எடப்பாடிக்கு எதிராக ரெய்டு? 2024, 2026 இரண்டு தேர்தலும் காலி.. அதிமுகவை அலறடிக்கும் டெல்லி வார்னிங்
சென்னை: 2024ல் எடப்பாடி மோசமாக சிக்கிக்கொண்டார், அதனால் 2024ல் எடப்பாடி தோல்வி அடைவார், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்ததில் இருந்தே வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. லோக்சபா தேர்தல் தோல்வி , இடைத்தேர்தல் தோல்விகள், சட்டசபை தோல்வி, உள்ளாட்சி, நகராட்சி தோல்வி என்று வரிசையாக தோல்விகளை சந்தித்தது.
கட்சியின் தோல்விக்கு இரட்டை தலைமையும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார். அவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனபின் மிகப்பெரிய மாநாட்டை முதல் கட்டமாக மதுரையில் நடத்தி உள்ளார்.
தென் மண்டலத்தில் எடப்பாடி பவரை காட்டும் வகையில் இந்த மாநாட்டை நடத்தினாலும் தென் மண்டலத்தில் அதிமுக வெல்ல சான்ஸ் குறைவு, மற்ற மண்டலத்திலும் அவர் வீழ்ச்சியை சந்திப்பார் என்று என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பேட்டி; அதில், பாஜக கூட்டணியில் இருந்து வந்தாலும் எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க மாட்டார். அவர் இந்துக்களை பகைக்க விரும்ப மாட்டார். அதேபோல் ஐடி ரெய்டு, அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து பேச மாட்டார். பாஜகவை எதிர்க்காமல் அவர் திமுகவை மட்டுமே எதிர்ப்பார். அதனால் ஐடி ரெய்டு தொடங்கி அமலாக்கத்துறை ரெய்டு வரை எதுவும் எடப்பாடிக்கு எதிராக வராது. எடப்பாடி அப்படியே போகட்டும் விடுவோம். அவரை பற்றி பேச வேண்டாம் என்று அனுப்பி விடுவார்கள்.
அதனால் அவருக்கு எதிராக ரெய்டு வராது. அதேபோல் தென் மண்டலத்தில் எடப்பாடிக்கு பெரிய பலம் இல்லை. வன்னியர் இடஒதுக்கீட்டையும் கூட அவர் முழுமையாக செய்யவில்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கூட அவர் முயற்சி செய்யவில்லை. இதை ராமதாஸ் கையில் எடுப்பார். ஜாதிவாரி கணக்கெடுப்பை ராமதாஸ் கையில் எடுப்பார் . அப்போது எடப்பாடிக்கு மேலும் நெருக்கடி ஏற்படும். வன்னியர் தரப்பில் இருந்தும் எடப்பாடிக்கு நெருக்கடி ஏற்படும்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது. அவர் மீண்டும் முதல்வராகவே முடியாது. அதுதான் உண்மை. எடப்பாடி 10.5 சதவிகிதம் கொடுத்ததால் பல சமூகங்கள் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளன. அதையும் கூட முழுமையாக கொடுக்காத காரணத்தால் வன்னியர்களும் கூட எடப்பாடிக்கு ஆதரவு தரவில்லை. இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசும் ராமதாஸ்தான் இதில் ஸ்கோர் செய்வார். மற்றபடி எடப்பாடிக்கு இரண்டு பக்கமும் சிக்கலாக மாறும்.
எடப்பாடிக்கு தோல்விதான்: தனது தொகுதியில் வெல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி செய்தது அதிமுகவிற்கே எதிராக திரும்பி உள்ளது. அவரின் தற்போதைய செயல்பாடுகள் மேலும் முக்குலத்தோர் இடையே கோபத்தை ஏற்படுத்தும். அவர் முக்குலத்தோரை மதிக்கவில்லை. இப்படியே தொடர்ந்தால் முக்குலதோர் எடப்பாடிக்கு எதிராக திரும்புவார்கள். 2024ல் எடப்பாடி மோசமாக சிக்கிக்கொண்டார். அதனால் 2024ல் எடப்பாடி தோல்வி அடைவார். என்றால் ஸ்டாலின் பக்கம் ராகுல் காந்தி, காங்கிரஸ் இருக்கிறது.

இன்னொரு பக்கம் பாஜக பக்கம் மோடி இருக்கிறார். அவர்கள் மோடியை முன்னிறுத்துவார்கள். ஜெயலலிதாவை ஆதரித்த சாப்ட் இந்துத்துவா நிர்வாகிகள் பாஜக பக்கம் செல்வார்கள். அவர்கள் எடப்பாடியை ஆதரிக்க மாட்டார்கள். அண்ணாமலை மக்கள் செல்வார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமி இருக்கிற பவரை இழப்பார். அதனால் 2026 சட்டசபை தேர்தலிலும் அவர் வீழ்ச்சி அடைவார். கருணாநிதி, ஜெயலலிதா போல எடப்பாடி பழனிசாமி பவர்புல் லீடர் இல்லை. இந்த சர்வேதான் நடக்கும் என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications