"நிறுத்துங்க.. ஈவிகேஎஸ் வீடியோ வைரலாகிறது.. ஒரே வன்மம்".. போலீசுக்கு ஓடிய நபர்.. மீண்டும் புகார்
ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது போலீசில் மற்றொரு புகார் தரப்பட்டுள்ளது
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது மீண்டும் ஒரு புகார் போலீஸ் வரை சென்றுள்ளது.. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இளையராஜாவை சரமாரி விமர்சித்திருந்தார்..
ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, "பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறாங்க.. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள்,

கம்யூனிஸ சித்தாந்தம்
இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது. 80 வயசாகுது வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம். இளையராஜா வா? வயது 80க்கு மேல் ஆகப்போகிறது கேட்டால் இளையராஜாவாம்..

அம்பேத்கர்
ஆரம்பத்தில், தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ, பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய்... பக்திமான் ஆகலாம் அதனால் தவறு என்று சொல்ல மாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்கள் விருப்பத்தில் நான் எப்படி தலையிட முடியும்? அம்பேத்கர் அது போல எங்கள் விருப்பத்திற்கு நீ மரியாதை கொடு. அதைவிடுத்து அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்?

ஹிட்லர்
உனக்கு ஒப்பிடவேண்டும் என்று ஆசையிருந்தால், ஹிட்லரோடு மோடியை ஒப்பிடு. முசோலினியோடு மோடியை ஒப்பிடு.. இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவரை ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள்? பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் இந்த இளையராஜா, அவர் மனதிற்குள் சங்கராச்சாரியார் என்று நினைப்பு. சங்கராச்சாரியாரையே ஜெயிலுக்குள் தள்ளிய காலம், இந்தக் காலம்" என்று பேசியிருந்தார். சீனியர் தலைவர் இந்த பேச்சுதான் சர்ச்சையை கிளப்பியது..

ரஞ்சித் ட்வீட்
சாதியை குறிப்பிட்டு பேசியதால், கண்டனங்களும் குவிந்தன.. இவர் மீது பிசிஆர் சட்டம் பாயுமா? என்ற கேள்வியும் எழுந்தது.. இதைத்தான் டைரக்டர் ரஞ்சித் ட்வீட் போட்டு கண்டித்திருந்தார். ஈவிகேஎஸ் பேச்சு "பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது" என்று பா.ரஞ்சித் விமர்சித்திருந்தார்.

மூர்த்தி புகார்
இந்நிலையில் எதிர்பார்த்ததுபோலவே, கடந்த 4 நாட்களுக்கு முன்பு இளங்கோவன் மீது போலீசில் புகார் தரப்பட்டது.. சென்னை அடையாறை சேர்ந்த மூர்த்தி என்பவர். இந்த புகாரை தந்திருந்தார்.. இப்போது இன்னொரு புகார் தரப்பட்டுள்ளது.. சென்னையைச் சேர்ந்தவர் இளமுருகு முத்து. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளங்கோவன் மீது புகார் தந்துள்ளார்.. அதில், ஏப்ரல் 22-ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், இசையமைப்பாளர் இளையராஜா பற்றி, மிகவும் அருவருப்பாக பேசி உள்ளார். உலகமே போற்றும் ஒருவரை, ஜாதி குறித்து இளங்கோவன் பேசி இருப்பது, வன்மத்தின் உச்சம்.
Recommended Video

இளையராஜா
இது அவர் மனதில் கிடக்கும் அழுக்கை காட்டுகிறது. இளங்கோவன் பேசிய அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவுகிறது... அதை உடனடியாக முடக்க வேண்டும்... ஜாதி கலவரத்தை துாண்டும் வகையில் பேசியுள்ள இளங்கோவனை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. அடுத்தடுத்து இளங்கோவன் மீது புகார்கள் வந்துள்ளதால், காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications