Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விக்கெட்" விழுந்தாச்சு.. அதிமுக "சீனியர்" அங்கே இணைகிறாராம்.. எடப்பாடியே எதிர்பார்க்கலை.. யார் அவர்

அதிமுகவின் சீனியர் ஒருவர் சசிகலா பக்கம் தாவ இருப்பதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏற்கனவே அதிமுகவில் புயல் அடித்து கொண்டிருந்தால், சசிகலா தரப்பில் இருந்து, "வெடிகுண்டு" ஒன்று டமார் என்று விழுந்துள்ளது..!

சசிகலா நினைத்திருந்தால் எப்போதோ அவர் பாணி அரசியலை கையில் எடுத்திருக்கலாம்.. ஆனாலும் அடக்கி வாசித்தார்.. வழக்கமான அணுகுமுறையை கையாளாமல், மிக பொறுமையாக கையாண்டார்.

அதனால்தான், எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்த, ஒருவருட காலம் காத்திருக்கும் சூழலுக்கு ஆளானார்.. இதற்கான சமாதான தூது படலமும் நடந்து கொண்டுதான் இருந்தது.

பாஜக

பாஜக

மற்றொருபக்கம், பாஜக மேலிடத்தை சரிக்கட்டும் பணியும் நடந்து கொண்டு இருந்தது.. இதில் மேலிடம் ஓரளவுக்கு இறங்கி வந்ததாக தெரிகிறது.. சசிகலாவின் சமீபத்திய பேட்டிகளை பார்த்தால், அதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும், 'சசிகலா வந்தால் பாஜக ஆதரிக்கும்" என்ற நேற்றைய தினம் நயினார் நாகேந்திரன், சொன்னதையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்துவிட முடியாது.

நயினார்

நயினார்

நயினார் பேசியது அவரது சொந்த கருத்தா? என்று தெரியவில்லை.. ஆனால், எந்த ஒரு முடிவாக இருந்தாலும், அதை தலைமை கூடி முடிவெடுக்கும் என்று அண்ணாமலை விளக்கம் தந்திருந்தார்.. இதற்கு நடுவில் அதிமுகவின் சீனியர் பொன்னையன், பாஜகவையே அட்டாக் செய்து பேசியது, மிகப்பெரிய அதிர்வலையை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தியது.. பொன்னையன் ஏன் இப்படி பேசினார்? யாருடைய தூண்டுதலில் இப்படி பேசினார்? என்ற சந்தேகங்களும் நிலவி வருகின்றன.,

முனுசாமி

முனுசாமி

ஒருவேளை, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக செய்ய வேண்டியதை எல்லாம் பாஜக செய்து கொண்டிருப்பதால் வந்த ஆவேசமா? அல்லது தனக்கு எம்பி சீட் கிடைக்காத விரக்தியில் பொன்னையன் வெளிப்படுத்திய வேதனை கருத்துக்களா? தெரியவில்லை.. ஆனால், எடப்பாடி, ஓபிஎஸ், முனுசாமி போன்றோரே பாஜக பற்றி அடக்கி வாசித்து வரும்போது, பொன்னையன் பேசியது மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.

சிவி சண்முகம்

சிவி சண்முகம்

இப்படி களம் சூடாகி தகித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சசிகலா பற்றின ஒரு தகவல் பரபரத்து வருகிறது.. அதிமுகவில் ஒரு சீனியர் மாஜியை தட்டி தூக்க போகிறாராம்.. அதாவது, 2 ராஜ்யசபா இடங்களை கைப்பற்ற அதிமுக சீனியர்கள் பலரும் மோதினார்கள்.. சி.வி.சண்முகத்துக்கும் தர்மருக்கும் இந்த வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால், சீனியர்கள் பலருக்கும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. இதை பயன்படுத்தி அதிருப்தியாளர்களிடம் சசிகலாவின் அறிவுரைபடி சசிகலா தரப்பினர் பேசி வருகிறார்கள். இதில் முதல் கட்டமாக சிக்கியிருப்பவர்தான் அந்த சீனியராம்..

ஹாட் டாபிக்

ஹாட் டாபிக்

இவர் விரைவில் சசிகலாவை சந்திக்கவிருக்கிறார்.. அந்த சந்திப்புக்கு பிறகு, சசிகலாவின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்கிறார்கள் சசி தரப்பினர். இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சசிகலா ஒரு பேட்டி தந்திருந்தார்.. "அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தன்னை சந்தித்து பேசிவருகிறார்கள், தொடர்பில்தான் உள்ளார்கள்" என்றார்.. அப்போதே அதிமுக மேலிடம் கலங்கியது.. சசிகலா ஏன் அப்படி சொன்னார்? யாரை சொன்னார்? என்ற குழப்பம் ஏற்பட்டு, அதனால், அதிருப்தியாளர்களை கண்காணிக்கவும், அவர்களை சமாதானப்படுத்தவும் எடப்பாடி தரப்பு முயற்சியில் இறங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.

விக்கெட்

விக்கெட்

அதுமட்டுமல்ல, அதிமுகவின் 25 எம்எல்ஏக்களை பேரை தன் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் சசிகலா களமிறங்கியதாக தகவல்கள் கசியவும், அதிமுக கூடாரமே வெலவெலத்து போய்விட்டது.. இப்போது ஒரு விக்கெட் நிஜமாகவே அதிமுகவில் இருந்து விழ போகிறதாக செய்திகள் வெளியாகி வருவதால், இந்த அதிரடிகளை, எடப்பாடி பழனிசாமி சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார்.. சசிகலாவின் ராஜதந்திரம் கிட்டத்தட்ட ஒர்க் அவுட் கிகிவிட்டதாகவே கருதப்படுகிறது.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+