அதிமுக பொதுக்குழுவிற்கு தடை இல்லை.. விதிகளை திருத்தவும் தடையில்லை- சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
சென்னை : அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கவும், பொதுக்குழுவிற்கு தடை கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாளை அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வானகரத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார். ஆனால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடத்துவதில் திட்டவட்டமாக இருக்கிறார்.

வழக்கு
இந்த நிலையில் பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்ற அவசர மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை விசாரிக்க உள்ளது அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதிமுகவில் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் நியமிக்கப்பட்டனர்.

எதிர்ப்பு
ஆனால் அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த மனுவில் அதிமுகவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை பறிக்க கூடாது. அது கட்சி விதிக்கு எதிரானது. அவருக்கே உச்ச பட்ச அதிகாரமே உள்ளது.

நீக்க வேண்டும்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைக்கு விடுத்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இதற்கு இடையில் அதிமுக பொதுக்குழு கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த வழக்குப்படி பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் கூட்ட முடியாது. பொது செயலாளர் மட்டுமே கூட்ட முடியும்.
Recommended Video

கூடுதல் மனு
எனவே இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்கக் கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளனர். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாருக்கு மட்டுமே உள்ளதாக அவர்கள் மனுவில் கூறி இருந்தனர். இந்த நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கை இன்று அவசரமாக விசாரிக்க ஒப்புக்கொண்டார். நாளை அதிமுக பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் அதற்கு எதிரான வழக்கு இன்று விசாரிக்கப்பட உள்ளது.

சற்று நேரத்தில் தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை காரசாரமான வாதங்களோடு முடிவடைந்த நிலையில், சற்று நேரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

உத்தரவு
சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார். அதன்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். பொதுக்குழுவில் கட்சியின் சட்ட விதிகளை திருத்தவும் தடையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications