனின் பரிதாப முடிவு!
கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை: தூங்க சென்ற கணவனுக்கு குடிப்பதற்கு பாலை எடுத்து வந்து தந்துள்ளார் பிரபா.. அந்த பாலில் மாத்திரையை கலந்து தந்துள்ளார்.. அதற்கு பிறகுதான் 2 ஆண் நண்பர்களை வீட்டிற்குள் வரவழைத்து, அந்த கொடூர செயலை செய்துள்ளார்.
கோபி அருகே உள்ளது குள்ளம்பாளையம்.. இங்கு வசித்து வந்தவர் சீனிவாசன்.. 45 வயதாகிறது.. கோபியிலேயே சலூன் கடை வைத்திருந்தார்.. மனைவி பெயர் பிரபா. 36 வயதாகிறது.. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி காலையில் பிரபா, தன்னுடைய மகளை அழைத்து கொண்டு மளிகை சாமான்களை வாங்க சென்றார்.. திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் சீனிவாசன் மயங்கி விழுந்து கிடந்தார்..

கதறல்
இதனால் பதறி போன பிரபா கதறி கதறி அழுது, கணவனை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்.. ஆனால், சீனிவாசன் ஏற்கனவே மூச்சு திணறி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.. தகவலறிந்து கோபி போலீசார் விரைந்து வந்தனர்.. சடலத்தை கைப்பற்றி பெருந்துறை ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவக்கினர். ஒரு க்ளுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.. அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில் சீனிவாசனை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கூறப்பட்டது.

கொலையாளி?
இதையடுத்து, தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, கொலையாளி யார் என்று போலீசார் தேடி வந்தனர். அப்போதும் ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில், சீனிவாசனின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததாக, அவருடைய உறவினர்கள் புகார் ஒன்று தரவும், பிரபாவின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை போலீசார் கண்டனர்.. அதனால், பிரபாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர் போலீசார்... விசாரணையை ஆரம்பிக்கும்போதே உண்மையை ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டார் பிரபா.

போன்
பிரபா பார்ப்பதற்கு அழகாக இருப்பாராம்.. நிறைய ஆண் நண்பர்களும் இருந்துள்ளனர்.. அதனால், எந்நேரமும் அவர்களிடம் போனில் பேசிக் கொண்டே இருப்பாராம்.. தற்போது லாக்டவுன் என்பதால் சீனிவாசன், சலூன்கடையை திறக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளர்.. அப்போதுதான் பிரபாவின் நடவடிக்கைகள் அவருக்கு பலத்த சந்தேகத்தை தந்துள்ளது..

கொலை
இதனால், இவர்களுக்குள் தகராறும் வெடித்துள்ளது.. அதனால், கணவனை கொன்றுவிடுவது என்று பிரபா முடிவெடுத்துள்ளார்..இதற்காக வெள்ளியங்கிரி என்ற 40 வயது நபர், சரவணன் என்ற 30 வயது நபர்களின் உதவியுடன் கொலை செய்ய முடிவானது.. கடந்த 21-ந் தேதி இரவு சீனிவாசன் தூங்குவதற்கு முன்பு பாலில் தூக்க மாத்திரையை கலந்து பிரபா கொடுத்துள்ளார்..

கைது
இதை குடித்துவிட்டு சீனிவாசன் மயங்கியதும், வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வெள்ளியங்கிரி, சரவணனை உள்ளே அழைத்து வந்துள்ளார் பிரபா.. நண்பர்கள் 2 பேரும் சீனிவாசன் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்றுள்ளனர்.. கழுத்தை நெரிக்கும்போது, சீனிவாசன் வலியால் துடித்துள்ளார்.. அப்போது அவரது கால்களை பிரபா கெட்டியாக பிடித்து கொண்டாராம்.. இப்போது 3 பேரும் ஜெயிலில் உள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications