தவறுங்க அண்ணே.. தூது போன 4 கட்சிகள்.. மீண்டும் சேரும் அதிமுக - பாஜக கூட்டணி? என்னங்க நடக்குது?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் அந்த கூட்டணியில் இருந்த சிறிய காட்சிகள் தற்போது எங்கே செல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாம். இதனால் வரும் நாட்களில் பல அரசியல் திருப்பங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுக பாஜக இடையிலான கூட்டணி நேற்று முடிவிற்கு வந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து ஆதாரமற்ற செய்திகளை பேசினார். அவர் பேசியதற்கு எதற்கும் ஆதாரம் இல்லை என்பதால் அதிமுக தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த விமர்சனம் காரணமாக பாஜக அதிமுக தலைவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி விஸ்வரூபம் எடுத்தது. சிறிய தீ பொறி ஒன்று காட்டு தீயாக மாறுவது போல அப்படியே மாற்றம் அடைந்தது. இந்த மோதலை சமாதானம் செய்ய முதலில் டெல்லி பாஜக தலைவர்கள் முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
டெல்லி பாஜக தலைவர்கள் சொன்ன கருத்துக்களை அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து தமிழ்நாட்டில் இருந்து அதிமுக தலைவர்கள் அமித் ஷாவை சந்தித்து சமாதானம் பேச முயன்றனர். ஆனால் அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை.
அதன்பின் பாஜக தேசிய தலைவர் ஜெ பி நட்டா, பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்தனர். அவர்களிடம் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால் அவர் இருக்கும் வரை கூட்டணி சரியாக இருக்காது. அவர் இருக்கிற வரை கூட்டணியில் ஒற்றுமை இருக்காது. அவர் கூட்டணி கட்சி தலைவர்களையே தவறாக பேசி வருகிறார், என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை டெல்லி ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் விளைவாக அதிமுக கடும் கோபம் அடைந்தது. அதன்பின்பும் அண்ணாமலை விடாமல் தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வந்தார்.
முடிவில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரை ஆலோசனை செய்ய அழைத்து இருந்தார். இந்த ஆலோசனையின் முடிவில் பாஜக - அதிமுக கூட்டணியை முறித்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து 2024 லோக்சபா தேர்தலிலும் கூட்டணி இல்லை. அதிமுக தனி கூட்டணி அமைக்கும் என்று கூறியுள்ளனர். இதனால் பாஜக - அதிமுகவின் தமிழ்நாடு என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யார் பக்கம் செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ஆகியவை எங்கே செல்வது என்ற முடிவை எடுக்கவில்லை.

புரட்சி பாரத் பூவை ஜெகன்மூர்த்தி அதிமுகவுடனும், இமகமுக தலைவர் தேவநாதன் பாஜகவுடனும் செல்ல இருக்கிறாராம். இது போக ஐஜேகே எங்கே செல்வது என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் பாஜக - அதிமுக கூட்டணியை நம்பித்தான் நாங்கள் வந்தோம். இப்போது இவர்கள் பிரிந்தால் எங்களுக்குத்தான் கஷ்டம்.
அதனால் இவர்கள் மீண்டும் இணைய வேண்டும். அதுதான் எல்லோருக்கும் நல்லது என்று இந்த கூட்டணி கட்சிகள் பேசி வருகிறார்களாம். அதோடு எடப்பாடி அண்ணே நீங்க பண்ணது சரியில்லை என்றும் வாதம் வைத்து வருகிறார்களாம்.
அதோடு இல்லாமல், 4 கட்சிகள் இது தொடர்பாக இரண்டு தரப்பிலும் சமாதான முயற்சிகளை செய்து வருகிறதாம். அதோடு இல்லாமல், இதில் அதிமுக தரப்பில் சிலர் மீண்டும் கூட்டணி இணைய ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் சில கண்டிஷன்களை போட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இவர்களின் சமாதான முயற்சியின் பெயரில் மீண்டும் அதிமுக - பாஜக இந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications