ஷாக்கான பாஜக தொண்டர்கள்.. அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடையாது.. டெல்லி பாஜக இறுதி முடிவு
சென்னை: இன்று பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் அதில் உண்மையில்லை, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாது என்று உறுதியான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அவருக்கு இன்று என்டிஏ தலைவர்களின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதே சமயம் அவருக்கு இன்று சென்ற அழைப்பு சாதாரண மரியாதை அழைப்புதான்.. அவருக்கு அமைச்சரவைக்கான டீ பார்ட்டி கொடுக்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை 118068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 568200 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக அண்ணாமலை 450132 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சிங்கை ராமசந்திரன் 236490 வாக்குகள் பெற்றுள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதி இந்தியாவில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதி. இந்திய அளவில் கூகுள் தொடங்கி டிவி வரை பல இடங்களில் இந்த தொகுதி பற்றி தேடப்பட்டது. ஊடகங்களில் இருக்கும் எஸ்இஓ இன்ஜினியர்களுக்கு தெரியும்.. இந்த தொகுதி எவ்வளவு முக்கியமாக இருந்தது என்று. அதற்கு காரணம் அண்ணாமலை.
அண்ணாமலை தமிழ்நாட்டை தாண்டி தனக்கு என்று உருவாக்கிய பிம்பம் பல்வால் தேவனுக்கு பின் இருக்கும் பாகுபலி சிலை போன்றது. தேசிய அளவில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்துவிட்டேன் என்று அண்ணாமலை சென்ற இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் அவரின் கோவை தொகுதியிலேயே பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது,
தோல்வி: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக மிக மோசமாக செயல்பட்ட நிலையில் அந்த கட்சிக்கு எதிராக கடுமையான சில பிரஷர் வைக்கப்பட்டு வருகிறதாம். முக்கியமாக பாஜக தேசிய தலைவர் நட்டா, அமித் ஷா ஆகியோருக்கும் கடுமையான பிரஷர் கொடுக்கப்படுகிறதாம்.
அதன்படி பஞ்சாப்பில் பாஜக ஜீரோ எடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் சரியாக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் ஜீரோ எடுத்துள்ளது. இதனால் இந்த 3 மாநிலங்களில் பாஜக தோல்வி காரணமாக மாநில தலைவர்களை மாற்றும் எண்ணம் டெல்லி பாஜகவிற்கு உள்ளதாம்.
அண்ணாமலை உட்பட பலருக்கு ராஜினாமா நெருக்கடி கொடுக்கப்படலாம் என்கிறார்கள். இதை மடைமாற்றவே அண்ணாமலை 2026 முதல்வர் என்று பேச தொடங்கிவிட்டார் என்கிறார்கள். இந்த நிலையில்தான் அண்ணாமலை உட்பட பலரின் பதவி காலி ஆகலாம் என்கிறார்கள்.
அதோடு இல்லாமல் ஜேபி நட்டாவின் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பல மாநில தலைவர்கள், தேசிய தலைவர் ஜே பி நட்டா மாற்றப்படலாம். அமித் ஷாவிற்கும் பிரஷர் வரும். அமைச்சர் பொறுப்போடு நிறுத்த வேண்டும், தேர்தல் வியூகங்களை வகுக்க கூடாது என்று பிரஷர் வர உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சுமுகமாக தீர்வு: இதை எல்லாம் சுமுகமாக தீர்க்க பாஜக தலைவர் அண்ணாமலையை ராஜ்ய சபா வழியாக அமைச்சராக்கும் எண்ணம் தேசிய பாஜக தலைமைக்கு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் கடைசியில் பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் அதில் உண்மையில்லை, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாது என்று உறுதியான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அமைச்சரவை: பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். அதோடு இன்று முதல் கட்ட அமைச்சரவை பதவி ஏற்பும் இருக்கும். இன்று கிட்டத்தட்ட 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள்.
பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட உள்ளன. இன்று முழு அமைச்சர்களும் பதவியேற்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள். முழு அமைச்சர்களின் பலம் 78 முதல் 81 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இன்று பாஜக மற்றும் சில கூட்டணி கட்சிகளின் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். இன்று இரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் நரேந்திர மோடி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இன்று நாடு முழுக்க அனைவரின் பார்வையும் மோடியின் அமைச்சரவை பெர்த் ஒதுக்கீட்டில் உள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரம் ஆகிய முக்கியமான இலாகாக்களை வைத்திருப்பவர்கள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் ஆக போகும் எம்பிக்கள் பதவி ஏற்பார்கள்.
இந்த முக்கிய துறைகள் அனைத்தும் பாஜக வசம் தொடர்ந்து இருக்கும். எஃகு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் நிலக்கரி போன்ற முக்கியமான அமைச்சரவையை கைப்பற்ற போகும் அமைச்சர்களும் இன்று பதவி ஏற்க வாய்ப்புகள் உள்ளன.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications