கொளத்தூரில் மலர்கிறதா "தாமரை".. ஸ்டாலினையே குறி வைக்கும் "தலைவர்".. திமுகவை விரட்டி துரத்தும் பாஜக
கொளத்தூரில் அண்ணாமலை உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறாரா
சென்னை: திமுகவுக்கு ஷாக் தருவதற்காக தமிழக பாஜக தயாராகி கொண்டிருக்கிறது.. இதற்கெல்லாம் என்ன காரணம்?
Recommended Video
ஒருபக்கம் அதிமுகவில் புயல் அடித்து கொண்டிருக்கிறது.. அந்த கட்சி யார் கையில் போக போகிறது என்று தெரியாத நிலைமை உள்ளது..
ஆனால், தமிழக பாஜகவோ, திமுகவை கேப் விடாமல் விமர்சித்து கொண்டிருக்கிறது.. திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி அதன்மூலம் தங்களை நிலைநாட்டிக் கொள்ளவே ஆர்வம் அதிகமாக காட்டி கொண்டு வருகிறது தமிழக பாஜக..

வீக்னஸ்
இதற்கு சமீபகால மாநில தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகளே சாட்சியாக விளங்கி கொண்டிருக்கின்றன.. போராட்டம் அறிவிப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது, மிரட்டுவது, சவால் விடுவது, என பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார். வழக்கமாக, இதையெல்லாம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகதான் செய்ய வேண்டும் என்றாலும், அதிமுகவின் வீக்னஸை பயன்படுத்தி, பாஜக தன்னுடைய அரசியலை செய்ய ஆரம்பித்துள்ளது.. அந்தவகையில், அந்தந்த சமயங்களில் நடக்கும் நிகழ்வுகளை கொண்டு பாஜக ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கம்.

வாக்குறுதிகள்
பள்ளி சிறுமி மரணம், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்டவைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வந்த நிலையில், இப்போதைக்கு, பெரிதாக காரணம் இல்லாத நிலையில், திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும், ஆட்சி அமைத்து ஓராண்டிற்குப் பின்னரும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை அதிரடியாக அறிவித்துள்ளது... அனைத்து மாவட்டங்களிலும் திமுக அரசைக் கண்டித்து வரும் வரும் 5ம் தேதி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு பாஜக நிர்வாகிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

கொளத்தூர்
அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.. ஆனால், எந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பதுதான் சிக்கலாக வந்துள்ளது.. காரணம், ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிக்கு குறி வைத்துள்ளாராம் அண்ணாமலை.. அதற்கான அனுமதியை காவல்துறையிடம் கேட்டுள்ளது பாஜக. ஆனால், கொளத்தூரில் அனுமதிக்க முடியாது என கறாராக சொல்லிவிட்டதாம் போலீஸ்... அதனால், வடசென்னை மேற்கு மாவட்ட பாஜகவுக்கு எந்த இடத்தை போலீஸ் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.

வள்ளுவர் கோட்டம்
எனினும், கொளத்தூர் பகுதியில்தான் நடத்தி விடவேண்டும் என்பதில் உறுதி காட்டுகிறார் அண்ணாமலை. ஆனால், போலீஸ் மறுத்துள்ள நிலையில் அதனை எப்படி உடைப்பது என புலம்பி வருகிறார்கள் மேற்கு மாவட்ட பாஜகவினர்... பொதுவாக, சென்னையை பொறுத்தவரை வள்ளுவர் கோட்டம், கலெக்டர் அலுவலகம் அருகில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆகிய இடங்களில்தான் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும்... ஆனால், பாஜக எல்லா இடங்களிலும் போராட்டம் நடத்துவதால் கொளத்தூர் தொகுதியை கேட்டுள்ளதாக தெரிகிறது..

தாமரை
திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்று பாஜகவினர் சொல்லி உள்ளதால், கொளத்தூரில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுமா? போலீசாரின் தடையை அண்ணாமலை மீறுவாரா? என்ற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.. கடந்த முறை சட்டமன்ற தேர்தலின்போதே, அண்ணாமலையை கொளத்தூரில் நிறுத்த பாஜக மேலிடம் யோசித்து வருவதாக ஒரு தகவல் வெளியானது.. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.. ஏற்கனவே தொகுதி மிஸ் ஆன நிலையில், மீண்டும் கொளத்தூரை குறி வைத்துள்ளார் அண்ணாமலை.. போலீசாரின் அனுமதி மறுப்பையும் மீறி, பாஜகவின் ஆர்ப்பாட்டத்தினால், கொளத்தூரில் தாமரை மலருமா? பார்ப்போம்..!
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications