ஓகே சொன்ன முதல்வர்.. நடக்க போகும் கிராம சபை கூட்டம்.. சைலண்ட் மோடில் அதிமுக.. களமிறங்கும் கட்சிகள்
சென்னை: திமுக கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் கிராமசபைக்கூட்டத்தை பிரச்சாரமாக பயன்படுத்தினார்.. இந்த முறை திமுக ஆளுங்கட்சியாக அமர்ந்துள்ள நிலையில், அதிமுக அதே பாணியை கையிலெடுக்குமா? மநீம உள்ளிட்ட மற்ற கட்சிகளும் கிராம சபை கூட்டத்தை எந்த அளவுக்கு பயன்படுத்தி கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிராம சபை என்பது நம் நாட்டில் எப்போதிலிருந்தோ இருக்கிறது... ஆனால் அதனை நடைமுறைப்படுத்த எந்த அரசுகளும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை...
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி காலகட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் கொண்டுவரப்பட்டது... கிராமங்களுக்கு முக்கியத்துவமும் அப்போது வழங்கப்பட்டன... அதனால் கிராமங்களும் தங்களின் வலிமையை அப்போது அதிகமாக உணர்ந்தனர். அதன்பிறகு இந்த உள்ளாட்சி அமைப்புகளை யாருமே கையில் எடுக்கவில்லை, சரியாக பயன்படுத்தி கொள்ளவும் இல்லை.

கிராம சபை
இதைத்தான் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கையில் எடுத்தார்.. கிராமங்களை நோக்கி நகரங்கள் ஒரு நாள் வரப்போகிறது என்று கமல் அன்று சொன்னதை யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. ஆனால், மாதிரி கிராம சபை கூட்டங்களுக்கு நேரடியாகவே கமல் சென்று விழிப்புணர்வு ஊட்டினார்... நம்மால் எளிதாக அமல்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை இன்னொருவர் வந்துதான் செய்து முடிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்று எதார்த்தம் நிறைந்த கேள்வியை கமல் அன்று எழுப்பினார்.

கூட்டங்கள்
இதற்கு பிறகுதான் கிராம சபை என்ற பெயர் பரவலாக இளைய சமுதாயத்திடம் தெரிய ஆரம்பித்தது.. கிராம சபை கூட்டங்களுக்கு ஆதரவும் கிடைத்தது.. இதற்கு பிறகுதான் திமுக, இதே பாணியை கையில் எடுத்தது.. குறிப்பாக மக்களை தேர்தலில் கிராம சபை கூட்டங்களை நடத்தி சரியாக பயன்படுத்தி கொண்டது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் கிராம சபை கூட்டங்களை அறிவித்தது..

திமுக
பெருவாரியான ஆதரவை இந்த கூட்டங்களின் மூலம் முக ஸ்டாலின் திரட்டினார்.. எடப்பாடி பழனிசாமி அரசின் முறைகேடுகளை, குறைகளை பகிரங்கமாகவே இந்த கூட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்துரைக்க ஆரம்பித்தார். இதனால் எடப்பாடியே சற்று கலங்கிதான் போனார்.. இதற்கு பிறகுதான், கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு திடீரென சுற்றறிக்கையை அனுப்பியது...

அறிவிப்பு
இந்த அறிவிப்புக்கு ஸ்டாலின் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தார்.. "கிராமசபை என்பது அரசியல் சட்டத்தால் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பு.. கிராமசபை கூட்டங்களை நடத்தாமலிருப்பது ஜனநாயக விரோதம். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி - அராஜக மனப்பான்மையுடன் திமுகவின் "கிராமசபை" கூட்டத்தைத் தடுக்கும் முயற்சி" என்று காட்டமாக கூறியிருந்தார்.

திடீர் ரத்து
இறுதியில் திமுக ஆட்சியை பிடித்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15 அன்று கிராமசபை கூட்டங்களை நடத்தக்கூடாது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இது சர்ச்சையாகவும் வெடித்தது.. "எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது கிராமசபை வேண்டும் என்று போராடினாரே ஸ்டாலின்.. ஆனால், இவர் முதல்வராக ஆனதுமே கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கிறாரே? எடப்பாடிக்கு வந்தால் தக்காளி சட்னி, தனக்கு வந்தால் ரத்தமா?" என்பது போன்ற விவாதங்களும் சோஷியல் மீடியாவில் வெடித்தன.

வரவேற்பு
இப்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2 அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது... தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.. பொதுவாக, குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி, உழைப்பாளர்கள் தினமான மே 1-ம் தேதி , சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் இந்தியா முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்...

முக்கிய அம்சம்
இந்த கூட்டங்களில் கிராம மக்கள் கலந்து கொள்வார்கள்... ஊராட்சியின் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது, மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பது, வரவு-செலவு கணக்குக்கு சமர்ப்பித்தல் போன்ற மிக முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெறும்... மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கக்கூடிய முக்கிய தீர்மானங்களும் இந்த நாளன்று நிறைவேற்றப்படும்..

வரவேற்பு
அதனால்தான், கடந்த சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்களை மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்... கொரோனாவை காட்டி திமுக அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில், அக்டோபர் 2 அன்று கிராமசபை கூட்டங்கள் நடக்க உள்ளது பல்வேறு கட்சிகளை தற்போது நிமிர வைத்து வருகிறது.. "615 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று சில தினங்களுக்கு முன்பு கமலும் வலியுறுத்தியிருந்தார்.

மய்யம்
அதுமட்டுமல்ல, மக்கள் நீதி மய்யத்திற்கு இது முதல் உள்ளாட்சித் தேர்தல்... அதனால், இத்தகைய கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிக வலுவானவை என்பதால், அந்த தீர்மானங்களை பொதுவெளியில் வைக்கவும், கூட்டங்களை வீடியோ பதிவு செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று கமல் மய்ய உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியும் இருந்தார். எனவே, நிச்சயம் நடக்க போகும் கிராம சபை கூட்டங்களை மநீம சரியாகவே பயன்படுத்தி கொள்ளும் என்று தெரிகிறது.

அதிமுக
ஆனால், அக்-2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த அரசின் அனுமதியை அதிமுக வரவேற்கிறதா? இல்லையா? அன்றைய தினம் தங்கள் கட்சி சார்பான கூட்டத்தை நடத்த போகிறதா? இல்லையா என்று தெரியவில்லை.. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கிராம சபை கூட்டங்களை அதிமுக இதுவரை பெரிதாக நடத்தியது போன்றும் தெரியவில்லை.. இப்போது வலுவான எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், திமுக அரசை விடாமல் டேமேஜ் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ள நிலையில், இந்த கிராம சபை கூட்டங்களை எடப்பாடி பழனிசாமி எப்படி கையாள போகிறார் என்பதும் எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications