காமம் தலைக்கேறிய சரண்யா.. யாருக்குமே அடங்கவில்லை.. கடைசியில் செய்த பகீர் காரியம்!
காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல முயன்ற மனைவி தலைமறைவாகி உள்ளார்
சென்னை: காமம் தலைக்கேறிய சரண்யாவை, ஒருத்தராலும் அடக்க முடியவில்லை.. யாருக்கும் அவர் அடங்கவும் இல்லை.. யார் பேச்சையும் கேட்கவும் இல்லை.. இறுதியில் கள்ளக்காதலனுடன் இவர் செய்த பகீர் காரியம் சென்னையையே அதிர வைத்து வருகிறது.
சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்... இவர் ஒரு டிரைவர்.. மனைவி பெயர் சரண்யா.. கல்யாணம் ஆகி 10 வருஷமாகிறது.. 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
தம்பதி சந்தோஷமாகத்தான் இருந்தனர்.. திடீரென குறுக்கே புகுந்தார் வினோத்.. இவர் சுரேஷின் சின்ன வயசு நண்பராம்.. நெருக்கமான பிரண்ட்ஸ் என்பதால் வீட்டுக்கு வந்து போயுள்ளார்.. அப்படி சுரேஷ் வீட்டுக்கு வரும்போதுதான், சரண்யாவுடன் லவ் வந்துவிட்டது.. சரண்யாவும், வினோத்தும், வீட்டிற்குள் பல முறை ஜாலியாக இருந்துள்ளனர்.

தகராறு
விஷயம், சுரேஷூக்கு தெரிந்துவிடவும், கொந்தளித்துவிட்டார். தம்பதி இடையே தகராறு வெடித்துள்ளது.. எவ்வளவோ அட்வைஸ் தந்தும் சரண்யா கேட்கவில்லை.. பலமுறை வினோத்தை கண்டித்தும் அவரும் திருந்தவில்லை... இந்த கள்ள ஜோடி அடித்த கூத்து, இறுதியில் சரண்யா, வினோத், சுரேஷ் என 3 குடும்பத்தாருக்கும் தெரிந்துவிட்டது.. இதனால் எல்லாரும் திரண்டு வந்து சரண்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது... இதில் சரண்யாவை அதிகமாக வெளுத்து வாங்கியது அவரது குடும்பத்தினர்தான்!

அதிர்ச்சி
இவ்வளவு பேர் சேர்ந்து அடித்தும் சரண்யா அடங்கவில்லை.. மாறாக, ஆவேசமும், ஆத்திரமும் அடைந்து, வினோத் வீட்டுக்கே போய் தங்கிவிட்டார்.. பெற்ற குழந்தையையும் தூக்கி செல்லவில்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ், மனைவியை தன்னோடு சேர்த்து வைக்க கோரி டிபி சத்திரம் ஸ்டேஷனில் புகாரும் தந்தார்.

சமாதானம்
இந்நிலையில், திடீரென சரண்யா சுரேஷூக்கு போன் செய்து தனியாக பேச வேண்டும் என்றார்.. மனைவி திருந்திவிட்டார், அதனால் இந்த முறை எப்படியாவது சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்து, ஆசையுடன் சென்றார் சுரேஷ்.. ஆனால், அங்கே சரண்யாவுடன் வினோத்தும் இருந்தார்.. வினோத்துடன் அவரது நண்பர்களும் இருந்தனர்.

அலறல்
மொத்த பேரும் சேர்ந்து சுரேஷை கத்தியால் சரமாரியாக குத்தினர்.. முகம், தலை, கழுத்து, உடம்பெல்லாம் கத்திகுத்து விழுந்தது.. சுரேஷ் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்... அதற்குள் அந்த கும்பல் தப்பிவிட்டது. இது சம்பந்தமாக போலீசார் விசாரித்தும் வருகிறார்கள்.

விசாரணை
இப்போது சுரேஷ் ஆஸ்பத்திரியில் சீரியஸாக இருக்கிறார்.. தற்போது ஒரு வாட்ஸ்அப் வீடியோ ஒன்றை தன் குடும்பத்தினருக்கு அனுப்பி இருக்கிறார்.. அதில், தன்னை கொல்ல வந்தது சரண்யாவும், வினோத்தும்தான் என்றும், தான் இறந்துவிட்டால் அவர்களே அதற்கு காரணம் என்றும் கண்ணீருடன் சொல்லி உள்ளார்.. இந்த வீடியோ அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது... ஆனால், கடைசிவரை மனைவி திருந்தி விடுவார் என்று ரொம்பவும் நம்பினார் சுரேஷ்.. காமம் தலைக்கேறிய சரண்யா திருந்தவே இல்லை!
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications