Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்கே இடிக்குதே? முதல்முதலாக இங்கே பாஜக தலையில் விழுந்த "இடி"! மலருகின்றதா தாமரை? நாளைக்கு ரிசல்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை ரிசல்ட் வர உள்ள நிலையில், பாஜகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் கிடைக்கக்கூடிய தொகுதிகள் எவ்வளவு? என்பது குறித்த ஆர்வம் பெருகி வருகிறது. அத்துடன் எக்ஸிட் போல்கள் தந்துள்ள தாக்கங்கள் என்னென்ன என்பது குறித்தும் அலசல்கள் கிளம்பியிருக்கின்றன.

கடந்த 2 நாட்களாகவே, எக்ஸிட் போல்கள் தந்த ரிசல்ட்கள்தான், நாடு முழுவதும் ஒரே பேச்சாக இருக்கிறது.. தமிழகத்தில் திமுகவே வெற்றி பெறும் என்று பெரும்பாலும் கணிக்கப்பட்டு வரும்நிலையில், மத்தியில் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் கணிப்புகள் சொல்லப்பட்டுள்ளன.. அப்படியானால், இதில் 3வது இடத்தையே இந்தியா கூட்டணி பெறும் என்றும் கூறப்படுகிறது.

lok sabha election result 2024 BJP southern states Tamil Nadu BJP 2024

கணிப்புகள்: பெரும்பாலும் கருத்துக்கணிப்புகள் என்பவை அந்த அளவுக்கு துல்லியமாக இருக்க போவதில்லை என்றாலும், வெளியாகியிருக்கும் எக்ஸிட் போல்களில் 2 விதமான விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது.

பாஜகவுக்கு பெரும்பான்மை என்பதோடு, மேற்கிலும் கிழக்கிலும் பாஜகவுக்கு கணிசமான ஆதரவு கிடைத்திருப்பதை இந்த எக்ஸிட் போல்கள் உறுதி செய்திருக்கின்றன.. அதுவும், எவ்வளவுதான் முட்டிமோதினாலும், பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை என்று கருதப்படும் தென் மாநிலங்களில், ஆதரவு நிலவரம் சூழ்ந்துள்ளதையும் இந்த கணிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

ஆந்திரா: குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில், தேஜகூ மொத்தமள்ள 25 இடங்களில் 18 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.. இங்கு சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்து நடப்பதால், ஆட்சி மாற்றத்துக்கான சான்ஸ் நிறையவே இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்..

அதேபோல கர்நாடகாவை எடுத்துக் கொண்டால், பாஜகவின் பலமே அதிகமாக எழும் என்று தெரிகிறது.. இத்தனைக்கும் தற்போது, காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோதிலும், பிரஜ்வல்-ன் "கசமுசா" வீடியோவை மக்கள் முன்வைத்து அரசியல் செய்தபோதும், பாஜகவுக்கான ஆதரவு ஓரளவு எகிறி இருப்பதாகவே எக்ஸிட் போல் முடிவுகள் சொல்லியிருக்கின்றன.. இன்னும் சொல்லப்போனால், தென் மாநிலங்களிலேயே அதிக நம்பிக்கையை இந்த கர்நாடகம்தான் பாஜகவுக்கு தந்துவருகிறதாம்.

தெலுங்கானா:
தெலங்கானாவிலும் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக செக் வைத்துவிடும் போலவே தெரிகிறது.. காரணம், 17 தொகுதிகளில் மெஜாரிட்டி பாஜகவுக்கு காற்று வீசியிருக்கிறது..

அவ்வளவுஏன்? ஒருபோதும் திராவிட மண்ணில் கால் ஊன்ற முடியாது என்று பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், இப்போது அந்த கட்சிக்கு 3 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளதை பார்த்து பாஜகவினரே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். தாமரை மலரவே மலராது என்று முழங்கப்பட்டு வந்த கேரளாவிலும் பாஜக அக்கவுண்ட் ஓபன் ஆகிவிடும் போல தெரிகிறது.

வியப்பு: தென்னிந்தியாவில் இந்த முறை பாஜகவே அதிக இடங்களில் வெல்லும் என்று பிரதமர் முதல் அனைத்து பாஜக தலைவர்களும் சொல்லி வந்த நிலையில், எக்சிட் போல் முடிவுகளும் இதையே சொல்லியிருப்பது வியப்பை கூட்டி வருகிறது.

ஆனால், அதேசமயம், இதே எக்ஸிட் போல் கணக்கின்படியே எடுத்துக் கொண்டாலும், முதல் முறையாக ஒரு கருத்து கணிப்பின் முடிவு என்பது இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

தேசபந்து:
தேசபந்து நாளிதழ் வெளியிட்ட கணிப்பின்படி இந்தியா கூட்டணிக்கு 255 முதல் 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மத்தியில் ஆட்சியை பிடிக்க 273 தொகுதிகள் தேவை என்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேசமயம், பாஜகவின் என்டிஏ கூட்டணி 207 முதல் 241 தொகுதிகளை மட்டுமே பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது, பாஜகவினருக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியையும், இந்தியா கூட்டணியினருக்கு புதிய எழுச்சியையும் தந்து வருகிறதாம். இதுகுறித்த கணிப்புகளை சோஷியல் மீடியாவிலும் அதிகமாக பதிவிட்டு வருகிறார்களாம்.

எதிர்பார்ப்பு: ஆக, எக்ஸிட் போல் முடிவுகள், பாஜக + இந்தியா கூட்டணி என இரு தரப்புக்குமே, 2 விதமான மகிழ்ச்சியை தந்தாலும், நல்லவிதமான தாக்கத்தையே இரு தரப்பிலும் ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் நுணுக்கர்கள்.. எனினும் யாருக்கு வெற்றி என்பது நாளை தெரிந்துவிடும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+